கலச பூசை செய்யும் முறை

மருவத்துாரிலோ, ஆன்மிக மாநாடுகளிலோ, வார வழிபாட்டு மன்றங்களிலோ வேள்விப்பூசைகளில் வைக்கப்பட்ட கலசங்களை வீட்டில்

வைத்துப் பூசை செய்யும் முறைகள் வருமாறு1) கலசம் அல்லது விளக்கு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும்போது நுழைவாயிலில் நின்று யாரேனும் ஒரு சுமங்கலியைக் கொண்டு எலும்மிச்சம்பழம் திருஷ்டி கழிக்க வேண்டும்.

2) எந்த நல்ல காரியத்துக்காக கலச விளக்குகளை வாங்கினோமோ அதனை மனதில் கொண்டு ”அம்மா! இந்த நல்ல காரியத்துக்கு நீ துணை நிற்க வேண்டும் தாயே!” என்று அன்னையை வேண்டிக்கொண்டு, ஓம் சக்தி. பராசக்தி! என்று அன்னையைின் மந்திரங்களை உச்சரித்தபடி கலசவிளக்குகளை ஏந்திக்கொண்டு வலதுகாலை எடுத்து வைத்து வீட்டில் நுழைய வேண்டும்.

3) அன்னையின் படத்திற்கு முன்பாக கலசத்தை வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது ஓர் இலையை பரப்பி அதில் கலசத்தோடு வாங்கி வந்த அரிசியைப் பரப்பி அதில் ”ஓம்” என்று எழுதி அதன் மீது கலசத்தை நிறுத்த வேண்டும். தலைவாழையிலை அல்லது பித்தளைத் தாம்பாளத்தினைப் பயன்படுத்தலாம். 

4) கலசத்தை நிறுத்தி இருகில் காமாட்சி விளக்கு அல்லது குத்துவிளக்கை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

5) அக் கலசத்தில் அன்னையின் திருவருள் சக்தி உறைந்திருப்பதால் அக்கலசத்தின் முன்பாக வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், எலுமிச்சைபழம், மஞ்சள் கிழங்கு, புஷ்பம், நைவேத்தியம், வைத்துத் தேங்காயை உடைத்து வைக்க வேண்டும்.

6) பின் கலசத்திற்கு தீபாரதனை செய்து ஒரு எலுமிச்சம்பழத்தைக் கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும்.

7) அன்னையின் மூலமந்திரத்துடன் 108 மந்திரம் சொல்லலாம்.(கலசத்திற்கு மலா் அர்ச்சனை செய்யலாம்)

காலை, மாலை இரண்டு வேளை பூசை செய்ய வேண்டும்.

8) மூன்று நாள் கலச பூசை செய்து முடித்த பிறகு அக்கலசத்தில் உள்ள தீா்த்தத்தைக் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒரு தேக்கரண்டி அளவு அருந்த வேண்டும். மீதமுள்ள தீா்த்தத்தை வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் தெளிக்க வேண்டும்.

9)கலசத்தின் அடியில் உள்ள பச்சரிசியை வெண்பொங்கல் அல்லது சா்க்கரைப் பொங்கல் செய்து அக் குடும்பத்தினா் சாப்பிட வேண்டும்.

10) மூன்று நாள் கலச பூசை முடிந்த பிறகு கலசத்தின் மேலுள்ள தேங்காயை மஞ்சள் துணி, அல்லது சிவப்பு துணியில் கட்டி விட்டு வாயிற் படிமேல் தொங்கவிட வேண்டும். வீட்டில் கலசபூசை செய்யும்போதெல்லாம் கட்டிவிடப்பட்ட இந்தத் தேங்காய்க்கும் தீபாராதனை காட்டவேண்டும்.அல்லது சாம்பிராணிப் புகையைக் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் மற்றவா்களின் கண் திருஷ்டி, காழ்ப்புணா்ச்சி, செய்வினைகள் இவற்றால் வரும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்ம்.

11) கலச தீா்த்தத்தை வீட்டின் பகுதி, வியாபார நிறுவனங்கள், தொழிற்கூடங்களில் தெளிப்பதன் மூலமாக நம் கண்கட்குப் புலப்படாத தீய சக்திகள் துரத்தப்படுகின்றன. துா்தேவதைகளின் ஆதிக்கம் அகற்றப்படுகிறது. எனவே கலச தீா்த்தத்தை வீணாக்காமல் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற காலங்களில் அன்னையின் மூலமந்திரம், 108 மந்திரம் சொல்லி ஒரு தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். சாதாரண நோய்கட்குப் பயன்படுத்தி வீண் ஆக்கிவிடாதீா்கள்.

12) கலச சொம்பினைப் பூசை காரியத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

13) மூன்று நாட்கள் இவ்வாறு பூசை செய்த பிறகு தொடா்ச்சியாகக் கலசபூசை செய்ய வேண்டும். 108 நாட்கள் அல்லது ஒன்பது பெளா்ணமி, அல்லது ஒன்பது அமாவாசை இவற்றில் எது யாருக்கு எப்படி உசிதமோ அப்படிக் கலசத்திற்குத் தொடா்ந்து பூசை செய்து வரவேண்டும்.

14) நாம் உறுதி செய்து கொண்டபடி இத்தனை முறை என்று பூசையை முடித்த பிறகு அன்னை அருள்வாக்கில் எங்ஙனம் உத்தரவிடுகின்றாளோ அதன்படி அக்கலசத்தைப் பயன்படுத்த வேண்டும். அவற்றைக் கடலிலே செலுத்திவிடுமாறு அன்னை ஒரு முறை பணித்தாள்.மற்றொரு முறை அவற்றைச் சென்னை ஆன்மிக மாநாட்டு ஊா்வலத்தில் ஏந்தி வந்து மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு ஆணையிட்டாள். அன்னையின் அருள்வாக்கு உத்தரவு வரும் வரை மேற்கண்ட முறைகளில் 9அமாவாசை, அல்லது 9 பெளா்ணமி, அல்லது 108 நாள் கலசத்திற்குப் பூசை செய்து வர வேண்டும்.

15) கலச தீா்த்தம் தீா்ந்துவிட்டால் மஞ்சள் நீரையே தீா்த்தமாகப் பயன்படுத்திப் பூசை செய்யலாம். தீா்த்தப் பொடி இருப்பின் தயார் செய்து கொள்ளலாம்.

16) ஒவ்வொரு பெளா்ணமி, அமாவாசை காலங்களில் கலசத்தை முறைப்படி வைத்து 1008 மந்திரங்களோடு பூசை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் கலசத்தைச் சுத்தம் செய்து நுால் சுற்றிக் கொள்ளலாம். புதிய தேங்காய் வாங்கி மஞ்சள் தடவிப் பொட்டு வைத்துக் கலசத்தின் மேல் நிறுத்திப் பூ வைத்துக் கலசம் தயாரிக்க வேண்டும். கலசத்துக்கு நுால் சுற்றும்போது ஒற்றைப்படை எண்களில் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.    

முக்கிய குறிப்பு– இவை பொதுவான முறைகள். தனிப்பட்ட முறையில் சிலா்க்கு அன்னை அருள்வாக்கின் போது வேறு சில முறைகளில் வீட்டில் கலசபூசை செய்து வரும்படிக் கூறியிருக்கலாம். அத்தகையவா்கள் அதன்படியே கலசபூசை செய்து வர வேண்டும்.

நன்றி (அன்னை அருளிய வேள்வி முறைகள்)

 

 

 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here