மனிதர்களே தானே’  பொறாமைப்படவும் எரிச்சல்படவும் செய்கிறார்கள்!” என்று அன்னை சொல்லும் போது மனிதர்களின் இயல்பு அது என்று புரிந்து கொள்கிறோம். மனிதர்கள், மனிதர்கள் தானே!  அவர்கள் தெய்வங்கள் அல்லவே!  மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள்!

என்று உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வது எதார்த்தம்.

நாம் வாழ வகை சொல்லித் தருகிறது அன்னையின் அருள்வாக்கு. தனிமனித வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது அன்னையின் அருள்வாக்கு. 

 கண்ணன் சொண்ண கீதைப் பாடல்கள் வாழ வழி காட்டிய உபதேசங்கள். வள்ளுவர் சொன்ன திருக்குறள் பாடல்கள் வாழ வழி சொன்ன வழிகாட்டிகள். அவைபோலத் தனி மனித வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக,  அன்னையின் அருள்வாக்குகள், உபதேசங்களாக விளங்குகிறது.

தனியொரு மனிதருக்குச் சொல்கிற அருள்வாக்குகள் கூட, உலக மக்களுக்காகச் சொல்லப்பட்ட உபதேசங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு தனி மனிதருக்கும் சொல்லப்பட்ட உபதேசங்களாக அவை இருக்கின்றன.

எல்லா இடத்துக்கும், எல்லா மனிதருக்கும் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடியவையாக அருள்வாக்குகள் விளங்குகின்றன. அதனாலேயே அவை உலகப் பொதுத்தன்மை ( UNIVERSAL)  கொண்டவையாக விளங்குகின்றன. அப்படியொரு அருள்வாக்கு உண்டு. இதோ அது:

“சஞ்சலமும் சலசலப்பும் ஏளனமும் இகழ்ச்சியும் ஏச்சும் பேச்சும் வரலாம். அம்மாவின் பணிகளைத் தொடர்ந்து செய்!”

இந்த அருள்வாக்கில் எதுகையும் மோனையும் கலந்த இலக்கியச் சந்தங்கள் சொந்தம் கொண்டாடி வரும் ஓசை நயத்தை ரசிக்கிறோம். கொஞ்சம் சலங்கை இது தானோ! தாளம் மிஞ்சும் தளிர்நடையோ! என்று வியக்க வைக்கும் வரிகள் இவை! சஞ்சலம்-சலசலப்பு, ஏளனம்-  இகழ்ச்சி, ஏச்சு- பேச்சு இவை இலக்கிய நயம் மிக்க வாத்தைகள்; ஓசை நயம் மிக்க வரியே! எல்லாம் சரியே!

ஆனால் அன்னையின் நோக்கம் எதுகையும், மோனையும் எடுத்து வரிசைப்படுத்துவது அல்லவே சில நேரங்களில் அருட் கூடத்தில் கூட அப்படிப் பேவது உண்டு.

ஒரு பக்தை அவருக்குப் புற்றுநோய். ரொம்பவும் அவதிப்பட்டவர். அருள் திரு அம்மாவிடம் ஆசிபெற வந்தார்.அருள் திரு அம்மா அவர்களின் ஆசி மீது அவருக்கு அத்தனை நம்பிகை. அருள்திரு அம்மாவின் அருட்பார்வைக்கும், அருள் ஆசியும் தன்னைக் குணமாக்கிவிடும் என்ற நம்பிகை. அன்னையாக உள்ள அருள் திரு அம்மா தன் திருஅருளால் நோயைத் தீர்த்து விடுவார்கள் என்ற நம்பிகை.

‘புற்றுநோய் வந்து அவதிப்படுகிறேன்’ என்று சொல்ல வந்த அந்த பக்தை அருள்திரு அம்மா அவர்களிடம் “அம்மா! எனக்குக் ‘கான்சர்’ ( புற்றுநோய்) என்றார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்த நிலையை அவர்கள் சொல்லக்கூட ‘அம்மா’ விடவில்லை.

