என்புருக்கி நோயாலே பாதிக்கப்பட்டு கூனிகுருகி உடல் ஊனமுற்ற நிலையிலே கொண்டு வந்த அந்த நோயாளியை கீழே தரையிலே படுக்க வைக்கச் சொல்லி அன்னை ஆணையிட்டாள். அருள்நிலையிலே அன்னை அருள்திரு. அடிகளார் மூலம் தன் திருப்பாதங்களைக் கொண்டு அந்த நோயாளியின் கழுத்து பாகத்திலே இருந்து முதுகெலும்பு வழியாக லேசாக மித்து நீவி விட்டாள். பின்னர் சற்று அழுத்தத்தோடு மேலிருந்து கீழாக தன் திருப்பாதத்தாலே ஏறி மிதித்தாள். கைத்தடி ஒன்று கொடுத்து புற்று பண்டபத்தின் ஒரு மூலையிலே தூக்கிச்சென்று விட்டு விடப் பணித்தாள்.

அருள் வாக்கு தொடர்ந்தது. அரை மணி நேரம் கழித்து நாலுபேரால் தூக்கி வரப்பட்ட அந்த மூதாட்டி, ஊனமுற்று எழுந்து நடக்க முடியாத நிலையிலே கொண்டு வரப்பட்ட அந்தநோயாளி, முன்னூருக்கும் மேற்பட்ட பக்தர்கள் வீற்றிருந்த அந்த முற்றத்திலே எல்லோரும் வியக்கும் வகையில் தட்டுத் தடுமாறி தானாகவே எழுந்து தடியூன்றி நடத்து வந்த அக்கண்கொள்ளாக் காட்சி மருத்துவத்திலே ஓர் அற்புதம். பல மாதங்களாக எழுந்து நடக்காத அந்த மூதாட்டி பார் புகழ் முடநீக்கு இயல்துறை மருத்துவர்களாலே பலன் கிடைக்கப் பெறாத அந்த நோயாளி பராசக்தி தன் திருப்பாத கமலங்கள் பட்ட மாத்திரத்திலே எழுந்து நடந்த நிகழ்ச்சி பக்தர்கள் கண்கூடாகக் கண்ட ஒன்று.

மருவத்தூரன் தந்த இந்த அற்புதத்திற்கு மருத்துவ விஞ்ஞானம் என்ன விளக்கம் கூற முடியும்? இது ஆதிபராசக்தியின் ஆன்மிக மருத்துவம். அருள் வாக்கிலே அடுத்து ஆதிபராசக்தி சொன்ன மருந்தினை அவள் சொன்ன முறைப்படியே தொடர்ந்து உண்டு பலன் அடைந்த நோயாளிகளிலே இந்த மூதாட்டியும் ஒருவர்.

மருவத்தூராளுக்கு எல்லாத் துறையுமே கைவந்த துறைத்தானே ஏன் எனில் அவள் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவச்சி அல்லவா! முடநீக்கு இயல் துறைக்கு முன் சொன்ன நிகழ்ச்சி என்றாள். மகப்பேறு மருத்துவத்தில் மருவத்தூரான் அளித்த ஆன்மிக மருத்துவம் அடுத்த நிகழ்ச்சி.

