நம் குருஅம்மாவை தரிசிக்க, ஜெர்மன் நாட்டு இளைஞர்கள் மூவர் வந்திருந்தனர். அவர்கள் இமயமலையில் நீண்டகாலம் தவம் செய்யும் ஒருவரிடம் தியானம் கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினர். அம்மா நீங்கள் எதற்காக தியானம் கற்கிறீர்கள்? என அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் தற்போது உலக நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களை தயாரித்து பூமிக்கடியில் பதுக்கி வருவதாகவும், அந்த அணு ஆயுதங்களை தியானத்தின்மூலம் செயலிழக்கச் செய்து உலக மக்களை அழிவிலிருந்து காக்கப் போவதாகவும் கூறினர். நம் குருஅம்மா உங்களை யாரோ ஏமாற்றிக்கொண்டு உள்ளார்கள் போல உள்ளது என்று கூறியதற்கு, பரபரப்போடு பேப்பரும், பேனாவும் எடுத்து,

"எங்கள் குருநாதர் இயற்க்கையை தியானத்தால் கட்டுப்படுத்தமுடியும்" 


என்று கூறியுள்ளார்கள் என்று ஏதோ வரைந்தனர். பிறகு இது wave method என்றும், இது earth method என்றும் சுட்டிக்காட்டி, இதன்மூலம் இயற்க்கையை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினர்.

“உங்கள் குரு இதை செய்து காட்டி உள்ளாரா?” என்று நம் அம்மா கேட்டதற்கு அவர்கள் இல்லை என்று பதிலுரைத்தார்கள்.அதற்கு நம் அம்மா இதை செய்துகாட்டினால்தான் யாரும் நம்புவார்கள். இல்லாவிடில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்கள். உடனே அந்த மூவரும், அப்படியென்றால் தியானத்தால் இயற்கையை கட்டுப்படுத்த முடியாதா? என்று கேட்டார்கள். அதற்கு நம் குருஅம்மா முடியும் என்றார்கள். செய்துகாட்டும்படி அம்மூவரும் வணங்கி நின்றனர். சரியென்று கூறிய நம் அம்மா, அம்மூவரையும் ஆலய மண்தரையில் அமர வைத்தார்கள். பிறகு கையில் ஒரு முத்திரை பிடித்தவாறு ஆகாயத்தை இரு நிமிடங்கள் பார்த்துவிட்டு, அவர்கள் மூவர் தலையிலும் கை வைத்தார்கள். பிறகு அவர்களை எழச் சொல்லி அவரவர் அமர்ந்த இடத்தை தொட்டுப்பார்க்கும்படி கூறினார்கள். தொட்டுப்பார்த்தவர்கள் அலறிக்கொண்டு கையை எடுத்து,தாங்கள் அமர்ந்திருந்த இடம்,தாங்கமுடியாத அளவிற்கு வெப்பமாக இருக்கிறது என்றனர். நம் குருஅம்மா புன்முறுவலோடு,இதற்கு பெயர்தான் wave method. ஆகாய வெளியில் எண்ணிலடங்கா மின்னணுக்கள் சுற்றிக் கொண்டுள்ளன. அதை கண்களால் வாங்கி,உள்ளுக்குள்ளேயே சுழற்சி செய்து உங்களுக்கு கொடுத்தேன். உங்களால் தாங்க முடியவில்லை.அதனால் இப்போது பூமியில் இறங்கிக்கொண்டுள்ளது என்றார்கள்.

பிறகு கீழிருந்த மணலை எடுத்து, இரு நிமிடம் தியானித்து, அவர்களிடம் கொடுத்து சாப்பிடும்படி கூறினார்கள். மணல் அவர்களுக்கு சர்க்கரையாக இனித்தது.