தியானம் : தியானம் செய்யச் செய்ய மனம் அமைதி அடையும் மனம் அமைதி அடைந்தால் சிந்திக்கும் திறமை வளரும். அந்தத் திறமை வந்தால் பொறுமை வளரும். அந்தப் பொறுமை வளர்ந்தால் பக்குவம் வரும். அந்தப் பக்குவம் வந்து விட்டால் நாட்டில் ஒற்றுமை உணர்ச்சி ஏற்படும். மன நிம்மதியை ஆன்மிகத் துறையில் ஈடுபடுவதால் மட்டுமே பெற முடியும். அதற்குத் தியானம் தேவை. அந்தத் தியானத்திற்குச் சிறந்த இடம் இது (மேல்மருவத்தூர்) #கிரகணத்தின்_போது_தியானம் : கிரகணத்தின் போது நீங்கள் தியானத்தில் அமர்ந்தால் பல ஆக்கவிளைவு, பக்தி உணர்வு, மந்த புத்தி நீங்குதல் ஆகிய பலன்கள் உண்டாகும். அமாவாசை, பெளர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ, மன்றங்களிலோ 5 நிமிடம் மெளனத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தருவேன். #மேல்மருவத்தாரில்_தியானம்_செய்தால் : இந்த மண்ணில் 108 முறை அமர்து தியானம் செய்தவர்களையும் ஒன்பது முறை இங்கே இருமுடி செலுத்தியவர்களையும் ஏவல், பில்லி, சூனியங்கள் தாக்காது. #தியானமும்_மெளனமும் : எப்போதெல்லாம் உன் மனம் குழம்புகிறதோ எப்போதெல்லாம் உனக்கு எதிர்ப்புகள் வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு பத்து நிமிடம் மெளனமும் தியானமும் மேற்கொள். #மனத்தையும்_காமத்தையும் கட்டுப்படுத்த “வாடுகிற நேரத்தில் வாடியும், பாடுகிற நேரத்தில் பாடியும், அழுகிற நேரத்தில் அழுதும், உங்களிடத்தில் ஆன்மிகத்தை வளர்த்து வருகிறேன். வெளிவேடம் தேவையில்லை. மனத்தையும், காமத்தையும் கட்டுப்படுத்தத் தான் தியானப் பயிற்சி அளிக்கிறேன். #தியான_முறை : அறுகோணம் போல் கால்களை வைத்துக் கொண்டு சின்முத்திரையுடன் தியானம் செய்ய வேண்டும். உன்னை நீயே புரிந்து கொள்ள வேண்டும். உன் ஆன்மாவையும் புரிந்து கொள்ள வேண்டும். அமர்ந்து கொண்ட பிறகு எந்தக் குறிப்பிட்ட மந்திரத்தையும் நீ கூற வேண்டாம். மனைவி, மக்கள், ஊர், உலகம் என்று உன் மனம் எங்கெங்கே சுற்றி அலைகிறதோ அதன் போக்கில் விட்டுவிடு. எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க வேண்டாம். நேரம் செல்லச் செல்ல இந்த எண்ண ஓட்டங்கள் அடங்கி ஒருமுகப்படுதலை நீ உணர முடியும். நாளாவட்டத்தில் நீ வேறு, உன் மனமும் பொறிபுலன்களும் வேறு என்பதை எளிதில் உணர முடியும். ஆடு மாடு மேய்ப்பவர்களை நீ கண்டதில்லையா? அவன் என்ன செய்கிறான்? ஒவ்வொரு மாட்டின் பின்னேயுமா செல்கிறான். மாடுகள் தம் விருப்பம்போல் சுற்றிப் புல்தரையில் மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஓரிரு முறைகள் தன் இருப்பிடத்திலிருந்தபடியே மாடு மேய்ப்பவன் மாடுகள் புல் மேய்வதைப் பார்த்துக் கொள்கிறான். அதே போல் நீயும் இருத்தல் வேண்டும். உன் பொறிபுலன்கள் மனத்தின் நிலையில் நின்று, அதனுடன் தொடர்பற்ற