கலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய்

கலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய்: “தாயே! இந்த நாட்டில் இவ்வளவு அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கின்றனவே? இவ்வளவையும் பார்த்துக் கொண்டு இருக்கிறாயே?” என்று கேட்டார் ஒருவர். அவர்க்கு அன்னை கூறியது இது! “என்ன செய்வது மகனே! நீ கலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய். உலகெங்கும் தீமையும், அக்கிரமங்களும் நடக்கிறதே என்று நீ மட்டும் கவலைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. வெயில் கொடுமையாகத் தான் இருக்கிறது. தாயே நான் என்ன செய்வேன் என்று என்னிடம் வந்தால் வெயில் கொடுமை தாக்காதவாறு உனக்குக் குடை கொடுப்பேன். நிழல் பெறச்செய்வேன். நீ நிழலில் நடந்து போகல◌ாம். தாயை நோக்கி வருபவனுக்குத் தான் நான் குடை அளிக்க முடியும். என்னிடம் வரவே விரும்பாதவனுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றாள்.

ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் சக்திகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!!
 ]]>