ஓம்சக்தி அம்மாவின் கோடிக்கணக்கான அடியார்களுள் நானும் ஒருத்தி என்பதின் அக மகிழ்கிறேன். அம்மாவின் சக்தி ஒளி சஞ்சிகை மூலம் அம்மாவைப் பற்றி கேள்விப் பட்டிருப்பினும் 2007ம் ஆண்டே எனக்கு அம்மாவினதும், கருவறையினதும் படம் வீடு வந்தது. மந்திரப் புத்தகம். அா்ச்சனைப் பிரசாதம் ஆகியனவும் கிடைத்தன. பெற்ற தாயின்றி இருளடைந்திருந்த என் வீடு அம்மாவின் வருகையின் பின் மெதுவாக ஒளி பெறத் தொடங்கியது. நீண்ட காலமாக இழுபறியிலிருந்த எனது திருமணப் பதிவு வைபவமும் 2008ல் நிறைவேறியது. எனது கணவரின் பட்டதாரிப் படிப்பும் இழுபறி நிலையிலிருக்க அதனைப் பூா்த்தியாக்குமாறு அம்மாவிடம் வேண்டி இங்குள்ள அல்வாய் சக்தி பீடத்தில் ஆடிப் பூரக் கஞ்சிக் கலயமேந்தினேன். அம்மா அதனை நிறைவேற்றி உரிய தொழிலிலும் அமா்த்தினா. தொடா்ந்து திருமணம் தடைப்பட்டது.

சங்குவேலியிலுள்ள அம்மாவின் வழிபாட்டிடத்துக்கு சென்று பெளா்ணமி பூஜை வழிபாட்டிலும், அன்னதானத்திலும் கலந்து வழிபட்டு வந்தேன். 2010ம் ஆண்டு அம்மாவின் அருளால் திருமணம் எதுவித குறையுமின்றி இனிதே நிறைவேறியது. திருமணமும் தமிழ் முறைப்படி பிராமணக் குருக்களின்றி நடைபெற இருந்தமையால் மனதின் ஒரு நெருடல். குரு வாரம் அன்று காலை திருமணம். திருமணத்தன்று காலை அம்மா (அடிகளார்) ஆசீர்வதிக்கும் திருப்படம் மணப் பரிசாக வந்து பூஜை அறையில் இருந்தது. இந்தியாவில் இருந்தே கூறைப் புடவையும், ஏனையவையும் வந்தன.

அனுப்பியோரும் அம்மாவின் அடியார்களே! அவா்கள் தாங்களாகவே கூறைப் புடவை வந்த பெட்டியுள் அம்மாவின் அருட்பிரசாதங்களை வைத்து அனுப்பியிருந்தனா். இதைவிட எனது திருமணத்துக்க வேறென்ன வேண்டும்? அம்மாவின் அருளால் நான் விரும்பியவரே வரதட்சணையின்றிக் கைப்பிடித்தார். எவ்வளவோ கஷ்டத்திலிருந்த எனக்கு அம்மா நான் எதிர்பாராத வகையில் எனது உறவுகள் நாம் கேளாமலேயே அள்ளித் தந்தனா். திருமணம் முடித்து ஓராண்டுக்கு மேலாகியும் மழலை கிடைக்கவில்லையே என்று சுற்றம கவலைப்பட எனக்கு அது பற்றிய சிந்தனையில்லாவிடினும் நிர்ப்பந்தத்தின் பேரில் மருத்துவரிடம் செல்ல நேரி்ட்டது. பரிசோதித்த மருத்துவா் வயிற்றில் கட்டி காணப்படுவதாகவும், சத்திர சிகிச்சையின் பின்பே கருத்தரிக்க முடியுமெனவும் தெரிவித்து 2011ம் ஆண்டு சித்திரை மாதம் சத்திர சிகிச்சை எனவும் முடிவு செய்தனா். இறுதியாக மார்ச் மாதம் அம்மாவின் அவதாரத் திருநாள் நிகழ்வு சண்டிலிப்பாய் வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்றபோது கலந்து கொண்டேன்.

சித்திரை மாதம் கருத்தரிப்பது என்று அம்மாபின் ஆணை போலும். பரிசோதனைக்காக மீண்டும் சென்ற போது 2-3 மாதம் கழித்தே உறுதிப்படுத்துவேன் என மருத்துவா் கூறினார்.

எல்லாம் அம்மா பார்க்கட்டும் என்று நானும் என் தொழிலுமாகக் காலம் கடந்து இப்போ நிறை மாதமாகிவிட்டது. மருத்துவா் உறுதிப்படுத்த முன் மனசில் ஒரே பயம். அவ்வேளை ஒரு கனவு, பரிசோதிக்கும் மருத்துவா் அம்மாவின் தீவிர பக்தா் தான் “நீ பயப்படாமல் போ யோசியாதை” என்று கூறினார்.

