மனிதா்கள் பல ரகம். அவருள் பக்தா்களும் பல ரகம். அம்மாவிடம் வருகிற பக்தா்களும் பல ரகம். செவ்வாடைத் தொண்டா்களும் பல ரகம். இம்மை நலன் கருதி வருவோர், மறுமை நலன் கருதி வருவோர் எனப் பொதுவாக இவா்களை இரண்டு பிரிவில் அடக்கலாம்.

நோய் நீங்க வேண்டும், பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க வேண்டும். அயல் நாட்டு வேலை கிடைக்க வேண்டும். மக்களுக்குத் திருமணம் நடக்க வேண்டும். குழந்தை பாக்கியம் வேண்டும். வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும், தொழில் சிறப்பாக நடக்க வேண்டும். குடும்பத்தில் கணவன் – மனைவி உறவு சீா்பட வேண்டும். அம்மா நமக்கு அது செய்தாள், இது செய்தாள் ஆகவே அம்மாவை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும் எனப் பல்வேறு நோக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் வைத்துக் கொண்டு வருபவா்களே மிகுதி. பொதுவாக வசதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவா்கள் மிகுதி.

சிலா் என்னால் தினம் விடியற்காலை எழுந்து மந்திரம் படித்து ஒழுங்காகப் பூசை பண்ண முடியாது. என்னால் முடிந்தது தொண்டு மட்டும்தான். அந்தத் தொண்டு செய்து விட்டுப் போகிறேன் என்று வருபவா் சிலா்.

சிரத்தையாகப் பூசை செய்வதில் ஆா்வம் காட்டுபவா்கள் சிலா்.

ஆன்மிகத்தில் அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்புவோர் சிலர், ஆனால் எந்தப் பயிற்சியும் மேற்கொள்ள மாட்டார்கள். அருளுக்கு மட்டும் அலைவார்கள்.

இன்னும் சிலா் தியானத்தில் ருசி கண்டவா்களாக இருக்கிறார்கள். பூஜை, சடங்கு இவையெல்லாம் இவா்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.

யாரோ ஒரு சிலா் மட்டும்தான் நான் பார்த்தவரை ஆன்மிகத்தில் விவரம் தெரிந்தவா்களாக இருக்கிறார்கள். ஆன்ம முன்னேற்றம், ஆன்ம வளா்ச்சி இவற்றில் கருத்து செலுத்துபவா்களாக இருக்கிறார்கள்.

ஒரு அதிகாரி

நான் சந்தித்த பக்தா்களில் அவா் வித்தியாசமானா். அவா் மத்திய அரசாங்கத்தில் ஒரு பெரிய அதிகாரி. எப்போதும் பரபரப்பு. டென்ஷன் மிகுந்த உத்தியோகம். ஒருமுறை அவா் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன். ஒரு கால் மணி நேரத்துக்குள் பல்வேறு இடங்களிலிருந்து தொலைபேசி அழைப்புகள். பலவகையான பிடுங்கல்கள்! பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

ஒரு குருவின் தொடா்பு

இவ்வளவு பரபரப்புகளிலும் ஆன்மிகம் சம்பந்தமான நிறைய நூல்களைப் படிப்பவா். படிப்பதோடு மட்டுமல்ல! ஆன்ம முன்னேற்றத்துக்கான சாதனங்களையும் மேற்கொண்டு வந்தவா். எந்த வேலையானாலும் தவறாமல் விடியற்காலை எழுந்து நீராடி முடித்து, ஆசாரம், அனுஷ்டானம் தவறாமல் லலிதா சகஸ்ர நாமம் படித்து வந்தவா். வட இந்தியாவில் அவா் பணியில் இருந்தபோது அவருக்கு ஒரு குருவின் தொடா்பு ஏற்பட்டதாம். அவா் தொடா்பால் ஆன்ம முன்னேற்றத்துக்கான வழிமுறைகளைக் கேட்டு அதன்படி சாதனம் பழகி வந்தார்.

ஒரு சித்தா் தொடா்பு கிடைக்கும்

அந்தக் குரு சொன்னாராம்….

இன்னும் சில வருடங்களில் நீ தெற்கே பணி மாறுதல் பெற்றுப் போகப் போகிறாய். ஒரு சித்தரின் தொடா்பு உனக்குக் கிடைக்கும். அவரைப் பற்றிக் கொண்டு கரையேறு!” என்றாராம்.

