இந்தப் பாரத நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர்

வாழ்ந்த நம் முன்னோர்கள் ஓரளவு விஞ்ஞான அறிவும் பெரிய அளவில் மெஞ்ஞானமும் பெற்றிருந்தனர். இடைக்காலத்தில் என்ன காரணத்தாலோ இவை இரண்டுமே நம் நாட்டில் அதிகம் பயிலாமல் போய்விட்டன. மேல் நாடுகளைப் பொறுத்தமட்டில் விஞ்ஞான வளர்ச்சி மிக அதிகமாகப் பரவத் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெய்ஞ்ஞானம் என்பதே வெறும் கற்பனை என்ற எண்ணம் பரவலாகத் தோன்றி வளர்ந்தது. விஞ்ஞான ரீதியாக சோதனைக் குழாய்க்குள் போட்டு ஆராய முடியாத அனைத்தும் பொய்யானவை என்ற எண்ணம் வலுப்பெறலாயிற்று. அதேநேரத்தில் அந்த நாடுகளில் வாழ்ந்த மெய்ஞ்ஞானிகள் சிலர் இந்த வாதம் அர்த்தமற்றது என்று நினைத்துக் கூறியும் வந்துள்ளனர்.

ஆனால் தம்முடைய நாட்டைப் பொறுத்துவரை இந்தத் தவற்றை அதிகமானவர்கள் செய்துவிட வில்லை. எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்தாலும் அவை அனைத்தும் மெய்ஞ்ஞானத்துள் அடங்கிவிடும் என்று நம்பினார்கள்; கூறியும் உள்ளார்கள் இதை நிரூபிக்க அதிகத் தூரம் செல்லத் தேவை இல்லை.

மாணிக்கவாசகர், தாயுமானார் போன்ற ஆன்மஞானிகளும், முரஞ்சியூர் முடி நாகராயர் போன்ற சங்க தாலத்தமிழ் அறிஞர்களும் தாம் பாடியுள்ள பாடல்களில் எவ்வளவு விஞ்ஞானக் கருத்துக்களைக் கலந்து குழைத்துத் தந்துள்ளனர் என்பதைக் காணும் பொழுது நாம் வியப்பில் மூழ்கிவிடுகிறோம். இப்பெருமக்கள் விஞ்ஞானத்தைப் போதிக்கும் பாட நூல்கள் எழுத வரவில்லை. மெய்ஞ்ஞானிகளாகிய அவர்கள் உலகம், உயிர்கள் மனிதன் என்பவற்றின் இடையே காணப்பெறும் தொடர்பை ஆராய முற்பட்டனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் இத்தொடர்பு ஆராய முற்பட்டனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் இத்தொடர்பு முற்றுப்பொறாமல் வேறு எங்கோ ஒரு பொருளிடம் சென்று லயிப்பதைக் கண்டுகொண்ட னர். அந்தப் பொருள் பிற அனைத்தையும் தன்னுள் அடக்கியுள்ளதையும், அதே நேரத்தில்,

தான் மட்டும் எல்லாப் பொருளிலும் கலந்தும், அவற்றினின்று பிரித்தும் இருப்பதையும் கண்டுகொண்டனர்.

இப்பேருண்மையாகிய மெய்ஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கிய அவர்கட்குச் சோதனைக் குழாயின் உதவி இல்லாமலே விஞ்ஞானத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது. என்றாலும் விஞ்ஞானத்தைப் பேசுவது அவர்கள் குறிக்கோள் இல்லை. மெய்ஞ்ஞானம் பேசிக்கொண்டு வரும்பொழுது தேவை ஏற்பட்ட இடத்தில் நம் விஞ்ஞான அறிவை வெளிக்காட்டினார்கள். சில உதாரணங்கள் மூலம் இதனை நன்கு அறிந்துகொள்ள முடியும்.

கோப்பர் நிக்கஸ், கலிலியோ என்ற இரண்டு விஞ்ஞானிகள் தோன்றுவதற்கு முன்னர் மேலைநாட்டார் இந்தப் பூமி தாம் கண்ணிற் காண்கின்றபடியே தட்டையாக உள்ளது என்றும், சூரியன் முதலிய கோள்கள் இந்தப் பூமியை வலம் வருகின்றன. என்றுங் கருதியிருந்தார்கள். மேலே கூறிய இரண்டு விஞ்ஞானிகளும் இதனை மறுத்துப் பூமியுக் கோள வடிவமானதுதான் என்றும், பிற கோள்களைப் போலவே இந்தப் பூமியாகிய கோளமும் கதிரவனைச் சுற்றி வருகின்றது என்றுங் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறியதனால் என்ன பாடுபட்டார்கள் என்பதை வரலாறு தமக்குக் கூறுகின்றது.

