• எவன் ஒருவன் என் மூலமந்திரத்தை இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறானோ அவனுக்கு பல அற்புதங்களை நடத்திக் காட்டுவேன்.
  • நீ சொல்வது மூல மந்திரம். அது என்னுடைய மந்திரம். அதற்குத் தனிப் பலன் உண்டு.
  • படிக்கப் படிக்க மனதில் அவை பதிவது போல மந்திரம் படிக்கப் படிக்க என்னிடம் மதிப்பெண் பெறுவாய்.
  • நீ மருவத்துார் வரும்போதெல்லாம் சப்த கன்னியா் சந்நிதியில் ஒவ்வொரு தேவியின் இடத்திலும் நின்று மூலமந்திரம் சொல்லு.
  • அடிகளார் போற்றி மூன்று தடவை படித்துவிட்டு தினமும் படுத்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும். இம் முயற்சியில் வெற்றி பெற்ற ஆன்மாக்களுக்கு மறு பிறவி இல்லை.
  • நீ தினமும் சென்று வேலையில் அமரும் பொழுதும், அங்கிருந்து வீட்டுக்குச் செல்லும் போதும் ஒன்பது முறை ஓம் சக்தி சொல்லிவிட்டுச் செய்.
  • மந்திர வழிபாட்டில் உன் பாவங்கள் குறைவதோடு உன் ஊழ்வினை கரையவும் வாய்ப்புண்டு.
  • கஷ்டம் வரும்போதெல்லாம் மந்திர நுால் படி! எல்லாவற்றையும் உரு ஏற்று.
  • ஓம் சக்தி மந்திரந்தான் உனக்கு தாரக மந்திரம்.
  • வேண்டுதற்கூறு படித்து வந்தால் வேண்டியது கிடைக்கும்.
  • 108, 1008 படித்து வந்தால் நீ வசிக்கும் மனை விளங்கும். மனையும் வாங்கலாம்.
  • எவனொருவன் அடிகளார் 108 போற்றி, 1008 போற்றி படித்து வருகிறானோ அவனுக்கு பாவவிமோசனமடா!
  • கிருத்திகை நாளில் நீ தியானம், மௌனம், விரதம் எதுவும் செய்ய வேண்டாம். அடிகளார் 108 போற்றியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கவும்.
  • ஒரு நல்ல காரியம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் ஒரு தாளை எடுத்துச் சதுரமாக மூலமந்திரம் எழுதவும். பெண்களுக்கு கலியாணம் ஆக வேண்டுமானாலும் ஒரு தாளில் முக்கோண வடிவில் மூலமந்திரம் எழுதவும். தனியிடம் அமர்ந்து செய்ய வேண்டும்.
  • எனது மந்திரம் படிப்பவர்களுக்குத்தான் இனிமேல் காலம். அது பொன்னான காலம். அது பொன்னான காலம் என்பதை விடப் பொன்னான வாழ்வு என்று சொல்லலாம்.
  • அர்ச்சனை- அபிடேகம்- ஆராதனை- மந்திரம்- இவையெல்லாம் எதற்காக? ஆன்மாவும் மனமும் குளிர்வதற்காக! மந்திரங்களை மனதிற்குள் படித்தாலும் போதும்.
  • வீட்டு மனை வைத்துக்கொண்டு வீடு கட்ட முடியாமல் தரிசாக இருக்கிறதே என்று நினைப்பவர்கள் அங்கே மஞ்சள் நீர் தெளித்து 1008 மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து 1008 மந்திரம் படித்து வழிபாடு செய்து வந்தால் வேலைகள் சரிவர நடக்கும்.
  • நல்ல நாளும் கிழமையும் வரும்போது சக்தியை வழிபடுகிறவர்கள் காலை, மாலை கோலம் போட்டு எலுமிச்சம் பழ விளக்கேற்றி வைப்பது நல்லது.
  • யாராவது உன்னைத் திட்டினால் எதிர்த்துப் பேசாதே! மூல மந்திரம் சொல்!
  • ஒரு மனிதனுக்கு உயிர்ப்பு நுால் மந்திர நுால்! அது போதுமடா! வேறெதுவும் தேவையில்லை! நீ இங்கு கோயிலில் இருப்பது சில நேரந்தான். அந்த நேரங்களில் மூலமந்திரம் சொல்லிக் கொண்டே இரு.
  • உனக்கு உடம்பு சரியில்லை என்றால் சக்தி கவசம் படி.
  • நினைத்தது நிறைவேற வேண்டுமாயின் 51 தடவை அடிகளார் 108 போற்றி படி.
  • விடியற்காலை 5.00 மணிக்கு எழுந்து 108 படித்து வழிபாடு செய்வது ஒரு வேள்வி செய்வதற்குச் சமம்.
  • அடிகளார் 108 போற்றி ஒரு ரகசியப் புதையல். அதன் அருமை யாருக்கும் தெரியாது.                       
  •                                              -ஆன்மிக குரு அருளியவை.

                                                   -ஆதாரம் – சக்தி ஒளி (டிசம்பர்99)



    ]]>

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here