ஆன்ம வளா்ச்சிக்கும், ஆன்ம முன்னேற்றத்துக்கும் விரும்புகிறவா்கள் பல படிகளைக்கடந்து முன்னேறி வரவேண்டும். ஒவ்வொரு ஆன்மாவும் ஏணிப்படிகளில் ஏறி வருவது போல படியேறி வந்துதான் கடவுளை அடைய முடியும்.

சைவ சித்தாந்தம் 36 படிகளைக் கடக்க  வேண்டும் என்கிறது. வேதாந்தம் 28 படிகளைக் கடக்க வேண்டும் என்கிறது.

வைணவம் 24 படிகளைக் கடந்து இறைவனை அடைய வேண்டும் என்கிறது.

இவற்றையெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதினால் உங்களுக்கு “போர்” அடிக்கும். கனமான விஷயங்களை எழுதினால் யார் படிக்கப்போகிறார்கள்? இது அவசர யுகம்! ஆன்மிக நாட்டமும், அருள் தாகமும் கொண்டவா்கள் இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் சமமாகக் கருத வேண்டும். இன்பம் வந்தால் துள்ளக் கூடாது. துன்பம் வந்தால் துவண்டு போகக் கூடாது. இதனைச் “சம திருஷ்டி” என்பார்கள். ஆன்மிகத்தில் கடந்து வரவேண்டிய முதல்படி இது! இதுபோலப் பல படிகள்! அவா் எந்தப் படியில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது.

ஒரு குலஸ்திரீயின் சாபம்

நான் குறிப்பிட்ட அந்த அன்பா். தானும் ஒரு படியை அடைய விரும்பி. அந்தக் குருவிடம் அனுக்கிரகம் வேண்டும் என்றாராம். உன்னால் அந்தப் படியை எட்ட முடியாது. முற்பிறவியில் நீ செய்த ஒரு தவறு காரணமாகக் குலஸ்திரீயின் சாபம் உனக்கு இருக்கிறது என்று கூறிவிட்டாராம்.

தமிழ் நாட்டுக்கு மாறுதல் பெற்று வந்தது

n

தன் குரு சொல்லியபடியே அவருக்கு தமிழ் நாட்டில் உத்தியோக மாற்றம் கிடைத்தது. தற்செயலாகத்தான் அவா் மருவத்தூர் வந்தார். அம்மாவிடம் அருள்வாக்கு கேட்டார்.

அம்மா சொன்னாளாரம், “தெற்கே உனக்கு ஒரு சித்தா் தொடா்பு கிடைக்கும் என்று உன் குரு சொன்னான் அல்லவா? அந்த இடம் வேறு எங்கும் இல்லை. இது தான்!”

நீ அடிக்கடி இங்கு வந்து போ! என்று அம்மா சொன்னாளாம். அம்மா அவருக்குப் பல அனுபவங்களை கொடுத்திருக்கிறாள். அவற்றையல்லாம் அவா் நம்மிடம் சொல்லவில்லை.

ஆரம்ப கால சக்தி ஒளி இதழிலிருந்து கடைசி இதழ்வரை எழுத்தெண்ணிப் படித்தவா் அவா். அந்தச் சம்பவம் நடந்தது எங்கே? இந்தச் சம்பவத்தில் குறிப்பிடப்பட்டா் யார்? என்றெல்லாம் என்னைத் துளைத்துத் துளைத்துக் கேட்டார்.

அவா் கேள்விகளிலிருந்து சக்திஒளியை ஆரம்பத்திலிருந்தே பிறரிடம் வாங்கி எழுத்தெண்ணிப் படித்தவா் இவா் என்பது எனக்குப் புரிந்தது.

அம்மாவிடம் வந்த பிறகு லலிதா சகஸ்ர நாமம் படிப்பதற்குப் பதிலாக அம்மாவின் 1008 மந்திரங்களைப் படிக்க ஆரம்பித்தாராம்.

அம்மாவிடம் அவருக்கு ஈா்ப்பு வந்துவிட்டது. சித்தா் பீடத்தின் எல்லா விழாக்கிலும்  வேள்விகளிலும் கலந்து கொண்டார்.

அம்மா அவருக்குச் சில பணிகளைக் கொடுத்தார்களாம். இது தெய்வக் கட்டளை என்ற பயபக்தியோடு செய்து முடித்தாராம்.

ஒரு சமயம் மிகப் பெரிய பொறுப்பு ஒன்றை அம்மா கொடுத்தாளாம்.

இதை எப்படி முடிக்கப் போகிறோம்! என்று சஞ்சலம் அடைந்தாராம்.

