13015351_1162480740438423_4643330922914996772_nசித்திரை பவுர்ணமி விழாவை முன்னிட்டு மேல்மருவத்துாரில் 1008 யாக குண்டங்கள் அமைத்து மாபெரும் கலச, விளக்கு, வேள்வி பூஜை நடந்தது. ஆன்மீக குரு அருள்திரு அம்மா அவ்ர்கள் நடத்தினார்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 1008 யாக குண்டங்கள் அமைத்து மாபெரும் கலச, விளக்கு, வேள்வி பூஜையை இன்று காலை 10.30 மணிக்கு ஆன்மீக குரு திரு பங்காருஅடிகளார் நடத்தி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், முன்னாள் உயர்நீதிமன்ற நீதமன்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மக்கள் மன வளமும், மனித வளமும், தொழில் வளமும், உறவு வளமும் பெருகி வளர்ந்திடவும், மக்களிடம் தெய்வ பக்தி, உண்மை உணர்வுடன், அன்பும், பாசமும் பெருகிடவும், இயற்கை சீற்றங்கள் தணிந்து இயற்கை வளம் வளரவும் அன்னை ஆதிபராசக்தியை வேண்டி சங்கலபம் செய்து வேள்வி நடத்தப்பட்டது.

வேள்வியில் 1008 யாக குண்டங்களுடன், ஆன்மீக குரு அடிகளாரின் வழிகாட்டுதல்படி பல நுட்பமான சக்கரங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மேல் 10008 கலசங்களும், 10008 விளக்குகளும் பல இயற்கை விளை பொருட்களும் வைக்கப்பட்டு வேள்வி பூஜை நடத்தப்பட்டது.

இந்த வேள்வியின் துவக்கமாக மேல்மருவத்துார்ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் காலை 9 மணிக்கு துவங்கி யாகசாலை முழுவதும் திருஷ்டி எடுக்கப்பட்டது.

ஆதிபராசக்தி கருவறையின் முன் உள்ள பிரகாரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த பிரதான யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி வைத்து காலை 10.30 மணிக்கு ஆன்மீக குரு பங்காரு அடிகளார் வேள்வி பூஜையைத் துவக்கி வைத்தார்.

வேள்வியில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவர் அருள்மாெழி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், தமிழக உயர் அதிகாரி ராதாகிருஷ்ணன், ரயில்வே உயரதிகாரிகள் சிவானந்தம், செந்தில்குமார் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

வேள்வி நிறைவடைந்ததும், அவற்றில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்ய வேள்வி சாம்பலை எடுத்துச் சென்றனர். கடந்த 11 நாட்களாக பல லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகைள ஆதிபராசக்தி இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் முறையே இயக்கத் துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.

விழா ஏற்பாடுகளை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற சக்திகள், சக்தி.வாசன் மற்றும் சக்தி.ராஜேந்திரன் தலைமையில் சிறப்பாகச் செய்தருந்தனர்.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here