அவனவனும் வந்து கடைசியில் என்னிடம் கேட்பது என்ன? அமைதி ஒன்றுதான்! நிம்மதி ஒன்றுதான். அன்புக்கும், பண்புக்கும், பாசத்திற்கும் நான் பொறுப்பு. இவையெல்லாம் இந்த மண்ணில் உண்டு. (மேல்மருவத்தூர்) மனிதன் மனத்தை அலைபாய விட்டுவிட்டு அமைதியை இழந்து தவிக்கிறான். பணம் பணம் என்று ஓயாமல் அலைந்தால் கடைசியில் ஓய்ந்து போவீர்கள். உங்கள் ஆன்மாவிற்கு என்றும் அழிவில்லை. எனவே அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்து. தியானத்தில் மனத்தைச் செலுத்து. எவ்வளவுதான் ஓடியாடி அலைந்தாலும் சில நிமிட நேரமாவது தனிமையில் அமர்ந்து தியானம் பழகு! தியானத்தில் இரு!” அன்னையின் அருள்வாக்கு

]]>