ஆனால் இந்த இரண்டு விஞ்ஞானிகளும் பிறப்பதற்கு 1600 (ஆயிரத்தி அறுநூறு) ஆண்டுகளின் முன்னர் இத் தமிழ்நாட்டில் வாழ்ந்த முரஞ்சியூரி முடிநாகராயர் என்ற தமிழறிஞர் மெய்ஞ்ஞானி இவர்கள் கூறிய கருத்தைக் தம்பாடல் ஒன்றில் அனாயசமாகக் கூறிச் செல்கிறார்.

‘‘மண் திணிந்த நிலனும் நிலன் எந்திய விசும்புர் விசுப்பு தைவரு வனியும் வனித்தலைஇய தீயும்”

தீ முரணிய தீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல் (புறநானூறு -2) புறநானூறு என்ற சங்கப்பாடல் தொகுப்பில் இரண்டாவதாகக் காணப்பெறும் பாடலின் முதல் நான்கு அடிகள் இங்கே காட்டப்பெற்றுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட

பாட்டாகலின் பொருள் செய்வது சற்றுக் கடினமாக இருக்கும். தைவருதல், தடவிக் கொண்டு செல்லுதல் வளி – காற்று, விசும்பு ஆகாயம். பூமியைச் சுற்றிப் பிற கோள்கள் வருகின்றன என்று உலகத்தார் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு தமிழ் அறிஞன் பேசும் விஞ்ஞானம் எத்தகையதாக உள்ளது என்பதைக் காணலாம். மண் திணித்த நிலன் என்றால் செறிவான பூமி (னுநளெந ஆயவநசயைட) என்பது பொருளாகும். அடுத்துவரும் பகுதி ஆழ்ந்து சிந்திப்பதற்கு உரியது.

‘‘நிலன் ஏந்திய விசும்பு என்றால் ஆகாயத்தில் பூமியாகிய உருண்டை பிடிமானம் இல்லாமல் உள்ளது என்பது பொருளாகும். உள்ளங் கையில் ஒரு பொருளை வைத்துக் கையை நீட்டிக் கொண்டு ஏதோ ஒன்றை ஏந்திக்கொண்டு வருகிறோம் என்று கூறுவார்கள். அதற்குப் பதிலாக, அதே பொருளை விரல்களால் பிடித்துத் தூக்கி வந்தால் தூக்கி வருகிறோம் என்று கூறுவார்களே தவிர ஏந்தி வருகிறோம் என்று கூறமாட்டார்கள்.

எனவே ஒன்றை ஏந்தி வருகிறோம் என்றால் பொருள் மேலேயும் அதைத் தாங்கும் கை முதலியன கீழேயும் இருத்தல் வேண்டும் என்று ஆகிறதல்லவா? விசும்பு என்றால் ஆகாயம் என்பது பொருள். ஆகாயம் என்றால் ஒன்றும் இல்லாதது என்று அனைவரும் அறிவோம். அப்படி இருக்க ஆகாயம் பூமியைத் தாங்குகிறது என்றால் என்ன பொருள்? பூமியாகிய உருண்டை ஒன்றும் இல்லாத வெளியில் (ஆகாயம்) மிதக்கிறது என்பதைத் தான் புலவன் இவ்வளவு அழகாகக் கூறுகிறாள்.

இதைவிட ஒருபடி மேலே சென்று ‘‘விசும்பு தைலகு வனி” என்றும் கூறுகிறாள். காற்று தடவிக் கொடுக்கிறதாம் பூமியையும் ஆகாயத் தையும், ஒருவர் மேல் கையை வைத்துக் கொண்டிருந்தால் அதைத் தடவுதல் என்று கூற மாட்டோம். அசைவு இருந்தால்தானே தடவுதல் என்பது பொருந்தும். காற்று எப்படி அசையும்? பூமி சுற்றுவதனால் காற்று அதைத் தடவிக் கொடுக்கிறது என்ற பொருளையும் நமக்கு

அறிவுறுத்தும் வகையில் ‘‘விசும்பு தைவரு வளி” என்ற விஞ்ஞான உண்மையையும் இந்த மெய்ஞ்ஞானி கூறிவிடுகிறான். இரண்டாயிரம் ஆண்டுகட்கும் முன்னர் இத்தமிழர் கண்ட விஞ்ஞானப் புதுமைகளுள் சில இங்கே தரப்பெற்றன. ‘‘மைம்மீன் புகையினும் தூபம் தோன்றினும்” என்ற அடியின் மூலம் மற்றொரு புறப்பட்டால் புலவன் தூமகேது எனப்படும் வால் நட்சத்திரம் பற்றிக் கூறுகிறான். (தொடரும்)

ஓம் சக்தி

நன்றி: சக்தி ஒளி விளக்கு – 1 சுடர்-1 1982 பக்கம் : 35-37

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here