மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன்
உலகம் முழுவதிலும் உள்ள வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்கள் சார்பில் 24.04.2022ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புவி தினம் கொண்டாடப்படுகிறது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்கள் சார்பில் கடற்கரை சுத்தப்படுத்துதல், ஆற்றுப்படுகை சுத்தம் செய்தல், குளங்கள் மற்றும் சாலைகளில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பல்வேறு பணிகளை தேர்ந்தெடுத்து செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரம்பொருள்பங்காரு அம்மா அவர்கள் நமக்கு அளித்துள்ள புவி தொண்டில் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.