சென்னை வேப்பேரி மன்றத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மூவர்.

அம்மாவிடம் கலந்துரையாட அம்மாவின் இல்லத்திற்கு வந்திருந்தனர்..

அம்மா பேசிக்கொண்டிருந்த போதே …..
திடீரென ஒரு பொறுப்பாளரை பார்த்து……

“அவரின் கால்களை அமுக்கிவிடுங்கள்”…..!!

“அவருக்கு ரத்த ஓட்டம் குறைந்து கொண்டே வருகிறது என்றார்கள் அம்மா”……!!

எதற்காக அம்மா இவ்வாறு கூறுகிறார்கள் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதே …..

அம்மா குறிப்பிட்ட அந்த பொறுப்பாளர் கைகால்கள் இழுத்தவாறே கீழே சரிந்தார்.

வாய் ஒருபறம் கோணிக் கொண்டது.

பார்வை நிலைக் குத்திக்கொண்டது.

மலஜலம் வெளியேறிவிட்டது.

“நானே சொன்னேன்ல.
அவரை தாங்கிப் பிடி”……

என்று கூறியவாறு வீட்டினுள் அம்மா சென்று விட்டார்கள்.

நன்றாக உரையாடிக் கொண்டிருந்தவர்……

தற்போது தங்கள் கண் முன்னால் பிணமாகி விட்டதை பார்த்த மற்ற இருவரும் வெலவெலத்துப் போய் இருந்தனர்.

இவரின் மனைவி மன்றத்திலே பம்பரமாக சுழன்று இருமுடி பணிகளை செய்து கொண்டிருக்க….,

இவரோ இங்கு பிணமாகிவிட்டார்.

இவர் மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று மனங்கலங்கி கண்கலங்க தடுமாறி நின்று கொண்டிருந்தனர்.

வீட்டினுள் சென்ற அருள்திரு. அம்மா ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து,

“உன்னை அவ்வளவு சீக்கிரம் போக விடமாட்டேன் “….
.என்று முகத்தில் நீரால் பளார் என்று அடித்தார்கள்.

“பிணமானவர் உயிர் பிழைத்து எழுந்தார்”……!!

கண்விழித்து அந்த சக்தியிடம்……

உங்களுக்கு என்ன ஆயிற்று சக்தி என்று விசாரித்த போது….,

நான் அருள்திரு.அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தது மட்டுமே ஞாபகத்தில் உள்ளது.

பிறகு….
“என் உடலில் இருந்து ஏதோ பிரிவது போல இருந்தது”……!!

‘பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை”……!!

“யாரோ வேப்பில்லையால் அடிப்பது போல தெரிந்தது”…..!!

சுயநினைவு வந்து ……
நான் கண் விழிக்கும் போது…..,
அருள்திரு. அம்மா அவர்கள்…….

“அதர்வண பத்திரகாளியாக கையில் வேப்பிலையோடு என் எதிரே நின்று கொண்டிருந்தார்கள்”…….!!

நான் மரணவாசலை தொட்டுவிட்டு அருள்திரு.அம்மாவால் உயிர் பெற்று மீண்டேன் என…….

அவர் தான் கண்ட காட்சியை அதிர்ச்சியில் இருந்து மீளாமல் கூறினார்.

தன் பக்தனை மரணத்தில் இருந்து மீட்டு அதர்வண பத்ரகாளியாகவே மாறி”…….

“அந்த பக்தருக்கு காட்சி கொடுத்த நம் ஆன்மிககுருவின் கருணையை என்னென்று சொல்வது”…..!!

“ஓம்சக்தி அம்மாவே சரணம்”…!!