கற்பூர ஆராதனை காட்டும் போது நம் இடக்கை எவ்வாறு இருக்க வேண்டும் தெரியுமா? சின்முத்திரை தாங்கியபடி உள்ளங்கை மேலே இருக்க வேண்டும். வலக்கையால் கற்பூரத்தட்டு ஏந்துகிற போதும் ஒரு நுட்பமான முறையில் அந்தத் தட்டை பிடிக்க வேண்டும். அக்கற்பூரத்தட்டை இரண்டு விரல்களால் மட்டுமே பிடித்திருக்க வேண்டும்.ஆள்காட்டிவிரல்,பெருவிரல் என்னும் இந்த இரண்டு விரல்களால் மட்டுமே கற்பூரத்தட்டை இறுக பிடித்துக்கொள்ள வேண்டும்.மற்றைய மூன்று விரல்களும் ஆராதனையின் போது கீழ் நோக்கியபடி அமைதல் வேண்டும். குங்கும அர்ச்சனை முடிந்த பின்பு கற்பூரம் ஏற்றித் தீபாராதனைத் தட்டினை எடுத்து “ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்” என்று மூன்று முறை கீழ்க்கண்டவாறு செய்ய வேண்டும்.

1.முதலில் சுயம்பிற்கு மட்டும் “ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்” எனும் மந்திரத்திற்கு தகுந்தாற் போல் ஒரே சுற்றில் முடிக்குமாறு செய்து முடிக்க வேண்டும்.

2.அம்மனுக்கு மட்டும் இரண்டாவது “ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்”எனும் மந்திரத்திற்கு தகுந்தாற் போல் ஒரே சுற்றில் முடிக்குமாறு செய்து முடிக்க வேண்டும்.

3.சுயம்பு, கருவறை அம்மன் இரண்டையும் சேர்த்து “ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்”எனும் மந்திரத்திற்கு தகுந்தாற் போல் ஒரே சுற்றில் முடிக்குமாறு செய்து முடிக்க வேண்டும்.

4.இறுதியாக “ஓம் ஒம் ஓம்”என்று மூன்று முறை சொல்லும் போது முதலில் அம்மன் சிலையின்,முகத்திற்கும்,அடுத்து அம்மன் சிலையின் பாதத்திற்கும் கடைசியாக சுயம்பிற்கு நேராகவும் காண்பித்து முடித்துவிடவேண்டும்

கற்பூர ஆராதனை காட்டி அதன் பின் பஞ்சபாத்திரத்திலிருந்து சிறிதளவு தீர்த்தத்தை ஊற்றி விளாவ வேண்டும்.
இந்த ஜீவாத்மா பரமாத்மாவான உன்னை அடைய வேண்டும் என்று துடிக்கிறது,அதற்குத் தடையாக ஆணவம்,

கன்மம்,மாயை என்ற மூன்று அழுக்குகள் தடுக்கின்றன.அவற்றை விட வேண்டி இந்த ஆரத்தி காட்டி உன்னை வழிபடுகின்றேன் என்கிற பாவனையில் கற்பூர ஆராதனை அமைய வேண்டும்.

 

 

 

]]>

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here