சக்தி மாலை அணிந்து கொள்பவர்கள் அனைவரும் சக்தி மாலை அணிந்து இருமுடியைக் கட்டி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
இருமுடி கட்டும் பணியிலுள்ள தொண்டர்களின் மடியின் மீது செவ்வாடை விரித்து, அதன் மேல் இருமுடியை வைத்து பையுள்ள பகுதியில் இருபுறமும் முறையே மையப் பகுதியில் மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்துப் பின்புறம், மையப் பகுதியிலும் மஞ்சள், குங்குமப் பொட்டு வைக்க வேண்டும்
முதலில் அபிஷேகப் பொருட்களை ஒரு பையில் வைத்து அதன் வாயை முடிச்சிட வேண்டும். பின்னர் அரிசியை மற்றொரு பகுதிப் பையில் வைத்து அதன் வாயை முடிச்சிட்டு இரண்டு முடிச்சிற்கும் மஞ்சள், குங்குமம் பொட்டிட வேண்டும்.
இருமுடியில்வைக்கும் பொருட்கள்:
மஞ்சள்தூள், குங்குமம், சந்தனம், தேங்காய் கற்கண்டு, கற்பூரம் எலுமிச்சம்பழம்
பின் முடியில்:
பச்சரிசி ஒரு கிலோ
சக்தி மாலை அணியும் முறைகள்:
(முதல் ஒன்பது மாலைகளூக்கானது)
1.சக்தி மாலை அணிந்து கொள்ள வருபவர்கள் செவ்வாடையுடன் அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப் படத்திற்கு முன்பு அமர்ந்து கூட்டு வழிபாடு நடத்த வேண்டும். வழிபாடு முடிந்த பின்பு வழிபாட்டு மன்றத்திலோ, அல்லது சக்தியின் ஆலயத்திலோ கிழக்குத் திசையை நோக்கியவாறு வரிசையாக நிற்க வேண்டும்.
2. மன்றத்தின் தலைவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர் குருவாக வரிசையின் வலதுகோடியில் நின்றுகொள்ள வேண்டும்.
3.குருவாக இருப்பவர் அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப்படத்திற்குக் கற்பூர தீப ஆராதனை செய்ய வேண்டும். ஆராதனைக்குப்பின் அன்னை ஆதிபராசக்திக்கு எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
4.கற்பூரம் ஏற்றப்பட்ட தட்டுடன் குருவாக நியமிக்கப்பட்டவர். அன்னை ஆதிபராசக்தி திருவுருவப் படத்தினையும், மாலை அணிந்து கொள்ள மலர்களைச் சுற்றியும் ஒருமுறை வலம் வருதல் வேண்டும். மன்றத்தில் அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப் படத்தினை சுற்றிவர இயலாத வகையில் அமைக்கப்பட்டிருந்தால் அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப் படத்திற்கு முன்பு தன்னைத்தானே ஒருமுறை வலம் வருதல் வேண்டும்.
5.அடுத்து குரு மாலை அணிந்து கொள்பவர்களுக்கு தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பின்வரும் முறைப்படிச் செய்ய வேண்டும்.
முதலில் கற்பூர தீப ஆராதனை செய்ய வேண்டும். பின் எலுமிச்சம் பழம் பிழிதல் வேண்டும். ஒவ்வொருவர் நெற்றியிலும் கீழிருந்து மேலாக மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றால் பொட்டு வைக்க வேண்டும்.இரண்டு பாதங்களுக்கும் சந்தனம், மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பின் மாலை அணிந்து கொள்ள இருப்போருக்குக் கண்னேறு(கண் திருஷ்டி) பாடாத வகையில் எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழத்து கற்பூர தீப ஆராதனை செய்ய வேண்டும்.
6.குரு அனைவரும் மேற்கூறிய முறைப்படிச் செய்தபின் சக்தி மாலை அணிந்து கொள்ளப வர்களுக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
7.குரு அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப் படத்திற்கு வலது புறமாக வந்து அன்னை ஆதிபராசக்தி நோக்கியிருக்கும் திசை நோக்கி நிற்க்க வேண்டும்.
8. வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இனைந்து அன்னை ஆதிபராசக்திக்கு கற்பூர தீப ஆராதனை காட்டுதல் வேண்டும்.
9. அன்னை ஆதிபராசக்திக்கு ஒருவர் எலுமிச்சம் பழம் பிழிய வேண்டும்.
10. கற்பூரத் தட்டுடன் வரிசையில் உள்ளவர்கள் அனைவரும் அன்னை ஆதிபராசக்தியையும், குருவை வலம் வருதல் வேண்டும்.
11.குருவிற்கு யாரேனும் ஒருவர் கற்பூர தீப ஆராதனை செய்து ஒருவர் எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும். பின்னர் வரிசையாக ஒவ்வொருவரும் தனித்தனியே வந்து அவரின் நெற்றிக்கு, பாதங்களுக்கும் முறைப்படி பொட்டு வைக்க வேண்டும்.
12. மாலை அணிந்து கொள்பவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து குருவிற்கு கற்பூர தீப ஆராதனை காட்டிவிட்டு பின்பு அவர்களில் எவரேனும் ஒருவர் எலுமிச்சம் பழம் பிழிதல் வேண்டும். பூசணிக்காய் திருஷ்டி கழிக்க வேண்டும்.
13.அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப் படத்திற்கு முன்பு குருவினுடைய இருமுடியும், மாலையும் தனித்தட்டில் வைக்கப்பட வேண்டும். அந்த தட்டிற்குக் கற்பூர தீப ஆராதனை காட்டி எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும். பின் அனைவரும் குருவின் இருமுடியையும், மாலையும் தொட்டு வணங்க வேண்டும்.
14.குரு அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப் படத்திற்கு முன்பு இடது புறமாக தெற்கு நோக்கி,இடது காலை மண்டியிட்டு அமர்ந்து இருக்க வேண்டும். அடுத்து இருமுடி சக்தி மாலை தாங்கிய தட்டினைக் குத்துக்காலிட்டு வலது காலின்மேல் வைக்க வேண்டும்.
15. சக்தி மாலை அணிந்து கொள்ள இருப்பவள் குருவிற்கு அணிவிக்க வேண்டிய சக்தி மாலையை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்து சக்தி மாலையின் டாலர் வலக்கையில் இருக்குமாறும் தாங்கிக் கொள்ள வேண்டும். பின்பு சக்தி மாலையை அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப் படத்திற்கு நேராகத் தொய்வு இல்லாதவாறு செங்குத்தாகப் பிடித்து இழுத்தபடி ‘ஓம் சக்தி’ என்று மூன்று முறை சொல்லிக்கொண்டு கீழிருந்து மேலாகக் காண்பித்து உருவேற்றிய பின்பு சக்தி மாலையை அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப் படத்திற்கு அணிவிக்க வேண்டும்.
16.அன்னை ஆதிபராசக்தியின் திருவுருவப் படத்தின் மேல் அணிந்த பின்பு, சக்தி மாலையை அணிவிக்கும் முறையில் எடுத்துக் கொண்டு அன்னை ஆதிபராசக்தியும் குருவையும் வலம் வருதல் வேண்டும்.
17.குருவின் மாலையை அணிபவர்கள் அனைவரும் ‘ஓம் சக்தி’ என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து குருவிற்கு சக்தி மாலை அணிவிக்க வேண்டும்.
18. சக்தி மாலையை ஏற்றுக்கொள்ளும் குரு , அந்த வேளையில் இருமுடி யின் மேல் இருகரங்களையும் வைத்துத் தம் தாய் தந்தையை நெஞ்சில் நிறுத்தியும். அன்னை ஆதிபராசக்தியை
நெஞ்சில் நிறுத்தியும் வணங்க வேண்டும்.
பக்கம்: 5-7.
சக்தி விரதமும்-சக்தி மாலை அணியும் முறையும்.