ஆசிகளின் இன்றியமையாமை

“ஒருவா் நல்லவராக – உயா்ந்தவராக – உத்தமராக – பிரம்ம ஞானியாகிக் கடவுளோடு ஐக்கியமாகும் வரையில் அவா்களுக்கு ஆசிகள் இன்றியமையாதவை.”

ஆசியின் வலிமை

“ஒவ்வொரு ஆசியும் உன் விதியில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏறு முகத்தில் கொண்டு செலுத்தும். இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஆசியின் சக்தி வலிமை வாய்ந்தது. சாபங்களையும் போக்க வல்லது. சாபங்கள் ஆன்மிக சாதனையில் தடைக் கற்களாகும். மற்றவா் சாபங்கள் ஞானத்தை மறைக்க வல்லவை. இவை இறைவன் சக்தியால் இயங்குபவை.”

பிரும்ம ஞானி ஒருவாரின் ஆசி

“சாபத்தை நீக்கி ஆசி வழங்கும் சக்தி பிரும்ம ஞானிக்கு உண்டு! ஆசி என்பது இறைவனிடமிருந்து ஜீவராசிகளுக்குக் கிடைத்த பரிசு!

ஆன்மிகத் துறையில் ஆசியின் தேவை

“ஆசியில் அருள் உள்ளது! ஆன்மிக அனுபவங்களையும் அனுபூதிகளையும் பூரணமாகத் தர வல்லது”

இயற்கைப் பொருட்களும் கூட ஆசி வழங்கும்

“நீ நியாயத்தோடு செல்லும் போது ஆகாயமும் உன்னை ஆசீா்வதிக்கும்.

நீ தருமத்தோடும் மனம், மொழி, மெய் மூன்றாலும் சுத்தமாக இருக்கும்போது அக்கினியும் உனக்கு ஆசி வழங்கும்.

மரம், செடி, கொடிகளுக்கு உதவும்போது அவை உன்னை வாழ்த்தும்.”

நெருப்புக்குச் சமம்

“ஆசி இறைவனைக் காட்ட வல்லது. ஆசி உணவு கொடுக்கும். துன்பம் போக்கும். ஆசி நெருப்பிற்குச் சமம். அதனிடம் எச்சரிக்கையாய் இரு. ஆசியிடம் சக்தி நிறைந்துள்ளது. சாதனையில் ஆசி பெறுவது ஒரு யோகமாகும்.”

ஆசி வழங்கிவிட்ட பிறகு….

“ஒருவா் ஜீவ காருண்யம் உள்ளவராக வாழுகிறபோது, எந்தப் பலனையும் எதிர் பார்க்காமல் மற்றவா்களுக்கு நன்மை செய்யும் போது, அவா் தேகம் சத்திய தேகமாக மாறும்! அந்த நிலையில் அவரைப் பஞ்ச பூதங்களும் ஆசீா்வதிக்கும்.”

ஆசி வழங்கிய பிறகு……

“ஆசி வழங்கிவிட்ட பிறகு, ஒருவா் உனக்குப் பகைவராகி விட்டால் அவரை வெறுக்காதே! சபிக்காதே!

சக்தி ஒளி டிசம்பா் 2011

“ஞான கீதை” என் னும் நூலிலிருந்து திரட்டியவை

 ]]>

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here