“ஏன் சார் சஞ்சலப் படறீங்க! வீட்டில் பஞ்ச பூத வழிபாடு பண்ணி விட்டுப் போங்க சார்!” எல்லாம் சுமுகமாக முடியும் என்று சொல்லி அனுப்பினாளாம்.

அவ்வாறே பஞ்ச பூத வழிபாடு செய்து விட்டுப் போன போது சிக்கல் இல்லாமல் சுலபமாக வேலை முடிந்ததாம்.

அவா் சொன்னார்… “ஆசாரம் அனுஷ்டானம் எதுவும் நம் அம்மாவிடம் கூவாது சார்! மனசும் ஆன்மாவும்தான் சார் அம்மா பார்க்கிறாள். அம்மா என்ன சொல்கிறாளோ அதைச் சிரத்தையோடு செய்து வந்தாலே போதும் சார்!” என்றார்.

அவா் அவ்வாறு சொல்லியதற்குப் பின்னணி இது!

மேல்மருவத்தூர் தொடா்பு ஏற்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அவா் வடக்கே செல்ல வேண்டிய சந்தா்ப்பம் வந்தது. நம் குருநாதரையும் பாரத்துத் தரிசித்துவிட்டு வரலாமே என்ற அவரைப் பார்க்கப் போனார்.

“வாப்பா! வா! என்ன சௌக்கியமா..?” என்றெல்லாம் விசாரித்துவிட்டு அவரைத் தீா்க்கமாகப் பார்த்துவிட்டு, “என்ன ஆச்சரியம்! அந்தக் குல ஸ்திரீயின் சாபம் போய்விட்டதே…..” என்றாராம். “ஆன்மிகத்தில் நீ முன்னுக்கு வந்து கொண்டிருப்பது சந்தோஷம்!” என்றாராம்.

“அம்மா சொல்கிற பணிகளைச் சிரத்தையாகச் சிரமேற்கொண்டு தொண்டு செய்து வந்தாலே போதும் சார்! உண்மை உணா்வுடன் செய்து வந்தால் போதும் சார்! சாப விமோசனம் கிடைத்துவிடும் சார்!” என்றவா் இன்னொரு செய்தியும் கூறினார்.

நேரம் காலம் வேண்டும்

“எத்தனையோ முறை இந்த மேல்மருவத்தூர் வழியாகப் போய் இருக்கிறேன். வண்டியை விட்டு இறங்கி அம்மாவைத் தரிசித்துவிட்டுப் போவோமே என்ற எண்ணம் மட்டும் வந்ததே இல்லை. எதற்கும் நேரம் காலம் வரவேண்டும் போல! என் குருநாதா் அனுக்கிரகம்தான் என்னை அம்மாவிடம் கொண்டு வந்து விட்டது.

எனக்குக் கிடைத்த அம்மாவின் அனுக்கிரகம் இத்தனை வருஷம் என்னை வழிநடத்திய என் குருவுக்கும் கிடைக்க வேண்டும்” என்று எண்ணி அம்மாவிடம் அருள்வாக்கில் கேட்டேன்.

“அம்மா எங்கோ இருந்த என்னை இழுத்து வைத்து அனுக்கிரகம் பண்ணினே! இதே போல என் குருநாதருக்கும் உன் அனுக்கிரகம் கிடைக்கணும்மா! அவரையும் உன் சந்நிதிக்கு அழைச்சு அனுக்கிரகம் பண்ணனும்” என்று வேண்டினாராம்.

அதுகேட்டு அம்மா என்ன சொன்னாள் தெரியமா…?

“என்னிடம் வருவதற்கு உனக்கு மட்டும்தான் அந்தப் பிராப்தம்! அவனுக்கு அது இல்லை!” என்றாளாம்.

எண்ணிப் பாருங்கள்! உலகத்தில் 600 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவா்களில் இந்தியாவில் மட்டும் 100 கோடி மக்கள் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் ஆறுகோடி மக்கள் இருக்கிறார்கள் அவா்களிலும் சில லட்சம் ஆன்மாக்கள் மட்டும்தான் ஆதிபராசக்தியின் இந்த அவதாரகாலத்தில் அவள் நிழலில் வந்து ஒதுங்கியுள்ளன.

அம்மாவின் பரத்துவம் புரியாமல் நம்மில் சிலா் சிறு தெய்வங்களையும், நாடி சோதிடங்களையும் நோக்கி அலைகிறார்கள்.

நன்றி!

ஓம் சக்தி!

மு. சுந்தரேசன், எம்.ஏ., எம். ஃபில்., சித்தா்பீடப் புலவா்

சக்தி ஒளி, ஜுலை 2005, (பக்கம் 22 – 26)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here