இடையில் வேறொரு மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்றபோது வயது முதிர்ந்த அனுபவமிக்க அவா், இது உங்களுக்கு கடவுளின் கொடை எனவும், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் பிந்தினால் பிள்ளைகளே கிடைப்பதரிது எனவும் கூறினார். ஏனெனில் கட்டிகள் உள்ளோர் கருத்தரிப்பது கடினமென்பது அவா் கருத்து. எல்லாம் அம்மாவின் அற்புதம். இன்னும் எஞ்சியுள்ள எமது பிரச்சினைகள் தீரவும் அம்மாவின் வாக்கின் படி நாம் நடக்கவும் அம்மாவின் அருள் வேண்டி நிற்கிறேன்.

ஓம் சக்தி!

திருமதி கார்த்திகா மயூரன்

யாழ்ப்பாணம், இலங்கை.

]]>

1 COMMENT

 1. ஓம் சக்தி!அம்மாவின் அற்புதங்கள் பல உள்ளன.கேள்வியும் பட்டிருக்கிறேன்,படிதுமிருகிறேன்.நன் என்ன வாழ்கையில் அம்மா மறைமுகமாக கட்சி தந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.விவரம் தெரிந்த நாளிலிருந்து நான் அம்மாவை வணங்கி வருகிறேன்.அன்றிலிருந்து இன்று வரை நான் தினமும் காலை மாலை அம்மாவிற்கு பூசை செய்து வருகிறேன்.அன்று வழக்கம்போல் நானும் என்ன தாயாரும் உரையாடி கொண்டிருந்தோம்.அப்பொழுது ஒரு வயதான ஒரு பாட்டி வந்தார்.அவர் யார்ரென்று முதலில் எனக்கு தெரியவில்லை.அவர் எங்களிடம் வந்து “நான் கொலுசு,மாலை எல்லாம் விற்கிறேன்,வாங்கி கொள்ளுமாறு கேட்டு கொண்டார்.எனக்கோ அழகு சாதனம் பொருட்கள் என்றால் இஷ்டம்.என்னிடம் அதிக கொலுசுகள் இருந்ததால் நான் கொலுசு வாங்க வில்லை.அந்த பாட்டி ஒரு பச்சை நிற மாலையை என்னிடம் கொடுத்தார்.அது பார்பதுக்கு சக்தி மாலை போன்று இருந்தது.அவர் அம்மாலையை என்னிடம் கொடுத்தபோது “இதை நான் எப்படி அணிந்து கொள்வது?”என்று நினைத்தேன்.அவர்”இம்மாலையை என் பெயரை சொல்லி போட்டு கொள் அம்மா,என்று என்னிடம் கூறினார்.”அப்பொழுது எனக்கு தெரிய வில்லை அது யார் என்று.அண்டை அயலாரிடம் விசாரித்தபோது அப்படி யாரும் அவர்களின் வீட்டுக்கு வர வில்லை என்று கூறினர்.அப்போதுதான் நான் உணர்ந்தேன் வந்தது நம் அம்மா என்று..ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா!!

 2. அம்மா எங்கள் ஈரோடு பகுதியில் மஞ்சள் ஓரு முக்கிய விவசாய விளைபொருளாக உள்ளது. இன்று மஞ்சள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உரம் மற்றும் அனைத்து இடுபொருட்களும் விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது. கடும் நஷ்டத்தை அடைந்துள்ள எங்களுக்கு அம்மா அருளாள்தான் விடிவு கிடைக்கும் நமது குழு உறுப்பினர்கள் எங்களுக்காக நடமாடும் தெய்வம் நம் அம்மாவையும் அன்னை ஆதிபராசக்தியையும் உங்கள் வழிபாட்டின் போது வேண்டிக்கொள்ளூமாறு உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறோம்.
  ஓம் சக்தி பராசக்தி
  அன்புடன்
  சக்தி.v.k.செந்தில்குமார்
  ஈரோடு

 3. லண்டனில் வசிக்கும் எனது அண்ணானுக்கு திருமணமாகி 10 வருடங்க்கள் பிள்ளைகள் இல்லை ,பல லச்சரூபா செலவு செய்தும் பலன் கிடைக்கவில்லை .இந்நிலையில் எனது சகோதரி இந்தியவுக்கு அம்மாவின் கோவிலுக்கு சென்ற சமயம் (எனது சகோதரிக்கு இதற்கு முன்னர் கடவள் நம்பிக்கை இல்லை] .அம்மாவை வழிபட சென்ற போது அம்மா
  என்னிடம் நம்பிக்கை இல்லாமல் வந்துள்ளாய் உனக்கு என்ன வேண்டும்? என வினவினர் .எனது அண்ணானுக்கு பிள்ளை வேண்டும் என வேண்டவும் ,தருகிறேன் என்னை நம்பு என அம்மா கூறவும்,இதன் ஒரு வருடத்திதின் பின்னர் லண்டன் வந்த சகோதரி அண்ணாவின் வீட்டில் அம்மாவின் படத்துடன் காலடி வைத்ததும் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எனனது அண்ணிக்கு 40 வயது டாக்டர்கலால் நம்ப முடியவில்லை ,ஒன்பது மாதத்தில் அழகான பெண் குழந்தை இன்னமும் எந்தனையோ அதிசயாங்கள் உங்களுக்கு எழுத முயர்ச்சி செய்கிறேன்
  நன்றி
  சகோதரன்
  கோணேஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here