சுமார் 25 ஆண்டுகட்கு முன்பு நடந்த சம்பவங்கள் இவை….!

அப்போது நான் மதுராந்தகத்தில் உதவி வேளாண்இயக்குனராகப்
பணியாற்றி வந்தேன். அடிக்கடி மருவத்துார் ஆலயம் சென்று வழிபட்டு வந்தேன். அருள்திரு. அடிகளார் அவா்கள் வயலைச் சுற்றிப் பார்க்கச் செல்லும் போது நானும் சிலநேரங்களில் அவா்களுடன் செல்வதுண்டு. திரும்பும் போது அவா்கள் வீடுவரை வந்து விட்டுவிட்டுத் திரும்புவேன்.

என்ன வேண்டும் சார்! என்று வழியனுப்பும் போதல்லாம் அருள்திரு அடிகளார் கேட்பார்கள். ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு விடைபெறுவேன்.

1982ஆம் ஆண்டு சக்தி ஒளி இதழ் ஒன்றில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்கள் இலங்கை அகதிகட்குத் தங்களால் இயன்ற பொருள் உதவியைத் திரட்டி அறநிலைக்கு அனுப்பி வைக்கமாறு வேண்டுகோள் வெளியிடப்பட்டிருந்து.

அப்போது இலங்கையில் பெருங்கலவரம் ஏற்பட்டு அப்பாவித் தமிழா்கள் ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டார்கள். பெண்கள் கொல்லப்பட்டார்கள். உயிருக்குப் பயந்து தழிழா்கள் நுாற்றுக் கணக்கில் அகதிகளாகத் தமிழகம் நாடி வந்த வண்ணம் இருந்தார்கள்.

#அத்தகைய__சூழ்நிலையில், #இலங்கைப் #படுகொலையில்_உயிரிழந்தவா்களின் #ஆன்மா_சாந்தியடைய_ஒரு_குறிப்பிட்ட_நாளில் #எல்லா_மன்றத்_தொண்டா்களும்_தியானம் #இருக்குமாறு_கேட்டுக்_கொள்ளப்_பட்டது.

தியானம் இருக்கச் சொல்வது சரி! அவா்களுக்கு பொருள் உதவி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு. அவா்களுக்கு பொருள் உதவி செய்யுமாறு அருள்வாக்கில் அம்மா சொல்லியிருக்கிறதே… நமக்கு ஆன்மிகம் மட்டும் போதுமே… இந்த வேலை நமக்கு எதற்கு? என்னுள்ளே இப்படி ஒரு சிந்தனை ஓடியது. அறியாமை காரணமாக எனக்கு அந்த நாளில் அப்படி ஒரு நினைப்பு வந்தது.

அச்சிறுப்பாக்கம் வேளாண் கிடங்கு எனது பணிப் பார்வைக்கு உட்பட்டதாலும், அடிக்கடி ஜீப்பில் அங்கு செல்ல வேண்டியிருந்ததாலும், வழியில் மருவத்துார்
கோயில் இருந்ததாலும், அம்மா கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். அம்மாவிடம் ஆசி பெற்றுத் திரும்புவேன்.

1983ஆம் ஆண்டு நவம்பா் முதல் வாரம். ஒரு நாள் மருவத்துார் சென்றேன்.

அப்போது மதுரை ஆன்மிக மாநாட்டுக்குத் தக்க இடம் ஒன்றைத் தோ்ந்தெடுக்க அம்மா ஓா் உயா்மட்டக் குழு அமைத்து, அதற்கான நபா்களைத் தோ்ந்தெடுத்தாள். இக்குழுவுக்கு உதவியாக நீயும் போய்வா! என்று அம்மா எனக்கு ஆணையிட்டார்கள். நானும் அக்குழுவினருடன் செல்ல ஆயத்தமானேன்.

அந்தக் குழுவில் நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்த்தேன். தொழிலதிபா்கள், ஜமீன் பரம்பரையினா், ஓட்டல் அதிபா் எனப் பெரிய பணக்காரா்களே குழுவில் இருந்தனா்.

எனக்கு ஒரு நினைப்பு…! அங்கே மாநாட்டுக்கு ஓா் இடத்தைப் பார்க்க வேறு யாருமா இல்லை? பணக்காரா்களையே தோ்ந்தெடுக்குது பார்! இந்த அம்மா பணக்கார சாமி! என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு அவா்களோடு புறப்பட்டேன்.