பக்தை “அம்மா! எனக்குக் கான்சர்!” என்றார்

அம்மா சொன்னார்கள் “கான்சர்! அது கான்சல்! ( Cancer அது cancel) என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்கள் ஆபிரேஷன் எல்லாம் வேண்டாம்! புற்று நோய் அற்றுப் போய்விட்டது போய் வா! என்று சிரித்தார்கள். 

வார்த்தைகளின் சித்து விளையாட்டுப் போல இது தோன்றினாலும்; அம்மாவின் அருள்வாக்கு அல்லவா அது! அந்தச் சக்திய வாக்குப் பலித்தது. அந்தப் புற்றுநோய், அறுவை சிகிச்சை இல்லாமலே குணமானது. ஆங்கில வார்த்தை என்றாலும், அது அழகான எதுகை மோனை!

தமிழிலும் அம்மா வார்த்தைக்கு வார்த்தை பதிலாகப் போட்டு விளையாடுவது உண்டு. அந்தப் பதிலில் ஆழமும் இருக்கும்; அர்த்தமும் இருக்கும். 

ஒரு இளைஞன் அவன் பக்தன் அவன் பெற்றோர் அவன் திருமணத்துக்குப் பெண் பார்த்தார்கள். அவர்களும் அம்மா பக்தர்களே! அருள்திரு அம்மா அவர்களிடம் ஆசிபெற வந்தார்கள்.

அந்த இளைஞன் அருள்திரு அம்மா அவர்களிடம் சொன்னான் “அம்மா!  பெண் கறுப்பாக இருக்கிறாள்!”

அம்மா அவர்கள் அவனுக்குச் சொன்னார்கள் “கறுப்பாக இருந்தால் என்ன?  கறுப்பாக இருந்தாலும் கருத்தாக இருப்பாள் நீ கல்யாணம் பண்ணிக்கொள்.”

அந்தப் பெண்ணை அம்மா பார்த்தது கூட இல்லை என்பது வேறு விஷயம்.அருள்திரு அம்மா அவர்களின் வார்த்தைகளை மீறாத அந்த இளைஞன் கறுப்பான அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டான். கருத்தான அந்தப் பெண்ணால் அவன் சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

வேறு ஒரு இளைஞனின் பெற்றோர்கள். தன் மகனுக்குத் திருமணம் காலதாமதம் ஆகிக் கொண்டே போகிறதே என்று அருள்திரு, அம்மாவிடம் வேண்டிக் கொள்ள வந்தார்கள். அம்மா சொன்னார்கள்.

“பொறுமையாக இரு”  பொறுமையாக வந்தாலும் பெருமையாக வரும்”  என்றார்கள். சின்னஞ்சிறிய வார்த்தைகளில் கூடப் பென்னம் பெரிய அர்த்தங்களைக் கொண்டு வரும் அம்மாவின் வார்த்தைகள் இலக்கிய நயம் கொண்டவை. அது மட்டுமல்ல. நம் வாழ்வின் இலக்குகளை நோக்கி நம்மை நகர வைக்கும் உந்து சக்திகள் அவை.

அதைப் போலத் தான் சஞ்சலமும் சலசலப்பும் ஏளனமும் இகழ்ச்சியும் ஏச்சும் பேச்சும் வரலாம் அம்மாவின் பணிகளைத் தொடர்ந்து செய்! என்ற வார்த்தைகளும்.

வாழ்க்கையில் எங்கே தான் சஞ்சலம் இல்லை!  நம்மால் நமக்கு வருகிற சஞ்சலங்கள்!  நம்மை பிறர் நோக்கிப் பிறர் ஏற்படுத்தும் சலசலப்புகள்!  அதனால் நாம் பிறருக்கு ஏற்படுத்தும் சலசலப்புகள்! நாம் திரும்ப ஏசும் ஏச்சுகள்!  இல்லாததும் பொல்லாததுமாகப் பேசும் பேச்சுகள்! அப்பப்பா! ஏராளம்! தாராளம். ஆனால் இவற்றை எல்லாம் தாங்கிக் கொள்ள சக்திவேண்டுமே! தகர்த்தெறியச் சக்தி வேண்டுமே!

சஞ்சலம் வந்தாலும் நாம் சஞ்சலப்படக்கூடாது. சஞ்சலங்கள் நம்மைச் சலசலப்புகளுக்கு ஆளாக்கி விடக்கூடாது.