முறையில் நின்று, மனம் நினைப்பதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்கப் பழகுவாயாக. நாளாவட்டத்தில் உன் ஆன்மா மனக்கோட்டத்தில் ஈடுபடாமல் மனம், பொறி, புலன்கள் இவற்றின் செயல்களைப் புறநிலையாகத் தனித்து நின்று காணும் இயல்பைப் பழகிக் கொள்ளும் என்று திருவாய் மலர்ந்தால் மருவத்தூர்ப் பெருமாட்டி. தியானத்தின் போது நீங்கள் சிறுவயதில் செய்த தவறுகள், துரோகங்கள் உங்கள் முன் வருகின்றன. அவற்றை அப்படியே விடு! பின்னால் அந்த எண்ணங்கள் மாறும்! தியானத்தின் போது உன் மனம் எங்கெங்கோ ஓடும். தளர வேண்டாம். முதலில் உன் மனதை ஓட விடு, அது முதலில் குதிரை போலவும், மான் போலவும் ஓடும். பிறகு அது ஒரு நிலைக்கு வந்து சேரும். #அடிகளார் – #சுயம்பு_அன்னை : அடிகளார், சுயம்பு, ஆதிபராசக்தி இம்மூன்றையும் நினைத்து ஒரு முகத்தோடு தியானம் செய்! உன் வாழ்வில் உயர்வு எப்படி உள்ளது என்பதைப் பிறகு பார்! (குறிப்பு : வீட்டில் தியானம் செய்யும் போது தரையில் செவ்வாடை விரிக்கவும்) தியானம் என்பது நிதானம்; நிதானம் என்பது தானம். தானம் என்பது வருவாய். ஆன்மிகத்தில் உன் ஈடுபாடு வேண்டும். 10 நிமிடம் தியானத்துக்கு ஒதுக்கிப்பார்! சினிமா மோகத்தை விடு! பெண்டுலம் போல உன் உள்ளம் ஆடிக் கொண்டிருக்கிறது! பணமா, பாசமா? குலமா, குணமா? அருளா, பொருளா? ஆன்மிகமா, விஞ்ஞானமா? என்றெல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஆன்மிகத்தில் ஈடுபட்டு ஆடினால் அந்த பெண்டுலகம் சீராக ஓடும். ஐம்புலன்களையும் அடக்கி மனத்தை ஒன்றுபடுத்து. ஆசா பாசங்களை அடக்கி அம்மாவை நினைத்துத் தியானம் செய்! ஆத்மசக்தி எரியத் தொடங்கும். #தியானம்_பண்ணு : கடன் தொல்லை, பிள்ளைகளால் தொல்லை, கஷ்டம் என்ற நெருப்பு எல்லாம் உண்டு. ஒவ்வொருவர்க்கும் உண்டு. எல்லாவற்றையும் விட்டு தியானம் பண்ணு! உணர்வோடு தியானத்தில் உட்கார். தியானத்தினால் சில பேர் இங்குக் கரை சேர்ந்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் வெளியில் சொல்வதில்லை. #ஆன்மாவைச்_சிதற_விடாதே ! “ஆன்மாவை சிதறவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியாக இருப்பதுதான் ஆன்மாவின் இயல்பான நிலை! கோபப்படும் போதும், புலன்கள் கட்டுக்கடங்காமல் திரியும் போதும், ஆன்மா சிதறுகிறது. அந்த #ஆன்ம_சக்தியைத்_திரட்டிக்_குவிக்கவே_தியானம்_செய்கிறோம். வயிற்றுப் பசிக்குச் சாப்பிடுவது போல் ஆன்மா குளிரவும், குவியவும் தியானம் செய்ய வேண்டும். ஆன்மா சுத்தப்பட, ஆன்ம சக்தி குவியக் குவிய #ஆன்மாவே_வாழ்வில்_நல்வழி_காட்டும்! நல்லது கெட்டதைத் தெரிய வைக்கும், புலன்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும். #மேல்மருவத்தூருக்கு_வரும்_போது : மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இங்கே வந்து