எல்லாம் அறிந்த பரம்பொருள் அருள்திருபங்காரு அம்மா

0
1393

எல்லாம் அறிந்த பரம்பொருள் அருள்திருபங்காரு அம்மா அவர்கள்

சித்தர் புலவர் சுந்தரேசன் அவர்கள் மேல்மருவத்தூர் ஆலயம்வருவதற்கு,
அவர்கள் ஊரில்,அவர்கள் வீட்டில் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள்துணைவியார்,
அம்மா யார்யாருக்கோ காட்சி கொடுக்கிறார்களாமே,நமக்கு
மட்டும் காட்சி கொடுக்கமாட்டேன் என்கிறார்களே என்று அவரிடம் கூறினார்கள்.அதற்கு புலவர்,அம்மா பலருக்கு காட்சி கொடுத்துள்ளது
என்பது உண்மைதான்.ஆனால்,
காட்சி பெற்றவர்கள் எல்லோரும் கடைசிவரைக்கும் ஆலயத்துக்கு வருவதில்லையே.அம்மா காட்சியும் கொடுக்கும்,கழற்றியும் விடும்.எனவே அம்மா நமக்கு காட்சியும் கொடுக்க வேண்டாம்,கழற்றியும் விடவேண்டாம் என்று கூறிவிட்டு,அவர் ஊரிலிருந்து மேல்மருவத்தூர் வந்து சேர்ந்தார்.புலவர் அருட்கூட வாயிலில் நின்றிருந்தார்.நம் பங்காரு அம்மா அவர்கள் ஆலயம் வலம் வந்து,அருட்கூடத்திற்குள் நுழையும் போது இவரைப்பார்த்து,அம்மா காட்சியும் கொடுக்கும்,கழற்றியும் விடுமில்ல என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.எங்கோ பல கிலோமீட்டர் அப்பால் இருந்து இவர்கள் பேசியதை அம்மா அவர்கள் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் உள்ளேன் என்பதுபோல் கூறிவிட்டு சென்றதிலிருந்து உணர்ந்தார்.மனம் நெகிழ்ந்தார்.
ஒரு பெண்மணி அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்.திருமண வயதை அடைந்தவர்.அவருக்கு உயர்கல்வி கற்க விரும்பினார்.அவர் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினர்.பிறகு,அம்மா அவர்களிடம் வந்தனர்.மேலும் கல்வி பயிலவே அம்மா கூறுவார்கள்
என்பது இந்த பெண்மணியின் எதிர்பார்ப்பு.ஆனால் அம்மா கூறினார்கள்,மகளே நீ சென்ற பிறவியில் திருமணம் செய்யமுடியாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆன்மா.எனவே முதலில் பெற்றோர் கூறுவது போல் திருமணம் செய்துகொள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
ஆம் நம் முற்பிறவி இரகசியங்கள் எல்லாம் அறிந்தவர் நம் பங்காரு தெய்வம்.எந்த குழந்தைக்கு எது நன்மை பயக்கும் என்று பார்த்து பார்த்து அருள் புரியும் தெய்வம் நம் பங்காரு தெய்வம்.
ஒருவர் நம் அம்மா அவர்களிடம்
கேட்டாராம்,அம்மா நீ நினைத்தால் என்னை பணக்காரனாக ஆக்க முடியாதா என்று.அதற்கு அம்மா கூறினார்கள்,
மகனே,எந்த தாயாவது விஷ பாட்டிலை குழந்தையிடம் கொடுத்து விளையாட விடுவாளா?பணம் அந்த விஷத்தைப் போன்று உனக்கு தீங்கு செய்யும்.
எனவே அதை உனக்குகொடுக்கவில்லை என்று. பக்தியையும்,பணத்தையும் எல்லோருக்கும் கொடுத்துவிட முடியாது என்று அன்னை ஆதிபராசக்தி
கூறுகிறாள்.