நல்லவனாக மாற்று! செவ்வாடை அணிந்து கொண்டால் மட்டும் பத்தாது. *பத்து பேரை நல்லவனாக மாற்றும் அளவு உன் தொண்டு அமைய வேண்டும்.* தாெண்டு இருந்தால் தான் செடிக்கு வளர்ச்சி இருக்கும். *உன் தொண்டு ஒரு செடியின் தண்டுக்குச் சமம்.* என்னிடம் விளையாடாதே! ஆலயத்தை வைத்துப் பணம் பறிக்கும் விளையாட்டெல்லாம் வேண்டாம்.உன் விளையாட்டை வைத்துக் கொண்டு விளைவுகளை அனுபவிக்கிற போது அம்மாவை நிந்திக்காதே! நான் ஒதுக்கினால் ஒதுக்கியது தான். எடுத்துக்காட்டாக இரு! நீ ஆன்மிகத்தில் ஈடுபடும் போது என் பக்தன் உன்னையும் தெய்வமாக நினைக்கிறான்.* அதனால் நீ முதலில் பயபக்தியோடும், அன்போடும், பாசத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான் உனக்கும் பயன் கிடைக்கும்.அவர்களுக்கும் பயன் கிடைக்கும். தொண்டும் மனத்தூய்மையும்! தொண்டு செய்து கொண்டே வந்தால் மனம் தூய்மை அடைந்து கொண்டே வரும். இல்லை எனில் துண்டு துண்டாகப் போய்விடும். செவ்வாடையிலும் பொறாமை! செவ்வாடைகளுக்கிடையே பொறாமை அதிகமாகிக் கொண்டு வருகிறது. பொறாமையால் பாதிக்கப் படப்போவது நீதான் என்பதை மறவாதே! திருந்தாத தொண்டர்களுக்கு… இதுவரை உங்களை அடிப்பது போல அடித்தேன். அழுவது போல அழுதீர்கள். கொடுப்பது போலக் கொடுத்து வந்தேன்.சாப்பிடுவது போலச் சாப்பிட்டு வந்தீர்கள். அந்த நிலைமை மாறிவிட்டது. *இனி அடிக்கிற அடிதான் உண்மையான அடி. அடிக்குத்தான் திருந்தியாக வேண்டிய நிலை வந்து விட்டது.*]]>