நடக்கவே முடியாமல் கிடந்தவனை நடக்க வைத்த பரம்பொருள் பங்காரு அம்மா

0
1204

நான் சென்னையில் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறேன். என் மனைவியின் சொந்த ஊரான ஆந்திராவில் உள்ள நகரி. அவள் ஆதிபராசக்தியின் பக்தை. ஓம் சக்தி மன்றத்தில் தொண்டு செய்து வந்தவள். எனக்கு அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடு இல்லை. என் மனைவி அடிக்கடி மேல்மருவத்தூர் சென்று வருவாள்.
எங்களுக்குத் திருமணமாகி
ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
1999 மே மாதம் எனக்கு முதுகுத் தண்டில் “Disk Bulge” ஆகி, நரம்பில் பட்டுக் கால் வலி மிகவும் அதிகமாகிவிட்டது.
என்னால் நடக்கவும் முடியவில்லை. உடனே டாக்டரிடம் சென்ற பொழுது, 10 நாட்களுக்கு மருந்து கொடுத்து Bed Rest எடுக்கும் படிச் சொன்னார். 10 நாட்கள் கழித்தும் கால்வலி சரியாகவில்லை.
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள்.என் மனைவி என்னை ஒரு வேன் (Van) வைத்து மேல்மருவத்தூருக்கு அழைத்துச் சென்றாள்.
முதுகுத் தண்டு கோளாறு பற்றி எடுத்துச் சொன்னோம். ஆபரேஷன் செய்யலாமா? வேண்டாமா? என்று கேட்டோம்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் சொன்னார்கள். “ஆபரேஷன் எல்லாம் வேண்டாம். நான் சொல்லும் மருந்தை எழுத்துக் கொள்! நீ நன்றாக நடப்பாய். நீ நடப்பதைப் பார்த்து டாக்டர்ளே ஆச்சரியப்படப் போகிறார்கள்.
சுக்கு, மிளகு, திப்பிலி, புதினா, கொத்துமல்லி கஷாயம், ஆட்டுப்பால் காய்ச்சி அதில் அவல், பொட்டுக் கடலை சேர்த்துச் சாப்பிடு!
முட்டையில் வெள்ளைக் கரு எடுத்து அதனுடன் வேப்பெண்ணெய், பச்சைக் கற்பூரம் சேர்த்து முதுகில் தடவு. பின் தவிடு சூடு செய்து ஒத்தடம் கொடுத்து வா” என்றார்கள். 15 நாட்கள் செய்தோம் கால்வலி நின்று விட்டது. நடக்கவே முடியாமல் கிடந்த என்னை பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்நடக்க வைத்தார்கள். இந்த ஜென்மத்தில் பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்களை மறக்க முடியாது.
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. சீனிவாசன், அரும்பாக்கம், சென்னை
பக்கம்: 58
அவதார புருஷர்அடிகளார், பாகம் 13.