“எல்லோருடைய கணக்கையும் நான் வைத்து இருக்கிறேன். யார் யார் எப்படி? யார் என்ன செய்கிறார்கள்? என்பது இந்த மண்ணை(மேல்மருவத்தூர்) அவர்கள் மிதித்தவுடன் எல்லாம் என் மனதில் பதிவாகி விடும்.”

ஆன்மா பேசும்…..

“நீ சுத்தமாக இருந்தால் ஆன்மா உன்னிடம் பேசும். ஆன்மாதான் சக்தி! ஆன்மா தான் அம்மா!

இந்த உடம்பு அம்மா, அப்பா போட்ட பிண்டம். இந்த உடம்பு அம்மா சதையிலிருந்து… கரு உருவாகும் போது காத்திருந்து ஆன்மா அதோடு சேர்ந்து கருவாகி, உயிராகி உடலாகிப் பிறக்கிறது.

ஆன்மாதான் நாம் செய்கிற நல்லதுக்கும், கெட்டதுக்கும் சாட்சியாய் இருந்து நல்ல பலனையும், கெட்ட பலனையும் நேரம் வரும் போது கொடுக்கும்.

எப்போது எந்தப் பிறவி கிடைக்கும் என்று தெரியாது.

இந்தப் பிறவியிலேயே நல்லதைச் செய்து, ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். உடம்புக்குத்தான் வயது; ஆன்மாவிற்கு வயது இல்லை.”

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் உபதேசங்கள்.