ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகாமையில் உள்ள குக்கிராமம் மேட்டுப்பாளையம் ஊரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த கணவனால் கைவிடப்பட்ட சாந்தி என்ற பெண்மணியின் மகள் சக்தி பி.எஸ்.அகல்திகா இவ்வாண்டு தன் தாயுடன் வந்து முதல் முறையாக சக்தி மாலை ஆணிகின்றார் சக்தி மாலை அணியும் போது உங்கள் நியாயமான கோரிக்கையை நினைத்து உங்கள் இருமுடியை கட்டுங்கள் என்று மன்றத்தார் அறிவுறுத்துகின்றார் இந்தப் பெண்ணும் தனக்கு ஒரு கோரிக்கை வைத்து இருமுடி கட்டி ஐந்து நாள் விரதமிருந்து மேல்மருவத்தூர் பயணம் புறப்படுகின்றார்.

162 நபர்கள் இவருடன் பயணம் மேற்கொள்கின்றனர் பயணம் மேற்கொள்ளும் போது மன்றத்தில் அனைவரையும் அமர வைத்து மன்றத்தார் தங்கள் பயணம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் திரும்பி எவ்வாறு வந்து மாலை கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்புகின்றார் பயணம் மேற்கொள்ளும் நீங்கள் தங்கள் இருமுடியை சுமந்து செல்வது அவ்வளவு சிறப்பு ஆடிப்பாடி செல்வதை விட அன்னை ஆதிபராசக்தியின்யின் மந்திரம் படித்து செல்வது மிக சிறப்பு புனிதப் பயணம் மேற்கொள்ள நீங்கள் ஆலயம் சென்று வீடு திரும்பும் வரை இடையில் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் இல்லம் திரும்புவது சிறப்பு என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

162 நபர்களில் இந்தப் பெண் மட்டும் மன்றத்தில் வைத்த இருமுடியை ஆலயம் வரும் வரை தோலில் வைத்து 10 மணி நேரத்துக்கு மேற்பட்ட பயணத்திலும் இறக்காமல் சுமந்து உள்ளார் இடையில் பலர் இறக்கச் சொல்லியும் மன்றத்தில் சக்தி இறக்காமல் சுமக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

நான் சுமந்து தான் வருவேன் என்று ஆலயம் வரை சுமந்து வந்து ஆலயத்தில் இருமுடி பிரிக்கும் போது தன் தாய் உதவி செய்ய முற்பட்டபோது இல்லை எனது நியாயமான கோரிக்கைக்கு நான்தான் பிரிக்கவேண்டும் என்று மன்றத்தில் அறிவுறுத்தி உள்ளார்கள்.

நான் தான் பிரிப்பேன் என்று தனது நியாமான கோரிக்கை நினைத்து இருமுடி பிரித்து அன்னைக்கு அபிஷேகம் செய்து அன்றிரவு ஆலயத்தில் தங்கி அடுத்தநாள் தன்னால் முடிந்த தொண்டு செய்து திரும்பி வரும் வழியில் மன்றதாரின் அறிவுரையை மீறி 161 நபர்களும் வரும் வழியில் உள்ள ஏதோ ஒரு ஆலயத்தில் தரிசனம் செய்ய இறங்கிச் செல்லும்போது இந்தப் பெண் மட்டும் இறங்கவில்லை பலர் வலியுறுத்தியும் மன்றத்தில் அறிவுறுத்தி உள்ளார்கள் யார் வேண்டுமானாலும் செல்லுங்கள் மன்றத்தார் செல்வது பரம்பொருள்பங்காரு அம்மா அவர்கள் சொல்வது அன்னை ஆதிபராசக்தி சொல்வது அதை நான் தட்டிக்கழிக்க மாட்டேன் நான் எங்கும் வரவில்லை.

நான் பேருந்தில் இருந்து கொள்கிறேன் என்று மன்றத்தாரின் வலியுறுத்தலை சரியாக கடைப்பிடித்து ஊர் திரும்பினார் இந்தப் ஏழை பெண்ணின் நியாயமான கோரிக்கை நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு கிணங்க என்னை நினைத்து சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து நான் சொன்ன வழிகாட்டுதல்படி ஆலயம் வந்து அபிஷேகம் செய்து உன் வீடு திரும்பினாள்.

உனது நியமான கோரிக்கையை நிறைவேற்றுவேன் மகளே என்கிற அருள்வாக்கின் படி பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அருள் திருவருளால் உடன் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற இந்தப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று இன்று கரூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் மாவட்ட முதலிடம் பெற வைத்த பரம்பொருள்பங்காரு அம்மா அவர்களின் கருணையோ கருணை இத்தேர்வில் வெற்றிபெற்ற இம் மாணவியும் அவரது தாயாரும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களுக்கு நன்றி கூறி உள்ளார்கள்.