30 ஏக்கர் நஞ்சை நிலம் ,நெல்_வாழை தோப்பு, எல்லாம் உண்டு’ யானைக் கூட்டம் வந்து எல்லா பயிர்களையும் அழித்து, ஒரே நஸ்டம் ஒவ்வொருவருடமும்இதே போல யானையால் பயிர் நஸ்டம் ஏற்படும், மனக்கலக்கத்துடன் ஒரு நாள் அம்மா படத்தின் முன்னாடி நின்று அம்மா தாயே விவாசாயம் யானையால் நஸ்டம் ஏற்படுகிறது,
இந்த வருடம் நல்ல விளைச்சல் இருந்தால் – பாதி உனக்கு / பாதி எனக்கு, இரண்டு பேறும் ஒப்பந்தம் போட்டாச்சி, அம்மாவிடம் வேண்டுதல் பண்ணினேன்,

என்ன ஆச்சரியம் அந்த வருடம் யானை தொந்தரவு இல்லை எனக்கு 2 லட்சம் பணம் கிடைத்தது, நான் பேசின மாதிரி எனக்கு பாதி – அம்மாவுக்கு பாதி என்று முடிவெடுத்தேன் – இருந்தாலும் – அந்த 2 லட்சம்- பணத்தையும் அம்மாபாத பூஜையில் வைத்து விடுவோம், அவள்என்ன முடிவு செய்கிறாளோ அதன்படி நடக்கட்டும்
என்று நான் பாதை பூஜையில் 2 லட்சம் பணத்தையும் வைத்து விட்டேன் –
அம்மா என்னை பார்த்தவுடன், நாம என்ன ஒப்பந்தம் செய்தோமோ, அதன்படி
எனக்கு ஒரு லட்சம் உனக்கு ஒரு லட்சம் புரியுதா – அம்மா சிரித்தவாறே – 2 லட்சமும் நீயே எடுத்துக் கோ அன்னதானத்திற்கு அரிசி மூட்டை உன் நிலத்தில் இருந்து எனக்கு கொடு அந்த யானையை நான்காவல் போட்டது எனக்கு வேலை சரியாய் இருந்தது, உன் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் உத்தரவு என்றாள்,

அதன் பிறகு என் குடும்பம் என் பிள்ளைகள் எல்லாம் ஆரோக்கியமாகவும் நல்ல வசதி வாய்ப்புடனும் அம்மா ஆசியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,