ஓம்சக்தி!ஆதிபராசக்தி!!

தீபாவளிநல்வாழ்த்துக்கள்!

  தீபாவளி வருடம் தோறும் வருகிறது,போகிறது.அதுபோல மனிதனுடைய எண்ணங்களும் வருவதும் போவதுமாக இல்லாமல் அவைநல்ல எண்ணங்களாக வளர்ச்சியடைய வேண்டும்.தீபாவளி மற்றும் பண்டிகைகள்   வரும்போது பிறர்க்கு உதவிசெய்ய வேண்டும்,உபகாரங்கள் செய்ய வேண்டும் என்று வெறும் வார்த்தைகளால் சொன்னால் மட்டும் போதாது,சொல்வதைப் போலவே செய்யவும் வேண்டும்.   தீபாவளி வரும் பொழுது தீபங்கள் ஏற்றப்படும் போது வரும் ஒளியால் எப்படி இருள் நீங்குகிறதோ அதுபோல மனிதருடையமனதில் உள்ள இருள்நீங்கி ஒளிபெரும் பொழுது அந்த ஒளியை மற்றவர்களோடு பகிர்ந்து,அவர்கள் மன இருளையும் நீக்க வேண்டும்.   பிறர்க்கு இனிப்பு மற்றும் பலகாரங்கள் கொடுக்கும் பொழுது இனிய முகத்துடனும் , அன்புடனும் இனிப்பான வாழ்த்துச் சொற்களுடனும் கொடுக்க வேண்டும்.   ஆதி காலத்திலிருந்தே எண்ணெய் வித்திலிருந்து எண்ணெய் எடுத்து தீபத்தில் ஊற்றி திரிபோட்டு ஒளி உண்டாக்குகிறோம்.அதில் மாற்றமில்லை.அதைப்போல வேற்று மனித எண்ணங்களிலும் சிறுவயதிலிருந்து முதியோர் ஆகி இறுதிநிலை வரும் பொழுதும் அன்பு,பாசம், எனும் பழக்கம் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் நாம் தர்மம் செய்கிறோமோ,செய்யவில்லையோ,அன்புவார்த்தைகளும்,பாசணைப்புகளும் ,பிணைப்புகளும் நாம் தணித்து வாழாமல் கூட்டுக் குடும்பமாக வாழும் போதுதான் தொடர்ந்து நம்மிடையே இருக்கும்.   தனித்து வாழ்வதும் தனிமரமாக இருப்பதும் நிலைத்து இருக்காது.கூட்டாக வாழும் வாழ்க்கையும்,செயல்களும் தான் நிலையாக இருக்கும்.நான் படித்து விட்டேன்,திருமணம் செய்து கொண்டேன் என்று கூறி தனித்து வாழ முற்படும் போது அதற்கென்று வேலையாட்களும் தனியாக அடுப்பு,தனியாக கேஸ் என்ற தேவைகளெல்லாம் ஏற்படுகின்றன.ஆனால் கூட்டுக் குடும்பமாக இருக்கும் பொழுது அதற்கென்று எல்லாம் பெரியவர்களே பார்த்துக் கொள்வார்கள்:பார்த்துச் செய்வார்கள்.தங்களால் முடிந்த உதவிகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.   தனியாக வைக்கப்படும் கேஸ் சில நேரங்களில் கேசாகிறது. உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு உள்ளே அவை வேகமாகப்பாஸ் ஆவதற்கு  அதுவே  பாஸ்போர்ட் ஆகிவிடுகிறது. இன்பம் எங்கும் பொங்கும் தீபாவளியாக ஒருவருக் கொருவர் அன்பு, பண்பு பாசத்தைப் பகிர்ந்து கூட்டுக் குடும்பமாக இருந்து செயல்படும் போது ஒலி,ஒளிதரும் பட்டாசுகள் கொளுத்தியும் வெடித்தும் குழந்தைகள் உள்ளங்களும் தாய்தந்தையர் உள்ளங்களும் தாத்தா பாட்டி உள்ளங்களும் பூரிப்புடன் மகிழ்ச்சியாக இருக்கும், இந்த காலத்தில் வியாபாரம் என்பது 4 வயது முதல் 10வயதுவரை உள்ளகுழந்தைகள் சம்பந்தமான பொருள்கள் வியாபாரத்தில்தான் பெரும்பாலும் நடக்கிறது. அவர்களே பெரியவர்கள் ஆகும்போது அவர்களுக்காக எது செய்தாலும் பெரிய அளவில் எடுபடாது,.விற்பனைஆகாது.   இனிப்புகளும்,காரங்களும் செய்யும்பொழுது,லட்டு போன்ற பலகாரங்கைல் பிள்ளைகளுக்கு என்ன பிடிக்குமோ என்ன தேவையோ அந்த உணவு வகைகள் செய்து கொடுத்து செயல்பட வேண்டும்.   இனிப்புகள் செய்து கொடுத்தால் மட்டும் போதாது,அந்த இனிப்போடு பாசத்தையும் அவர்களுக்குச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.   