கோவையில் ஒரு கிறிஸ்தவத் தொண்டர்

0
2107

ஆன்மிககுரு அருள்திருஅம்மா அவர்களின் வண்டிக்கு முன்னும் பின்னும் வண்டிகள் சென்று கொண்டிருந்த போது கிறிஸ்தவத் தொண்டர் ஒருவர் வண்டிகளுக்கு வழி காட்டியாக ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.

வண்டியின் முன்புறம் தன் மகனை நிற்க வைத்துக்கொண்டார். தனக்குப் பின்னால் மனைவி ஓம் சக்தி கொடி பிடித்தது வருமாறு அமர வைத்துக்கொண்டு வழிகாட்டிக் கொண்டு வந்தார்.

யாருமே அவரைக் கண்டு கொள்ளாத நிலையில், அம்மா அவரை அழைத்தார்கள். ‘நான் இன்று உன் வீட்டிற்கு வருகிறேன் பாதபூஜைக்கு ஏற்பாடு செய்து கொள்ள’எனக் கூறி இன்ப அதிர்ச்சி தந்து அவர்களை ஆனந்தக் கடலில் மிதக்க வைத்தார்கள்.

அங்கே சென்று, பாதபூஜையை ஏற்றுக் கொண்டதுடன், அந்தக் குடுமபத்தாரின் பிரச்சினைகள் தீரவும் அருள் பாலித்தார்கள்.

ஜப்பானில் உயிரோடு இருக்கிறான்:

அந்த அன்பரின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் தமிழர் சிங்களர்க்கிடயே ஏற்றப்பட்ட இன கலவரத்தின் காரணமாக அவர்கள் குடும்ப சிதறிப் போய் விட்டது. உயர் பிழைத்தால் போதும் என்று எங்கொங்கோ ஓடிவிட வேண்டியதாயிற்று. சில வருடங்கள் கழித்து, அவரவர் இருப்பிடம் தெரிய ஆரம்பித்தது. அந்த பெண்மணியின் தம்பி மட்டும் எங்கே இருக்கிறான் என்பது தெரியவில்லை. கலவரத்தில் அவன் கொல்லப்பட்டானா… தப்பிப் பிழைத்து எங்கேயாவது உயிரோடு இருக்கிறானா….? தாய் தந்தையாக்கு இதுவே கவலை! அவனை பற்றி ஒரு தகவலும் தெரியாமல் பாசத் தவிப்பில் தத்தளித்தது அந்த குடும்பம்.

அம்மா அந்த வீட்டிற்கு எழுந்தருளியபோது,அந்த பெண்மணி, ‘அம்மா! என் தம்பி என்ன ஆனான் என்று தெரியாமல் என் தாய் தந்தையர் தவிக்கிறார்கள்’என்று முறையிட்டர்.

‘அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவன் இப்போது ஜப்பானில் ஒரு கப்பலில் அடிமை வேலையில் இருக்கிறான். உரிய காலம் வரும்போது அவனை உங்கள் குடும்பத்தோடு சேர்த்து வைக்கிறேன். அவனை பற்றிய கவலை உனக்கு வேண்டாம்’ எனக் கூறி அந்தக் குடும்பத்தின் நெஞ்சில் பாலை வார்த்தாகள்.

பின் அந்தத் தொண்டரை நோக்கி, ‘மோட்டார் எந்திரம் செய்யும் இந்தத் தொழிலையே தொடர்ந்து செய்து கொண்டு வா! உன் தொழிலில் படிப்படியாக வளர்ச்சி கொடுக்கிறேன் ‘எனக்கூறி விடைபெற்றாகள்.

(கேவை மாவட்டத்தில் ஆச்சரியப்பீட நாயகர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் ஆன்மீக பயணத்தின் போது நடந்த அற்புதங்கள்)

பக்கம்: 414 – 415.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு. பாகம்-2.