ஓம்சக்திக்கொடி உருவானது எப்படி?

0
1742

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் சார்பாக நடைபெறும் சக்திபீடங்களின் குடமுழுக்கு விழாக்களிலும், ஆன்மிக மாநாடுகளின் போதும் ஓம் சக்தி கொடி ஏற்றி வைத்துவிட்டு நிகழ்ச்சிகளைத் தொடங்குவது மரபு.

செவ்வாடைத் தொடண்டர்கள் பாதயாத்திரையாக மேல்மருவத்தூர் வருகின்போது ஓம்சக்திக் கொடி ஏந்தி வருவது வழக்கம்.

இந்த ஓம்சக்திக்கொடி உருவானது எப்படி?

ஈரோடு மாவட்டம் புன்செய்புள்ளியம்பட்டியைச் சேர்ந்த டாக்டர் திரு. துரைசாமி அவர்களிடம் அன்னை ஆதிபராசக்தி அதுபற்றி முதன்முதலில் கூறினாள்.

“மகனே ! முதன்முறையாக சக்திக்கொடியைத் தோற்றுவிக்கவேண்டும். சிவப்புத் துணியிலே தூய வெள்ளை நிறத்திலே மாதிரி ஒன்றை வரைந்து கொண்டு வா ! என்று கூறினாள்.

ஏழுவிதமான சிவப்பு நிறுத்துணிகளுடன் நான்கு விதமான வடிவங்கள் வரைந்து அன்னையின் முன்பு வைத்தார். அவற்றுள் ஒன்றினை மட்டும் தேர்ந்தெடுத்த அன்னை ” இதையே இனிப் பயன்படுத்திக்கொள்” என்று ஒப்புதல் அளித்துள்ளது ஆசி வழங்கினாள்.

26.06.1981 அன்று அன்னை ஆதிபராசக்தியால் ஓம்சக்தி கொடி அறிமுபடுத்தப்பட்டது.

அன்னை ஆதிபராசக்தி யால்அறிமுபடுத்தப்பட்ட ஓம் சக்தி இப்போது உலகெங்கும் உயர்ந்தோங்கிப் பறக்கிறது.

” சக்தி” என்னும் பீடத்தின் மேல் ” ஓம்” என்னும் பிரணவம் உலகமெல்லாம் பரவும் வண்ணம் அது அமைப்பட்டுள்ளது.

இக்கொடிகள் அமைக்க ஏற்ற அளவுகளும் அன்னை ஆதிபராசக்தியால் கூறப்படுள்ளன. அனைத்து
அளவுகளும் ஒற்றைப்படை அளவிலேயே அமைத்தல் வேண்டும்.

சக்தி பீடங்களுக்கு 23″×33″

வீட்டுகளுக்கு 19″×29″

ஊர்வலங்களுக்கு 11″×17″

சைக்கிள்களுக்கு 9″×13″

கார்களுக்கு 7″×11″

என்ற அளவுகளில் சக்திக்கொடிகளைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது அன்னையின் அருள்வாக்கு.

பக்கம்: 323- 324.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு . பாகம்-1.