் அடியில்இருக்கும் அமைதியான நொண்டிப்பறவை கீழே விழுந்த பழத்தை உண்டு மகிழ்கிறது. அதுபோல நான் ஆன்மீகம்என்ற விதைகளை விதைத்திருக்கிறேன். அது செடியாகிற காலத்தில் பல எதிர்ப்புகள் தோன்றும். அந்த எதிர்ப்புக் காளான்களே ஆன்மீகம் என்ற மரத்திற்க்கு உரமாக அமையும். இந்த மரத்திலிருந்து பூ பூத்துக் காய் காய்த்துக் கனியாகும் காலத்தில் உங்களுக்குள் சண்டை சச்சரவு போட்டுக் கொண்டு இருந்தீர்களேயானால் எங்கேயோ அமைதியாக உட்கர்ந்துக் கொண்டு என்னை நினைத்துத் தொண்டு செய்யும் ஒருவன் தான் அதன் முழுப்பலனையும் அடைய முடியும். அதன் பிறகு வருத்தப்பட்டு பயனில்லை. பறவைகளின் சண்டையால் மரத்திற்க்கு எந்த அழிவும் இல்லை. அதுபோல உங்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டால் நஷ்டம் உங்களுக்குத் தானே தவிர ஆன்மீகத்திற்க்கு அல்ல! ஆகையால் ஆன்மீக உணர்வுடன் சலசலப்பு இல்லாமல் கருத்து வேற்றுமை இல்லாமல் தொண்டு செய்யுங்கள்.யார் யாரோ அம்மாவிடம் வந்து பலன் அடைகின்றார்களே என்று வருந்திப் புலம்புவதில் பலன் இல்லை. உங்களுக்குள் ஒற்றுமை இல்லையேல் நஷ்டம் உங்களுக்குத் தான்.

அன்னையின் அருள் வாக்கு
]]>