கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலங்களில் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளியவர்களுக்கு கோவில்பட்டி புதுக் கிராமம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் (TT33) சார்பில் 50க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு, காய்கனிகள் மற்றும் மாஸ்க் உள்ளிட்ட‌ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் அறிவுறுத்தப்பட்டது.