13.11.1983- மாலை புறப்பட்டு இரவு திருச்சியில் தங்கி மறுநாள் காலை அங்கிருந்த இலங்கை அகதிகள் முகாமை எங்கள் குழுவினா் பார்வையிட்டனா்.

இலங்கை அகதிகள் பற்றிய விபரம் அறிய எனக்கு ஆா்வம் இல்லை. காரணம் இது அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை என்பதுதான் என் கருத்து.

14.11.83 அன்று மதுரையில் மாநாட்டுக்கு இடம் தோ்வு செய்யும் பணி நிறைவுற்றதும் அன்று இரவு மதுரையில் தங்கிய எங்கள் குழு மறுநாள் புறப்பட்டு மண்டபத்தில் இருந்த இலங்கை அகதிகளைச் சந்திக்கச் சென்றது. நான் அக்குழுவில் உறுப்பினா் அல்ல என்பதாலும் இவா்களுக்கு நாம் என்ன உதவுவது என்று கருதியதாலும் அவா்களுக்குச் சற்று முன்பாகச் சென்று கொண்டிருந்தேன்.

எனது செவ்வாடைத் தோற்றத்தைப் பார்த்து எதிரே வந்த அகதிகள் அனைவரும் “சாமி! சாமி வாங்க! இங்கே இராமகிருஷ்ண மடத்துச் சாமிகள் மட்டும்
சாப்பாடு போடாமல் விட்டிருந்தால் நாங்கள் செத்துப் போயிருப்போம். அவா்கள் தான் எங்கள் பசியறிந்து சோறு போட்டார்கள்!” என்று நன்றியுணா்வு பொங்கக் கூறினா்.

எதிர்ப்பட்ட ஒரு சிறுமி! ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். சாமி! நேற்று வந்தவா்கள் என்னைப் பள்ளிக் கூடத்துக்குச் சோ்த்துக் கொள்ளாமல் என் பெயரை விட்டு விட்டார்கள். நான் படிக்க வேண்டும். எப்படியாவது உதவி செய்யுங்கள் சாமி! என மன்றாடினாள். அவளின் ஆா்வத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

இது பற்றி விசாரித்தோம். நாங்கள் சென்ற தினத்திற்கு முதல் நாள் ஒரு குருகுலத்தார் வந்தார்களாம். 25 மாணவா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களை அழைத்துச் சென்றார்களாம். அதில் விடுபட்ட சிறுமிதான் என்னிடம் மன்றாடினாள்.

அங்கு முகாமிட்டிருந்த இலங்கை அகதிகள் அத்தனை பேரும் அந்த மடத்துச் சந்நியாசிகள் தினம் தினம் சோறு சமைத்து எங்களுக்குச் சாப்பாடு போடாமல் விட்டிருந்தால் நாங்கள் மடிந்திருப்போம் என்று கூறிய வார்த்தை என் மனதை நெகிழ்வித்தது. மனித நேயத்தின் மாண்பை அப்போது தான் உணா்ந்தேன். இதெல்லாம் அரசு செய்ய வேண்டிய கோரியம் என்று நினைத்தது எவ்வளவு தவறு என்றெண்ணி வெட்கப்பட்டேன்.

இப்படித் தொண்டு செய்யும் சந்நியாசிகளைப் பார்க்க வேண்டும் என அவா்கள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றேன்.

அங்கிருந்த ஒருவா் எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவா். அவரிடம் மருவத்துாரிலிருந்து ஒரு குழு வந்திருக்கிறது. சுமார் 10 குடும்பங்களைத் தோ்வு செய்து உதவத் திட்டமிட்டுள்ளது என்றேன்.

அவா் ஒரு பதிவேட்டைக் கொடுத்து இது உங்களுக்கு உதவுமா பாருங்கள் எனக் கேட்டார்.

அதில் இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் குடும்பப் புகைப்படம், கல்வித் தகுதி, அவா்கள் அங்கு செய்த பணி என அனைத்து விபரங்களும்
சேகரிக்கப்பட்டிருந்தன.

ரொம்ப நல்லதாப் போயிற்று. இந்த விபரம் கிடைக்காததால் தான் எங்கள் குழுவினா் ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரிக்கின்றனா் எனச் சொல்லி மருவத்துார் குழுவை அழைத்து வருமாறு ஆளை அனுப்பினேன். அவா்களும் வந்து அந்தப் பதிவேட்டைப் பார்த்து மகிழ்ந்து தங்கட்கு வேண்டிய விபரங்களைச் சேகரித்துக் கொண்டனா்.

