“ஒரு குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து, மற்றவர் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன நேரும்? வருமானத்தில் துண்டுவிழும். கடன் பெருகிவிட்டதே என்று கஷ்டப்பட வேண்டிவரும். ஒருவர் சம்பாதித்துப் பலர் சாப்பிடுவதை விடக் குடும்பத்தில் உள்ள அனைவரும் சம்பாதித்தால் குடும்பத்தில் கஷ்டம் வராது. அதுபோலக் குடும்பத்தில் ஒருவர் மட்டும் ஆன்மிகத்தில் ஈடுபட்டால் போதாது. அனைவரும் ஈடுபடவேண்டும். குடும்பத்தில் உள்ள பத்து பேரும் ஆன்மிகத்தில் ஈடுபடும்போது, அந்தப் பத்துப்பேரின் உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.”

“இங்கு விழாக்களுக்கு வருகிற பக்தர்களை உபசரித்து வரவேற்க வேண்டும். அன்புக் கட்டளையிட்டுப் பணிபுரிய வேண்டும். உங்களைப் பார்த்து ஊரும் வரும்; உலகமும் இங்கு வரும். உங்களைப் பார்த்து மற்றவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு உங்கள் பக்தியும் தொண்டும் அமையவேண்டும்.”

அன்னையின் அருள்வாக்கு