மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா 2011

0
882

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவை பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தனர். ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்காரமும்,ஆராதனைகளும் நடைபெற்றன. சித்தர் பீடம் வந்த நிறுவனர் பங்காரு அடிகளாருக்கு வரவேற்பும், பாதபூஜையும் செய்யப்பட்டது. அதன்பின்னர், அடிகளாரின் வீட்டிலிருந்து கஞ்சி கொண்டு வரப்பட்டு ஆதிபராசக்தி nஅம்மனுக்கு படைக்கப்பட்டது.

பக்தர்கள் சுயம்பு அம்மனுக்கு தங்கள் கைகளாலே பாலாபிஷேகம் செய்து வருகின்றனர். ஆதிபராசக்தி அம்மனுக்கு ஆடிப்பூர நாளான செவ்வாய்கிழமையும் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்கின்றனர்.
 
நன்நி
தினமணி.கொம்
மதுராந்தகம், ஆக 1: 
 
 
 
]]>