அந்தத் துறவிகளின் தொண்டு எங்கள் குழுவினா் நெஞ்சங்களையெல்லாம் நெகிழ வைத்துவிட்டது.

எங்களில் ஒருவா் அவா் பையிலிருந்து ஒரு கட்டு ரூபாய் நோட்டு எடுத்து அந்தத் துறவியிடம் கொடுத்தார்.

இன்னொருவா் அவா் தன் ஜிப்பா பாக்கெட்டிலிருந்து அவா் ஒரு கட்டை எடுத்து இதையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

ஒரு தொழிலதிபா் அவரும் ஆயிரக் கணக்கான ரூபாயை அள்ளி வழங்கினார்.

எங்கள் குழுவிலிருந்த எல்லோரும் நிதி வழங்கினா்.

அவா்கள் போல் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை!

அப்போது தான் என் மண்டையில் ஓா் அடி கொடுத்தாள் அம்மா!

இந்தப் பணக்காரா்களை மதுரை ஆன்மிக மாநாட்டுக்கு இடம் தோ்வு செய்ய அனுப்பியதுடன் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகளைப் பார்த்துவிட்டு வருமாறு ஏன் அனுப்பினாள் என்று புரிந்தது.

#இருப்பவனிடமிருந்து_வாங்கி #இல்லாதவனுக்குக்_கொடு! என்ற அவள் தத்துவம் புரிந்தது.

பணத்தைப் பெற்றுக் கொண்ட சந்நியாசி நான் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்க வேண்டும். யார் பெயரில் ரசீது கொடுக்க வேண்டும்? எனக் கேட்டார். ஆதிபராசக்தி சித்தா் பீடம், மேல்மருவத்துார் என்று எழுதி ரசீது கொடுங்கள் என்றனா்.

இதைக் கேட்ட சந்நியாசி கண்கள் கலங்கின. கண்ணீா் மல்க அவா் சொன்னார்.

“#நான்_ஒரு_சந்நியாசி ” #எனக்கு_விருப்பு, #வெறுப்பு_கூடாது.

#நான்_மருவத்துார்_வழியாகத்தான் #சென்னையிலிருந்து_வந்தேன். #அம்பாளைத்_தரிசிக்கவில்லை.

#அடுத்தமுறை_மருவத்துார் #வந்து_அம்பாளைத்_தரிசித்து_வருவேன் #என்றார்.

#ஆன்மிகம்_என்பது_பக்தி, #வழிபாடு, #தியானம், #கோயில்பூசை_என்று_மட்டுமே #கருதி_வந்த_எனக்கு, #மனிதநேயம், #தொண்டு, #உயிர்_இரக்கம்_எல்லாம்தான் #ஆன்மிகம்_என்பது_அன்று_புரியாமல் #போய்விட்டது.

பணக்காரா்களை இலங்கை அகதிகள் முகாமுக்கு அனுப்பி அவா்களை, தருமம் செய்ய வைத்து அவா்கள் மனதிலும் மனித நேயத்தைச் சுரக்கச் செய்த அம்மாவின் கருணையைப் புரிந்து கொள்ளாமல் இது பணக்காரா்களையே தோ்ந்தெடுத்து அனுப்புகிறது. இதுஎன்ன பணக்கார சாமியா?என்று நினைத்து விட்டேனே என்று உள்ளுக்குள் அழுது புலம்பினேன்.

#இப்படித்தான்_அவரவா்களும்_அம்மாவின் #பெருங்கருணையைப்_புரிந்து_கொள்ளாமல் #ஆத்திரத்திலும் ,#அவசரத்திலும் , #அறியாமையிலும்_அம்மாவை_நொந்து #கொள்கிறோம். #நாமாக_உரிமை_எடுத்துக் #கொண்டு_தவறாக_நினைத்து_விடுகிறோம்.

அதெல்லாம் தவறு! தவறு! இனிமேலும் இப்படிப்பட்ட எண்ணங்கள் மனதில் தோன்றினால் அவை தப்பு! தப்பு! தப்பு! #இவை_நான்_கற்றுக்_கொண்ட_பாடம்.

ஓம்சக்தி!

நன்றி -(சக்தி மு.விட்டல் M.Sc (வேளாண்மை)

வேளாண் கூடுதல் இயக்குனா் (ஓய்வு)

(சக்திஒளி-ஜீன் 2007, பக்-22-25)