இகழ்ச்சிகளைத் தாங்கிக் கொள்ளும் இரும்பு இதயம் வேண்டும்.ஏளனங்களை எட்டவே நிறுத்தி வைக்கும் பலம் வேண்டும். ஏச்சுகள் நம்மைக் காத்துக் கொள்ள ஒரே ஒரு வழி தான் உண்டு. அந்த வழி தான் பணி!

அடிகளார் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கின்ற பணி!  அது தான் தொண்டு. அதனால் தான் அன்னை அருள்கூர்ந்து சொல்லுகிறார்கள். அம்மாவின் பணிகளைத் தொடர்ந்து செய் அம்மாவின் தொண்டுகளைத் தொடர்ந்து செய்!

தொண்டு செய்வதில் ஒரு மாபெரும் நன்மை உண்டு. என்ன அது?  தொண்டு செய்யும் போது உண்மை உணர்வோடு செய்யும் போது, நாம் யார்க்கும் எஜமானன் இல்லை என்னும் அடக்கம் உண்டாகிறது. நாம் யார்க்கும் எஜமான் இல்லை என்ற எண்ணம் உண்டாகிறது. நாம் யார்க்கும் எஜமானன் இல்லை என்னும் போது நமக்கும் மனிதர்கள் யாரும் எஜமானன் இல்லை என்ற தன்னம்பிக்கை பிறக்கின்றது.

‘நாம் ஆர்க்கும் குடியல்லோம்’ என்ற சைவ சமயத்தின், தொண்டு மார்க்கத்தின் பிரதிநிதியாகச் சொல்லப்படுகின்ற அப்பர் சுவாமிகளின் உரத்த குரலில் ஓங்கி ஒலிக்கும் வார்த்தைகளும், அதன் ஆழமும், அர்த்தமும், ஆர்ப்பரிப்பின் பலமும் நமக்குப் புரிகின்றன. நமக்கும் பொருத்தமாய் உள்ளன.

தெய்வம் தான் நமக்கு முதலாளி, நாம் எல்லோரும் தெய்வத்துக்குத் தொழிலாளி என்ற உணர்வைத் தொண்டு செய்வதன் மூலம் பெற முடியும்.

 தொண்டு செய்கிற போது கூட, அதன் தொடர்பாகக் கூட சஞ்சலமும், சலசலப்பும், ஏச்சும், பேச்சும், ஏளனமும், இகழ்ச்சியும் வரலாம்.என்ன தொண்டு செய்து என்ன பயன்?  எல்லாம் என் விதியின் பயன் என்று நினைக்கிற போது நாம் ஏமாளி ஆகிப் போகிறோம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்று நொந்து நூலாகிப் போகிறோம்.

ஒரு விஷயத்தை, நாம் மறந்தே போகிறோம். எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்றால் அருள்வாக்குத் தருகிற ஆதிபராசக்தி நம் கூடவே இருக்கிறாள் என்பது நமக்கு அவ்வப்போது மறந்து போகிறது என்று தான் அர்த்தம்.

விதிப்பயனால் வரக்கூடிய சஞ்சலம், சலசலப்பு, ஏளனம், இகழ்ச்சி, ஏச்சு, பேச்சு, எதுவாக இருந்தாலும், ஆதிபராசக்தி கூடவே இருக்கிறாள்.

புகழ்ச்சியும் பூரிப்பும் அவள் தந்தது

இகழ்ச்சியும் ஏளனமும் அவள் தந்தது

வளர்ச்சியும் உயர்வும் அவள் தந்தது

வாட்டமும் தேய்வும் அவள் தந்தது

சஞ்சலமும் சலசலப்பும் அவள் தந்தது

சந்தோமும் உற்சாகமும் அவள் தந்தது

சலிப்பும் அலுப்பும் அவள் தந்தது

ஏச்சும் பேச்சும் அவள் தந்தது                                                                  

                                                                                             ஓம் சக்தி!

 

நன்றி

சக்தி ஒளி ஆகஸ்ட் 2009

பக்கம் 17 -20

 

 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here