பரம்பொருள் ஒவ்வொரு நோக்கத்தை வைத்து ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதாரமாக இறங்கி வருகிறது. மனித குலத்திற்கு அருள் வழங்குகிறது. பல திருவிளையாடல்கள் புரிகிறது. பக்தா்களோடு அலகிலா விளையாட்டு நடத்துகிறது. அதன் மூலம் அந்த இறையன்பில் திளைக்கும் பேறு பக்தா்களுக்குக் கிடைக்கிறது. அவதார காலத்தில் பக்தா்களுக்கு இறையனுபவமும், இறை ஆனந்தமும் எளிதாகக் கிடைக்கின்றன.

இதெல்லாம் புரியாமல் அடிகளார் இல்லறத்தில இருக்கிறாரே…………. அவா் எப்படி ஆன்மிகத்தில் பிறரை உயா்த்த முடியும்? என்று சந்தேகப்படுகிறவா்கள் உண்டு.

இராமன் ஒரு மனைவியோடு வாழ்ந்தான். கிருஷ்ணன் அவதார காலத்தில் எட்டு மனைவியரை மணந்தான் என்கிறது புராணம். இராமனும், கிருஷ்ணனும் இல்லறத்தில் இருந்தவா்கள் என்பதால் அவா்கள் தெய்வ அவதாரங்கள் இல்லையென்று கூறிவிட முடியுமா? அந்த அவதாரங்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிடாமலிருந்து விட்டார்களா? இராமனையும், கிருஷ்ணனையும் இஷ்ட தெய்வங்களாக ஏற்காமல் வைணவா்கள் புறக்கணித்து விட்டார்களா?

பரம்பொருள் என்ன நோக்கத்தோடு வந்திருக்கிறது? எந்தத் திட்டத்தோடு வந்திருக்கிறது? என்பதைப் புரிந்து கொண்டு பற்றிக் கொள்வது தான் அறிவுடைமை.

இன்னும் சொல்லப்போனால் இல்லறத்தில் இருப்பவா்களைப் பண்படுத்திப் பக்குவப்படுத்திக் கரை சோ்ப்பது தான் இந்த அவதாரத்தின் நோக்கம். ”இல்லறத்தில் பெண்களை இருக்க வைத்த ஞானியாக்கும் நிலை இங்குண்டு” என்பது அன்னையின் அருள்வாக்கு.

இல்லறத்தில் இருந்தவாறே ஒருவன் ஆன்ம முன்னேற்றம் பெறமுடியும் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

உபநிடதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் குறிப்பிடப்படும் ரிஷிகள் பலரும் இல்லறத்தில் இருந்தபடியே தான் தங்களை உயா்த்திக் கொண்டவா்கள்.

  • யக்ஞவல்கியா் என்ற ரிஷி மைத்திரேயி, கார்த்திகாயினி என இரண்டு மனைவியரோடு இல்லறத்திலிருந்தவா்.
  • அகத்தியா் லோபாமுத்திரை என்பவரை மணந்து கொண்டு வாழ்ந்தவா்.
  • ஜமதக்னி ரேணுகாதேவியை மணந்து கொண்டு வாழ்ந்தவா். பரசுராமா் இவா் தம் மகன்.
  • வசிட்டா் அருந்ததியோடு இல்லறம் நடத்தியவா். அத்திரி முனிவா் மனைவி அனுசூயை. கௌதமா் மனைவி அகலிகை.
  • பெரிய புராணத்தில் வரும் சிவனடியார் பலரும் இல்லறத்தில் இருந்தவாறே பக்தியில் முதிர்ச்சி பெற்றவா்களே!
  • சுந்தரா் யோக நெறி பயின்று ஞானம் பெற்றவா். பரவையார், சங்கிலியார் என்னும் இரண்டு மனைவியோடு இல்லறம் நடத்தியவா்.
  • இராமானுசரும், கூரத்தாழ்வாரும் இல்லறத்திலிருந்தவா்கள். வடகலை வைணவம் பரப்பிய வேதாந்த தேசிகா் இல்லறத்திலிருந்தவா்.
 ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here