கிரகண நாட்களில் தியானப் பயிற்சி :

 ஆரம்ப நாட்களில் அம்மா இங்கே வந்து கோயில் பணிகளில் ஈடுபட்டிருந்த தொண்டர்கட்கும் பல்வேறு வகையில் பயிற்சி கொடுத்தாள். குறிப்பாகக் கிரகண நாட்களில் ஆலயத் தொண்டர்களையெல்லாம் வரவழைக்கச் செய்து கோயிலைச் சுற்றி அமர்ந்து கொள்ளும்படிப் பணித்து கிரகணம் தொடங்கும் நேரத்திலிருந்து முடியும் நேரம் வரை  ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தை மட்டும் சொல்லிக் கொண்டு மனத்தை ஒரு நிலைப்படுத்தும்படி ஆணையிட்டாள். சிலருக்குச் சில அனுபவங்கள் கிடைத்ததாகச் சொன்னார்கள். சிலருக்குப் புருவ மத்தியில் ஒளிப் பிழம்பு ஒன்று தெரிவது போல் காட்சி! ஒருவருக்கு அம்மாவின் ஒரே ஒரு காலடி மட்டும் காட்சி! இப்படிச் சிலருக்குச் சில அனுபவங்கள்அவனால் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்ய இயலவில்லை. நமக்கு ஒன்றும் புலப்படவில்லையே என்று மற்ற வரைப் பார்த்துப் பொறாமைப்பட மட்டும் முடிந்தது.

மனத்தைப் போகிற போக்கில் விட்டு விடுங்கள்:

இன்னொரு கிரகண நாள் வந்தது. அன்றும் அம்மா ஆலயத் தொண்டர்களை அமருமாறு பணித் தான் முன்பு சொன்னது போல மனத்தை ஒருநிலைப்படுத்துமாறு ஆணையிடவில்லை. ‘மகனே! இந்த முறை மனத்தை ஒரு நிலைப்படுத்தித் தியானம் செய்ய வேண்டாம்; மனத்தை அதன் போக்கிலே விட்டு விடுங்கள்’ என்று பணித்தான். இந்த முறைப்படி அமர்ந்தவர்கட்குக் கிடைத்த அனுபவம் புதியது! பெரும்பாலோர் தங்கட்குக் கால்மணி நேரத்துக்குப் பிறகு ஒன்றும் தெரியவில்லை என்றார்கள். அந்த முறையின் போதும் அவனுக்கு வந்த உணர்வும் கிடைக்கவில்லை. பெரும்பாலோர் தாங்கள் மனநிறைவோடு தியானத்தில் இருந்தோர் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போது என்னால் எதுவும் முடியவில்லை என்று சொல்லிக் கொள்ளலாமா? ஆகா! எனக்கும் நேரம் போனதே தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டான். சூரிய கிரகணம் எல்லாப் பத்திரிகைகளும் பரபரப்பு ஏற்படுத்திய சூரியகிரகணம் ஒன்று வந்தது சிலருக்கு நினைவில் இருக்கலாம். அந்தக் கிரகணத்துக்கு பின் உலகத்தின் பல பகுதிகள் அழியும்; நிலநடுக்கம் உண்டாகும் என்றெல்லாம் பத்திரிகைகள் பெரிதுபடுத்தின. யாரும் வெளியே அருள்வாக்கில் கேட்டுச் சிலர் பயன் பெற்று வருகின்றார்கள்.

மாடு மேய்க்கும் இடையவனும்: புல்லாங்குழல் இசையும்:

தியானத்தின் மூலமாக மனத்தை ஒருமுகப்படுத்த முயன்று வந்த தொண்டர் ஒருவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அம்மா சொன்னாளாம்.’மகனே! மனம் பல்வேறு விதமாக அலை பாய்கிறதே என்று தளராதே! மாடு மேய்க்கும் இடையர்களிடம் ஒரு பழக்கம் உண்டு தெரியுமா? மாடுகளையெல்லாம் ஓட்டிகொண்டு வரும் இடையன் அம்மாடுகளை எல்லாம் தம் இஷ்டம் போல மேய விட்டுவிடுவான்; மாலைவேளையானதும் அவற்றையெல்லாம் ஓரிடத்தில் சேரும்படிச் செய்ய வேண்டும். அதற்காக என்ன செய்வான் தெரியுமா? கையில் உள்ள புல்லாங்குழலை எடுத்து இசைப்பான்; அருகில் உள்ள மாடுகள் வந்துவிடும்; அப்பால் உள்ள மாடுகளும் வந்துவிடும்; இப்படியே நாலாபக்கத்திலும் சென்று மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் எல்லாம் வந்து சேர்ந்துவிடும். அது போலவே நாலா பக்கத்திலும் அலைபாய்கின்ற மனம் மந்திர செபத்தின் மூலமாகத் தியானத்தில் சிறிது சிறிதாக வந்து ஒன்றிவிடும். மனம் நாலா பக்கத்திலும் அலைபாய்கிறதே என்று தளர்ந்துவிடக் கூடாது; போகட்டும் என்று விட்டுவிடு; பின்னர் தானாக வந்து சேர்ந்துவிடும்’ என்றாளாம். தியான முறைகளில் உள்ள இந்த நுணுக்கத்தைச் சொன்ன அம்மா ஆலயத்துக்கு வந்து பயன் பெறுவது எபபடி என்பதையும் உணர்த்தினான்.

