அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்தவர் மும்பையை சார்ந்த ஜைன மதத்தைச் சேர்ந்தவர் “ஷ”என்று பெயர். அருகில் இருந்தவரிடம் “இது என்ன புத்தகம்? என்ன பாடல்? என்று ஆங்கிலத்தில் விசாரித்தார்.
நமது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பற்றியும். நடமாடும் தெய்வமான அருள்திரு பங்காரு அடிகளார்அவர்கள் பற்றியும் ஓரளவு விளக்கமாக எடுத்துரைத்தேன்.

உடனே அந்த மும்பையை சார்ந்தவர் “என் மனைவி கருப்பையில் புற்றுநோய் ஏற்படு மிகவும் அவதிப்படுகிறாள். 19.1.81.அன்று அறுவை சிகிச்சை செய்வதாக முடிவு செய்துள்ளோம். அவளுக்கு இப்போது இரத்தப்போக்கு இருந்து வருகிறது. படுத்த படுக்கையாகக்கிடக்கிறாள். உங்கள் கோயிலுக்கு வந்தால் குணப்படுத்த முடியுமா ?” என்று கேட்டார்.

1981ஜனவரி இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமையன்று காண்ட்ராக்டர் அந்த மும்பையை சார்ந்தவரை அழைத்துக்கொண்டு அன்னை ஆதிபராசக்தியிடம் வந்தார்.

“உன் மனைவியை அழைத்து கொண்டு வா”என்று அன்னை ஆதிபராசக்தி கூறிவிட்டாள். அந்த அம்மையாரின் நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“எக்காரணத்தைக் கொண்டும் அறுவை சிகிச்சை தேவையில்லை நானே இவளைக் குணப்படுத்துகிறேன். ஆனால் தீடீர்ப்பயனை எதிர்பார்க்க வேண்டாம். சிறிது சிறிதாகக் குணப்படுத்துகிறேன்” என்று அருள்வாக்கில் கூறினாள் அன்னை ஆதிபராசக்தி.

மும்பை சார்ந்தவர் இதனை நம்பவில்லை. பயாப்சி முதலிய பல்வேறு சோதனைகளையும் செய்து பார்த்துவிட்டுத்தான் புற்றுநோய் என்று சந்தேகத்துக்கு இடமின்றிச் சொல்லிவிட்டார்கள். மும்பையில் அறுவைசிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.

அந்தப் புற்றுநோய் கருப்பையுடன் நின்றுவிட்டதா? அல்லது உடலின் மற்ற பகுதிகளும் பரவியுள்ளதா என்பது அறுவை சிகிச்சையின் போதுதான் கண்டுபிடிக்க முடியும் என்று பிரபலமான டாக்டர்களே சொல்லிவிட்டார்ககள். இந்நிலையில் அன்னை ஆதிபராசக்தி
சொல்லியதை மும்பை சார்ந்தவரால் நம்பமுடியவில்லை. கேட்டுக்கொண்டு வெளியே வந்தவிட்டார்.

இந்நிலையில் ஒரு மொழி பெயர்ப்பாளரை அழைத்துக் கொண்டு கணவனும் மனைவியுமாக அருள்வாக்கு கேட்கச்சென்றார்கள்.

அவரிடம் சிறிதும் சினம் கொள்ளாமல் அன்னை “மகனே ! நீ இங்கிருந்து மும்பை போகிற வழியிலேயே உன் மனைவியின் உதிரப்போக்கு நின்றுவிடும் . இதுவரை நடைப்பிணமாக இருந்த இவள் மாதக்கணக்கில் படுத்த படுக்கையிலேயே கிடந்த இவள்,ஊருக்குப் போனதும் வீட்டு வேலைகள் முழுவதும் தானே செய்வாள் . இவை இரண்டையும் பார்த்த பிறகே உனக்கு என்மேல் நம்பிக்கை வரும். தைப்பூசத்தன்று கலசவிளக்கு வேள்விப்பூஜையில் இவளை வந்து கலந்து கொள்ளச் சொல் ! கொஞ்சம் கொஞ்சமாக இவளுடைய நோயைத் தனித்து இல்லாமலே செய்துவிடுகிறேன்” என்று கூறி அனுப்பி வைத்தாள் அன்னை ஆதிபராசக்தி.

அந்த மும்பை சார்ந்தவர் மறுநாளே மனைவியுடன் மும்பைக்கு புறப்பட்டார் அவர் மனைவிக்கு மாதக்கணக்கில் தொல்லை கொடுத்து வந்த உதிர்ப்போக்கு மும்பைக்கு செல்லும் வழியலேயே நின்றுவிட்டது. ஊர் போய்ச் சேர்ந்தவுடன் வீட்டு வேலை முழுவதையும் அந்த அம்மையார் தானே செய்தார். மும்பை சார்ந்தவருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

அதன்பின் 20. 1.1981 தைப்பூச விழாவிற்கு மனைவியோடு வந்து கலசவிளக்கு வேள்விப்பூஜையில் கலந்துகொண்டனர்.

இவை எல்லாவற்றையும் விடப் பெரிய அதிசயம் என்னவென்றால் பிப்ரவரி மாதம் அந்த அம்மையாருக்கு மீண்டும் பயோப்சி செய்து பார்த்ததில் புற்றுநோய்க்கான அறிகுறி எதுவுமே இல்லை என்று பெரிய மருத்துவர்கள் பலர் பரிசோதனை செய்து முடிவைக் கூறிவிட்டனர்.

அன்னை ஆதிபராசக்தி செய்யும் அற்புங்கள் பலவகைப்படும். வேண்டுவோர் வேண்டுவதைத் தரவல்லமையுள்ள பெருமாட்டி இவள். ஆயினும், மும்பை சார்ந்தவர் போன்ற ஒருசிலருக்கு உடனே அருள்பாலிக்கிறாள் சிலருக்கு நாள்கணக்கில் பலன் தருகிறாள். அருள் கிட்டாமல் போகிறவர்கள் மிகச்சிலரே !

எனவே , அன்னை ஆதிபராசக்தியிடம் அருள்பெற நாம் நம் முயற்சிகளைச் செய்து முறையிட வேண்டும். அருள் செய்வது அவள் கருணையைப் பொறுத்தது.

பக்கம்: 326-328.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு. பாகம்-1