மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் சக்திமாலை இருமுடி விழா தொடங்கியது

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் இன்று முதல் தைப்பூச சக்தி மாலை – இருமுடி விழா தொடங்கியது .

இன்று அதிகாலை 4 மணிக்கு ஆதிபராசக்தி கருவறையில் சுயம்பு அன்னைக்கு இருமுடி அபிஷேகத்தை மேல் மருவத்தூர் ஆதிபராக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார் .

இன்று தொடங்கிய இருமுடி விழா தொடர்ந்து 02–02–2015 வரை 55 நாட்கள் நடைபெறுகிறது .

இருமுடி செலுத்த வரும் பக்தர்கள் வசதிக்காக முதலிலேயே ஆன் – லைன் மூலம் பதிவு செய்யும் முறை இந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது .

இருமுடி செலுத்த வரும் பக்தர்களுக்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 30 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்பும் பணியினை இயக்கத் துணைத் தலைவர் கோ . ப . செந்தில்குமார் தலைமையில் இளைஞர் அணியினர் செய்து வருகிறார்கள் .அவர்களே பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற சுகாதாரமும் பொறுப்பேற்று செய்து வருகிறார்கள் .

இருமுடிகள் பிரித்து கருவறை பகுதியில் சுயம்பு அன்னைக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்யும் பொறுப்பை வேள்விக் குழுவினரும், மகளிர் அணியினரும் இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் செய்கின்றனர் .

இருமுடி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்கும் ,தொண்டர்களுக்கும் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது .

விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் இயக்கத்தின் அனைத்து அமைப்புகளும் சிறப்புடன் செய்து வருகிறார்கள் .

பக்தர்களின் வசதிக்காக தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது .

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here