கடல் அலை ஒய்வது கிடையாது.அதுபோல நம் தர்மத்திற்கு ஓய்வு கிடையாது .அந்த தர்மம் நமக்கு எப்போதும் உதவியாக இருக்கும்.   தர்மம் செய்யும் பொழுது அதர்மத்தை நினைக்காதீர்கள் .செய்து கொண்டே இருங்கள்.கடல் அலை வந்து வந்து போகிறது. ஆனால் அது பொங்கி எழும்போது பல இன்னல்கள் உண்டாகின்றன.   தலை குளித்து முழுகி குளிர்ச்சியாக இருப்பது போல,தீபாவளியன்று பெய்த மழையால் பூமியும்,காற்றும் குளிர்ந்து பறவை இனங்களும்,மிருகங்களும் சந்தோஷமாக இருப்பது போல,மனிதர்களும் சந்தோஷமாக உள்ளனர். இதையெல்லாம் செய்ய நேரம் இருக்குமா…? அவசரமாகப் போக வேண்டுமே என்றெல்லாம் பார்க்காதே…! மணியை (நேரத்தை) பார்க்காதே…! மணியைப் (Money – பணம்) பார்க்காதே…! உள்ளத்தில் உள்ள மணியைப் பாரு ! கோயில் மணியைப் பாரு ! தர்ம மணியைப் பாரு ! உள்ள மணியைப் பாரு ! பாசத்தைப் பாரு ! கூட்டுக் குடும்பம் என்பதைப் பார் ! சந்தோசஷமாகப் பார் ! அப்படி வாழ்ந்தால்,ஆடல் பாடல் என்றால் எப்படி சந்தோஷம் இருக்குமோ,தீபாவளி என்றால் எப்படி உற்சாகம் இருக்குமோ,அப்படியே தினந்தோறும் இருக்கும்.   தீபாவளி என்றால் என்ன? அது உள்ளம் குளிர வைத்து, மனம் குளிரவைக்கச் செய்கிறது.அத்தகையை உணர்வு கூட்டுக் குடும்பத்திலிருக்கும் பொழுது,தாய் தந்தையரை அரவணைத்து நடத்தும் பொழுது இருக்கும்.   தீபாவளியை இந்தியா முழுவதும், வெளிநாடுகள் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.உறவினர்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்தால்கூட தன் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள்.   தீபாவளி எனும் பண்டிகை தேவைதான்.தீபாவளி எனும் பண்டிகையின் போது வீட்டைச் சுத்தம் செய்வது போல,உடலைச் சுத்தம் செய்வது போல,பாத்திரங்கள் சுத்தம் செய்வது போல.விளக்குகள் சுத்தம் செய்வது போல,தங்கள் உள்ளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.   தீபாவளி வருடா வருடா எதோ வருகிறது,போகிறது என்று நினையாமல்,நாம் கொடுப்பதை தீபாவளியன்றுதான் கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல்,நாம் இருக்கும் வரை இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும்,கொடுக்கும் பொழுது அன்பு இருக்க வேண்டும்.முகம் தெளிவாக சந்தோஷமாக இருக்க வேண்டும்.   இல்லாதவர்கள் தன்னால் தன் உழைப்பைத்தான் பிறருக்குக் கொடுக்க முடியுமென்றால், நாம் அவர்களுக்கு மற்றவர்களுக்கு தங்கள் உழைப்பைக் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.நீயும் உழைத்து சம்பாதித்து இல்லாதவர்களுக்கு ஏதேனும் செய் என்று அன்புடன் அவர்களிடம் கூறி அவர்களைப் பழக்க வேண்டும்.அப்படிப் பழக்கினால் அவர்களும் செய்வார்கள்.தர்மம் பரவும்.   இப்போதுள்ள விஞ்ஞானத் துறைகளில் அழிவுகளும் ஏற்படுகின்றன.அதைச் செய்யும் விஞ்ஞானிகளே அச்சப்படும் அளவு அழிவுகள் உள்ளன.   மெய்ஞ்ஞானத்தில் ஏற்படும் அன்பாலும்,உயர்வாலும்,உணர்வுகளாலும்,உள்ளங்கள் அழிவது கிடையாது.விஞ்ஞானத்தால்தான் குண்டுகள் வீசுவதும்,அழிவுகளும் உள்ளன.   சிறுசிறு வர்த்திகள் (ஊதுவத்திகள்) போல நம் உள்ளங்கள் இருக்க வேண்டும்.அவை சிரிப்பது போல, நம் மனம் நல்லெண்ணங்களை பரப்பி மகிழ வேண்டும்.அவை சிறுசிறு வெளிச்சம் கொடுக்கின்றன.