செல்வது உனக்கு நல்லது. ஏதோ வந்தோம் போனோம் என்று இருக்க கூடாது. எனக்கு அர்ச்சனை செய்துவிட்டால் மட்டும் போதாது. இங்கே வரும்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நிமிட நேரம் தியானம் செய்து விட்டுச் செல்! தியானம்னா வேற ஒண்ணுமில்லை, வியாழக்கிழமைலேன்னு வெச்சுக்கோயேன். குறிப்பிட்ட சாயங்காலம்னு வச்சுக்கோயேன்…. எவ்வளவு ஈஸியா முடியுமோ அவ்வளவு ஈஸியா….. ஈஸிசேர்ல வேணும்னாலும் ஒக்காந்துக்கோ, வானத்தைப் பார்த்து ஒக்காந்துக்கோ உன் கடந்த காலத்தை நெனச்சி பார்த்துக்கிட்டே வானத்தைப் பார்த்து ஒக்காந்துக்கோ… தொடர்ந்து செய், அதுதான் பயிற்சி… இப்படியே பயிற்சி பண்ணு இது எங்க கொண்டு போய் விடுதுன்னு பாரு… அதுதான் தியானம் ரொம்ப சிம்பிள். #தியானம்_கஷ்டமாக_இருப்பது_ஏன் : தியானம் செய்யும் போது மனம் ஒருமுகப்பட வேண்டும். அவ்வாறு முடிவதில்லை கஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள். உங்கள் மனத்தை ஒரு முகப்படுத்தி தியானம் செய்யும் போது அம்மா அதற்குக் கட்டுப்பட்டு பதில் சொல்ல வேண்டி வரும். அது கருதியே அம்மா உங்களை தியானத்தில் இருக்க விடாது. அதற்காக நீங்கள் தளர்ந்து போகக் கூடாது. விடா முயறிசியாக அம்மாவைப் பிடிக்க வேண்டும். #பெண்களுக்குத்_தியானம் : பெண்கள் பகல் 12.00 மணிக்குத் தியானம் செய்ய வேண்டும். மனக்கட்டுப்பாடுடன் தியானம் செய்ய வேண்டும். இரவு வேளையிலும் வீட்டில் தியானம் பழகலாம். ஆனால் உங்களால் அது முடியாது. மாத விலக்காக இருந்தாலுங் கூட 10 அல்லது 15 நிமிடம் தியானம் செய்யலாம். #தியானப்_பயிற்சி_சில_நுணுக்கங்கள் : தியானம் இருக்கும் போது இடுப்பு வலி, விலா வலி, முதுகு வலி, கழுத்து வலி முதலியன ஏற்படும். படிப்படியாக 10, 20, 30, 40 நிமிடம் என்று நேரத்தைக் கூட்டிக் கொண்டே வரவேண்டும். அதன்பின் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்தத் தடைகளையெல்லாம் கடந்துதான் நீங்கள் முன்னேறி வரவேண்டும். பிறகு கட்டுப்பாட்டுடன் 40 நிமிடங்களிலிருந்து மூன்று மணி நேரம் வரை பொறுமையாகத் தியானம் செய்தால் நீங்கள் கால்பங்கு ஆன்மிக முன்னேற்றம் அடையலாம். தியானத்தில் அமர்ந்த சிலருக்கு மறுபிறவி இல்லை. தியானம் மன அழுக்கைப் போக்க பயன்படும். மனக்கட்டுப்பாட்டுடன் வழிபாடு செய்வதால் அகம் தூய்மை அடைகிறது. அகத்தூய்மையால் நல்ல உணர்வும், பயபக்தியும் ஏற்படும். #குறிப்பு :- தியானத்தின் மூலம் வெளியேறும் தூய எண்ண அலைகள் நம்மைச் சுற்றிச் சஞ்சாரம் செய்யும் பொழுது கண்ணுக்குத் தெரியாமல் உலவிக் கொண்டிருக்கும் தீயசக்திகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. மனிதர்களிடம் மறைந்துள்ள தீய எண்ணங்கள் முடுக்கி விடப்படுவதற்கு தீய ஆவிகளும் ஒரு காரணம். கூட்டு தியானத்திற்கு மேலும் சக்தி அதிகம்.]]>