ஆன்மிக குரு அருள்மிகு பங்காரு அடிகளாரின் 69 ஆவது பிறந்தநாள் விழா : மேல்மருவத்தூரில் கோலாகலம் (பட இணைப்பு). மேல்மருவத்தூரில் ஆன்மீக குரு அருள்மிகு பங்காரு அடிகளாரின் 69 ஆவது பிறந்தநாளை செவ்வடைபக்தர்கள் கடந்த 1,2,3 ஆந் திகதிகளில் மூன்று நாள் விழாவாகக் கோலாகமாகக் கொண்டாடினர். லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து அருள் தரிசனம் பெற்றனர். விழாவை முன்னிட்டுக் கலச விளக்கு, வேள்வி பூசை ,கலை நிகழ்ச்சிகள், தங்கரதத்தில் வரவேற்பு , ரூபா 1.5 கோடி மதிப்பிலான சமூதாய நற்பணி திட்ட உதவி, வாண வேடிக்கைகள் பெரிய அளவில் அன்னதானம் என்பன இடம்பெற்றன.

முதல் நாள் காலை தம் இல்லத்திலிருந்து புறப்பட்ட அடிகளாரை பக்தர்கள் ரதத்தில் அமர வைத்து கலை நிகழ்ச்சிகள் முன்செல்ல, ஆதிபராசக்தி இளைஞர்கள் அணியினர் பின் தொடர, சித்தர் பீடத்துக்கு அழைத்து வந்தனர். கருவறையில் தீபராதனை காட்டிய பின்னர் மண்டபத்தின் முன் அழகுற அமைக்கப்பட்டிருந்த அருள் தரிசன மேடையில் வந்தமர்ந்தார் அடிகளார்.

பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலரை பங்காரு அடிகளார் வெளியிட, சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி பி. முருகேசன், முன்னாள் நீதிபதி தணிகாசலம் மற்றும் இந்திய விமான நிலைய முன்னாள் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அருள் தரிசனம் தொடர்ந்து நடைபெற்றது.

ஆதிபராசக்தி பாதுகாப்பு அணித் தொண்டர்கள் கோ.ப. செந்தில்குமார் தலைமையில், பக்தர்கள் வரிசையாக அனுப்பப்பட்டனர். கோ.ப. அன்பழகன் முன்னிலையில், டாக்டர் ரமேஷ் மற்றும் தொழிலதிபர் ஜெய்கணேஷ் ஆகியோர் இதனை ஆரம்பித்து வைத்தனர்.

விழாவின் முதல் நாளன்று பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பாதபூசை செய்து ஆசிபெற்றனர். மாலையில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வந்தவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மந்திரங்கள் முழங்க கலச விளக்கு, வேள்வி பூசையை லட்சுமி பங்காரு அடிகளார் ஆரம்பித்து வைத்தார்.

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கமும் ஆதிபராசக்தி தொண்டர்களும் இணைந்து விழா ஏற்பாடுகளைச் சிறப்புற செய்திருந்தனர்.

நன்றி

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here