உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பெண்ணுலகம் அழுதுகொண்டிருக்கிறது மகளே! நீ சந்திக்கின்ற ஒவ்வொரு பெண்ணிடமும் சொல்…………. அவர்களின் தாய்! இங்கே மருவத்தூரில் நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல். எந்த மூலையிலும் இருந்தாலும் …………… அம்மா என்னைக் காப்பாற்று! என்று மனதார வேண்டிக் கொள்ளச் சொல் மகளே!…… என்னைப் பார்க்கவில்லையென்றால் பரவாயில்லை. என்னைப் பார்த்தே இல்லையென்றாலும் பரவாயில்லை. பார்க்க வாய்ப்பே இல்லையென்றாலும் பரவாயில்லை. ————————————————————— உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அம்மா என்னைக் காப்பாற்று என்று அவர்களுடைய மனம் வேண்டிக் கொள்ளச் சொல். அவர்களுக்கு நான் துணையாயிருப்பேன் என்ற உறுதியைச் சொல். 10 ஆண்டுகளாக நடக்காத ஒரு காரியம் என்றாலும் என்னை உறுதியாகவும், நம்பிக்கையாகவும், கவனத்தோடும், கருத்தோடும் என்னை நினைக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் 10 நொடிகளுக்குள்…….. அம்மா வேப்பிலைக் கொத்தை மடியில் வைத்துவிட்டு அவர்கள் அந்த விரல்களைச் சுண்டிக் காட்டிச் சொன்னாள்…… 10 நொடிகளில் பத்தே நாட்களில் நடத்திக் கொடுப்பேன் என்று சொல். 10 நாட்கள் என்று சொன்னவர்கள் 10 நொடிகளென்று சொன்னார்கள். 10 நொடிகளுக்குள் நடத்திக் கொடுப்பேன் என்று சொல். உலகத்துப் பெண்களுக்கெல்லாம் ஒரு கருத்தைச் சொல்….. தாய், அம்மா மனங்கசிந்து சொன்ன வார்த்தை….. என் இடையழகு, என் கண்ணழகு, என் கழுத்தழகு, என் மார்பழகு, என் தொடையழகு என்று பெண்ணுலகம் தன் உடலழகை முன்னிலைப் படுத்தி, தன்னையும் தன் வாழ்வையும் சிதைத்துக் கொண்டிருக்கிறது மகளே! பெண்களிடம் சொல்… எதையெல்லாம் அழகு அழகு என்று நினைக்கிறார்களோ!!!!! அவையெல்லாம் ஒருநாள் அழுகும் பொருள் என்பதை நினைவு படுத்தச் சொல் மகளே! ஏங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் சொல்! இந்த பூமியில் அவர்களின் வருகைக்காக அம்மா நான் காத்திருக்கிறேன் என்று சொல். ஒரே ஒரு முறை இந்த மண்ணை மிதிக்கச் சொல். மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல். இந்த வார்த்தை அம்மா சொன்ன பொழுது அம்மாவின் கண்களிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது.

]]>