தை பிறந்தால் பொங்கலோ பொங்கல் என்பதும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதும், தை 1ம் தேதி பெரிய பொங்கல் என்பதும் வழி வழியாக வந்தவை.

அன்று அடுப்பென்ற பள்ளத்தை தோண்டி அதன்

மேல் பொங்கல் சட்டியாகிய புதுப்பானையை வைத்து, அதற்கு அழகுபடுத்தி, மஞ்சள் தோரணங்கள் கட்டி, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அடுப்பில் வைத்து, கற்புரம் ஏற்றி, பொங்கல் பானையில் அருகம்புல் இட்டு, பால் ஊற்றி, அது சூடாகிப் பொங்கி வரும் பொழுது, அறுவடைக்கு வந்த நெல்லை அரிசியாக மாற்றி, தண்ணீர் ஊற்றிப் பொங்கல் வைக்கிறோம்.

பானைக்குள் இருக்கின்ற பால் பொங்கி வரும்பொழுது ”பொங்கலோ பொங்கல்” என்று வாழ்த்தொலி எழுப்புகிறோம். சந்தோஷமாக உள்ளம் குளிர்ந்து வழிபடுகிறோம். பொங்கல் திருநாள் என்பது மனித நேயத்திற்கும், மிருக நேயத்திற்கும் முக்கியமாளது. அடுத்த நாள் வருவது மாட்டுப் பொங்கல். அது உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் விழா. உழவுத்தொழிலுக்கு மாடுகள் உறுதுணையாக இருந்து நமக்கு விவசாயத்திற்குப் பயன்படுகின்றன. அதற்கும் பொங்கல் இட்டு அதற்கும் வழிபாடு செய்து அதுவும் ஒரு தெய்வம் என்ற ஒணர்வோடு பசு, கன்று, காளை மாடுகளுக்கும் வழிபாடு செய்கிறோம்.அதற்கும் மனித நேயத்திற்கும் சம்பந்தம் உண்டு.

n

பொங்கல் திருநாள் என்பது வருடா வருடம் வருவதுதான். நம்மைப் பெற்றவர்களும், பெரியவர்களும், சிறியவர்களும், வெளிநாட்டில் உள்ள நம்மவர்களும் கூட பொங்கல் பண்டிகையைக் குதுாகலத்துடன் குடும்பத்தோடு வழிபடுவதால் பொங்கல் ஒரு முக்கியமான பண்டிகை என்பது சொல்லித் தெரிவதல்ல. நம் உணர்வோடு ஒன்றியது அது.

இதையே தமிழ்த்திருநாள் என்றும் சொல்வார்கள். வடக்கே இதை சங்கராந்தி என்றும் சொல்லுவார்கள். அனைத்தும் ஒன்றுதான். நல்ல உள்ளங்களும் நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களாக மாறுவதுதான் இத் திருநாளில் முக்கியம்.தை பொங்கல் 2010

ஆதிகாலத்தில் காட்டில் மனிதனும் மாடுகளும் மற்ற மிருகங்களும் ஒன்றாக வாழ்ந்தார்கள். அப்போது ஏற்றத்தாழ்வு என்பது கிடையாது. அதற்குப் பிறகு காட்டிலிருந்து மனிதன் நாட்டுக்கு வந்த பிறகு மனிதனுடைய எண்ணங்களும் மிருகங்களுடைய எண்ணங்களும் பாசம் என்ற உயர்வான பந்தங்களும் அறுந்து போய்விட்டன.

பண்டைய காலத்து மனிதன் காடுகளில், மலைகளில், குகைகளில் வாழ்ந்தான். மரத்தில் வாழ்ந்தான். இப்பொழுது மனித நேயம் அற்று வாழ்கிற காலத்திலே குகையிலும், மரத்திலும் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் தீவிரவாதிகள் வாழ்கின்றார்கள். அங்கிருக்கிற மிருகங்கள் அவர்களைக் கண்டு பயந்து நம்மை அழிக்க நாட்டுக்குள் வருகின்றன.

ஏன் மனிதன் தீவிரவாதியாக மாறினான்? கொடூரமாக மாறினான்? அவனும் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைதானே! ஏன் அந்த எண்ணங்கள் அவனுக்குள் வந்தன? அவனுக்குள் வளர்ந்தன? ஏன் அந்த நிலை வந்தது? என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். மக்கள் வெள்ளம் பெருகப் பெருக மக்கள் சந்தோஷம் அடைய வேண்டும்.

மலையிலிருந்து வரும் அருவி ஆறாக மாறிக் கடலில் சேர்ந்து நன்மை செய்கிறது. அந்தக் கடல் என்பது ஒரு எல்லைக்குள் இருந்து அளவோடு அலையாக வருகிறது. ஆனால் அது சீற்றம் அடையும் பொழுது அது என்னாகிறது? அது அழிவை ஏற்படுத்துகிறது. மனிதனுடைய உள்ளங்களும் கடல் அலை போல் அமைதியோடு இருந்தால்தான் அமைதியாக வாழ முடியும்.

ஆனால் அது அலை மோதும்பொழுது, கோபம் வரும்பொழுது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவனை அழித்து விடுகிறது. இயற்கை எப்படி மழையாகப் பெய்யும்பொழுது நிலம் தண்ணீரைச் சேகரித்து நன்மை தருகிறது. அதுபோல் சேகரிப்பதை நிலம் நிறுத்தி விட்டால் நாளை மறுநாள் நீர் கிடைக்காது என்பதை உணர வேண்டும் அதுபோல மனிதனுடைய உள்ளங்களில் நல்ல எண்ணங்கள் ஏற்படும்பொழுது அந்த எண்ணங்கள் சேகரிக்கப்பட்டு ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வை ஊட்டும்.

                                                                                                           தொடரும்…

நன்றி சக்தி ஒளி பிப்ரவரி 2010 பக்கம் 25 -29

 ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here