31-1-82 அன்று மருவத்தூர் திருக்கோயிலுக்கு, அடுத்த மருத்துவக் கட்டுரை எழுத வேண்டும் என்று ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஆலயம் சென்றேன். எத்தனையோ விஞ்ஞான மருத்துவத்தால் தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்து அளப்பறிய ஆற்றல்மிகு அற்புதங்கள் நிகழ்த்தி வரும் இவ்வன்னையின் திருவிளையாடல்களிலே எதை எழுதுவது என்ற எண்ணத்திலே என் நினைவுகள் தேங்கின. கோயிலில் நுழைகின்றோம். அன்னை அப்போது மந்திரிப்பு முடித்து அருள்திரு அடிகளார் உருவிலே புற்று மண்டபத்தை நோக்கிச் செல்கின்றாள். உள்ளே நுழையுமுன் நின்று அடியேனையும், அச்சரப்பாக்கம் காவல் துறைத் துணை ஆய்வாளரையும், அறநிலையத் துணைத் தலைவரையும் அருகில் அழைத்தாள் ‘‘இதோ நிற்கின்றாளே இந்தப் பெண் 14 ஆண்டு காலமாகக் குழந்தை இல்லாமல் வேதனையுற்றாள் என்று அருகிலே நின்று கொண்டிருந்த பெண்ணை சுட்டிக்காட்டிச் சொன்னாள். குழந்தை வேண்டி தன் கணவனோடு ஈராண்டிற்கு முன் இம்மண்ணை மிதித்தான்”

பல வருடங்களாகத் தலைசிறந்த மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் எல்லாம் ஆய்ந்த பரிசோதனைகள் நடத்திய பின்னர் இனி குழந்தையே பிறக்காது எனக் கைவிடப்பட்டநிலை, பத்தாண்டுகட்கு மேல், பல்லாயிரக் கணக்கான பணம் செலவிட்டும் பலன் கிட்டாதநிலை, சென்னையிலே வாழ்கின்ற அனைத்துலக அளவிலே புகழ்பெற்ற ஒரு மகப்பேறு மருத்துவத் துறை சார்ந்த மருத்துவரை இரண்டு வருடங்களுக்கு முன் இத்தம்பதிகள் அணுகி பரிசோதனை செய்தார்கள். ஆய்வின் முடிவிலே அந்த மருத்துவர் சொன்னார். உன் கற்பப்பையிலே கட்டி உள்ளது. அதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால்தான் கருத்தறிக்கும் என்று.

இந்த நிலையிலேதான் இந்தத் தம்பதிகள் 1980-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் நம்பிக்கையோடு மருவத்தூர் திருக்கோயில் வந்தார்கள் மண்ணை மிதித்து மருவூரானிடம் அருள்வாக்குக் கேட்டனர். அன்னை அப்பொழுது சொன்னாள் ‘‘கற்பப் பையிலே கட்டி என்று சொல்லி, அதை அறுத்தால்தான் கருத்தறிக்கும் என்று சொன்னான்டா மகளே? ஓம் சத்தி என உரைத்து இம்மண்ணை மிதித்துவிட்டீர்கள். ஈராண்டிற்குள் ஆண்மகள் ஒன்று பிறக்கும்” என்றாள். அதே பெண்தான்டா இங்கே இப்போது இருப்பவள் என்று கூறி, அவனின் கணவனும் இங்கு வந்திருக்கிறாள். அவனையும் இவ்விடத்திற்கு அழைத்துவர ஆணையிட்டாள்.

அன்னை தன் அருள்வாக்கினைத் தொடர்கின்றாள். அப்பெண்ணின் கணவனும் வந்து அருகில் நிற்கின்றார் எத்தனையோ ஆயிரம் பேர் குழந்தை வேண்டி இவ் ஆலயத்திற்கு வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இத்தம்பதிகள் பற்றி மட்டிலும் இப்போது உறைக்கக் காரணம் கேளடா மகளே! நீயும் ஓர் மருத்துவன் தானடா? உன்னுடைய விஞ்ஞான மருத்துவர்கள் கற்பப் பையிலே கட்டி என்று சொல்லி அறுவை சிகிச்சை செய்தால் தான் கருத்தறிக்கும் என சொன்னார்கள். ஈராண்டிற்குள் ஆண் குழந்தை ஒன்று பிறக்கும் என்று அன்று சொன்னேன். ஆனால் இப்போ இந்த தம்பதிகள் ஆலயத்திற்கு வந்துள்ள நிலையைப் பாரடா மகனே!

தொடரும்…

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 46-47

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here