அதுபோல மனித உள்ளங்களும் சுறுசுறுப்பாக இருந்து பலருக்கு ஒளி கொடுத்து நல்லதை செய்ய வேண்டும்.   அந்த ஊதுவத்திகளை சிறுசிறு பக்திகள் என்று நினைக்காதீர்கள்.அவற்றால் ஏற்றப்படும் மத்தாப்புகளால் வெளிப்படும் கலர்கலரான வெளிச்சம் நமக்கு மகிழ்ச்சி தருவது போல,தருமம் எனும் பொறுப்பேற்று,உள்ளத்தில் அதர்மத்தை இல்லாமல் செய்ய வேண்டும்.   போனதோ பொற்காலம்.நேற்று இன்று,நாளை!நேற்றும்,இன்றும் பரவாயில்லை.நாளை என்னவோ,ஏதோ என்று நினைகத் தேவையில்லை தர்மம் செய்யும் பொழுது நம்மிடம் உ/ல்ளது எல்லாம் தழைக்கும்.அதனால் துணிந்து செயல்பட வேண்டும்.   எப்போதுமே கடல் அலை மாறுவதில்லை.அதில் சோதனை செய்யும் பொழுது கூட அது அமைதியாக ஒரு எல்லைக்குள் இருக்கின்றது.அக்கிரமம் அதிகமாகும் பொழுதுதான்,அது புயலாக மாறுகிறது.   அதுபோல தருமம் ஒரு நிலையாக இருக்க வேண்டும்.தர்மத்தால் என்ன பலன்,ஏது பலன் என்று நினைக்காமல் தர்மத்தைச் செய்து பாருங்கள்,பழகிப் பாருங்கள்.நீங்களே உணர்வீர்கள்.   இப்போதுள்ள நிலைமைகளைப் பார்க்கும் பொழுது,சிலர் பழமொழி சொல்வது போல,நண்பனை விட,தீயவனே மேல் என்று சொல்வார்கள்.தீயவனைப் பார்க்கும் பொழுது அவன் என்ன செய்கிறான்,ஏது செய்கிறான் என்று கவனித்துக் கொண்டே இருப்போம்.   நண்பனை என்ன செய்கிறான்,ஏது செய்கிறான் என்று கவனிக்க மாட்டோம்.ஆனால் காலம் மாறும்போது,பணத்தின் மேல் நண்பனுக்கு ஆசை எண்ணம் வந்து விடுகிறது.நம்மைப் பொறுத்த வரை தாழ்ந்தவன் கிடையாது.உயர்ந்தவன் கிடையாது.எல்லோரும் சமமே !   எல்லாம் சமமான ஒரு நிலையில் இருக்கணும்.சமவெளியாக இருக்கும் பொழுதுதான்,தண்ணீர் ஒரு இடத்தில் பாய்ச்சினால்,எல்லா இடத்திற்கும் சமமாகப் பாயும்.உள்ளத்திலிருந்து அன்பைக் கொடுக்கும் பொழுதும் ஏற்றத்தாழ்வு பாராமல் சமமாகக் கொடுக்க வேண்டும்.   ஒரே மாவை வைத்துப் பல பலகாரங்கள் செய்யபடுகின்றன.இனிப்புகள் செய்ய சர்க்கரையும் கலக்க வேண்டியுள்ளது.வெல்லமும் கலக்க வேண்டியிருக்கிறது.சர்க்கரை சேர்க்கும் பொழுது வருவது போல வெல்லம் சேர்க்கும் போழுது நோய் வருவது கிடையாது.   வெல்லத்தோடு சுக்கு,மிளகு,திப்பிலி,புதினா,கொத்தமல்லி என்று சேர்த்து காபி போல அதைக் குடிக்கும் பொழுது உடலுக்கு நன்றாக இருந்தது.   இப்போது பால் என்று கலந்து காப்பி சாப்பிடும் பொழுது எந்தப் பால் சாப்பிடுகிறோம் என்று கூடத் தெரிவதில்லை.   உள்ளத்தில் தூய்மை வளர்ந்து நன்றாகச் செய்ய வேண்டும்.பார்வையின் நோக்கு தூய்மையாக,நன்றாக இருக்கணும்.காதில் கேட்கினற கேள்விகள் நன்றாக இருக்கணும்.சொல்கின்ற சொல் நன்றாக இருக்கணும்.   நாட்டியத்திற்காகத் தாளம் போடுவதா,தாள்த்திற்காக நாட்டியம் ஆடுவதா என்ற பிரச்சினை இப்போது உண்டு.தாளத்திற்காக நாட்டியமே தவிர,நாட்டியத்திற்குத் தாள்ம் இல்லை.இதற்கு அது என்றால் ஒத்து வருவதில்லை.   நாட்டிற்கும் தர்மம் தேவை.அன்பு உண்டு! பாசம் உண்டு!பிறர் என்ன செய்கிறார்கள் என்பது நமக்கு தேவையில்லை.தன்னைத் தானே திருத்திக் கொள்வதற்கும்,அன்பு,பன்பு,பாசத்துடன்,பலருடன் கூட்டுக் குடும்பத்தில் ஒன்றாக வாழ நம் உண்டு!அன்பு உண்டு!   ஓம் சக்தி !ஆதிபராசக்தி ! தீபாவளி வாழ்த்து!அம்மாவின் ஆசி!   நன்றி   சக்தி ஒளி நவம்பர் 2014   பக்கம் 5-9

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here