நல்ல குருவினைக் கொள்ளுக

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர், குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவிழுமாறே.

—திருமந்திரம்
+++++++++++++++++++++++++++++++++++++ அறியாமையை அறிவனால் போக்கும் குருவினைக் கொள்ள மாட்டார். அறியாமையை நீக்க முடியாத ஒருவரை ஆசிரியராகக் கொண்டு அவரிடம் போவார். இப்படி அறிவில்லாதவரும், அறிவு புகட்ட முடியாதவரும் ஆகிய இருவரும் கூடி ஒன்று சேர்ந்திருப்பது, குருடனும் குருடனும் சேர்ந்து குருட்டுத் தனமாக ஆடி இரு குருடர்களும் அறியாமையால் துன்பக் குழியில் விழுவது போலாம்.
 ]]>