ஆலயத்துக்கு வந்து பயன் அடைவது எப்படி?

‘மகனே! இந்தச் சந்நதிக்கு வருபவர்கள் தனியான ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு அமைதியைக்; கடைப்பிடித்தால்-எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து பழகினால் இந்த ஆலயத்துக்கு வந்ததற்குப் பயன் உண்டு” என்று அருளியிருக்கின்றான்.

ஆனால் இன்று ஆலயத்துக்கு வருகின்ற பொதுமக்கள் படித்தவராய் இருந்தாலும் சரி! படிக்காதவராய் இருந்தாலும் சரி! சற்று நேரமேனும் அமைதியாய் உட்கார்ந்து மௌனமாக இருக்க பழகமாட்டேன் என்கின்றார்கள்! பத்திரிகைச்செய்திகளைப் பற்றி காரசாரமாப் பேசுவது;  மந்திரிகைகளையும், அதிகாரிகளையும் பற்றி விமர்சனம் செய்வது; தங்கள் ஊர்ச்சண்டை, வீட்டுச்சண்டை பற்றிப் பேசுவது; கட்சி அரசியல் பற்றிச் சுவையோடு பேசுவது; சினிமா நடிக நடிகையர்கள் பற்றிப் பேசிப் பொழுது போக்குவது இவற்றில் தான் அக்கறை காட்டுகின்றார்கள். தொண்டர்கள் சிலர் இப்படிப்பட்டவர்களை நோக்கி அமைதியாக கூறினால் பொது மக்கட்கு மூக்கின்மேல் கோபம் வருகிறது! என்ன செய்வது?

ஆலயத்தில் எப்படிப் பொழுதைக் கழிப்பது?

கடவுள் தொடர்பான நல்ல செய்திகளைப் பேசலாம்; தனியாக உட்கார்ந்து 108 மந்திரங்களையும், 1008 மந்திரங்களையும் படிக்கலாம்; உரக்கப் படிப்பதைவிட மனத்துக்குள் சொல்லிப் படிக்கலாம்; அன்னையின் புகழ்மிக்க பாடல்களைப் பாடலாம், இல்லையேல் ஒரு நாளை எடுத்துக் கொண்டு 1008 தடவை. ‘ஓம் சக்தி’ என்று சொல்லிக் கொண்டு எழுதலாம்! கண்ணும், மனமும், கையும் ஒருங்கிணைந்து  ஒன்றுபடும் பயிற்சி இது! இந்தப் பயிற்சிகளால் பல்வேறு விதமான பலன் உண்டு; ஆலயத்தில் இப்படியெல்லாம் செய்து பலன் பெறுவதை விட்டு விட்டு ஊர்க்கதை, உலகக்கதை, சினிமாக் கதை, அரசியல் பேச்சுப் பேசி ஆலயத்திற்கு வந்து செல்பவர்கள் பயன் இன்றி வந்து செல்பவர்களே!

ஆலய எல்லையில் பத்திரிகை படிக்காதே!

சந்நதியில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஒருவரைச் சுடடிக் காட்டி, ‘இங்குப் பத்திரிகைகள் எதையும் படிக்க வேண்டாம் என்று சொல் மகனே!” என்று தொண்டர் ஒருவர் மூலம் அம்மா கட்டளை இட்டது உண்டு. அவனும் அங்கு அதைக் கேட்டவாறு நின்று கொண்டு இருந்தான். பத்திரிகைகள் படிப்பது அவ்வளவு பெரிய பாவகாரியமா? அம்மா ஏன் வேண்டாம் என்கின்றான் என்று நினைத்துப் பார்த்தான். புரியவில்லை; சில ஆண்டுகள் கழிந்த பிறகு இது பற்றிப் பெரியவர் ஒருவரிடம் விளக்கம் கேட்டான். அந்தப்  பெரியவர் சொன்ன பதில் இது! ‘எந்த ஆலயத்திலும் தெய்வத்தின் அருள் அலைகள் (Spirltvel Vibrations) பரவியபடி இருக்கும்; அங்கே பத்திரிகை படிப்பவர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, கலவரம் போ]]>