மருவூர் மருந்து மா மருந்து வேலை செய்யாது மருவூர் மருந்துதான் வேலை செய்யும். ஏற்ற மாத்திரை மருவரசி, மருந்தரசி, மறுஊசி எல்லாமே மருவத்தூர் தான். ஆன்மீகத்தில் வளைந்து கொடுக்க வேண்டும்.
அன்னை ஆதிபராசக்தியே பங்காரு அடிகளாரகவே பேசுகிறாள் என்று கூறுகிறீர்கள். உண்மை உணர்த்துவதற்காகத் தான் இங்கு இருக்கிறேன்.ஏற்ற மாத்திரையைத் தான் கொடுப்பேனே தவிர ஏமாற்ற மாட்டேன். எப்படியும் காப்பேன் மாத்திரையையும் உண்டு; வேப்பிலையும் உண்டு; மனிதர்களை எந்த ரூபத்திலும் காப்பாற்றுவேன். உடல் வலி உண்டு.

பசி இருந்தால் பகுத்தறிவு உண்டு. பார்வை இருந்தால் தான் பாவச் செயல் தென்படும். கருவி இருந்தால் அழிவு உண்டு. ஏமாறாதே ஏமாற்று மருந்துகளையும் போலிகளையும் கண்டு ஏமாறாதே! ஏற்ற மருந்து ‘அம்மா’ தான். குழந்தையிலிருந்து கிழவனாகிக் கடைசி வரையில் மருந்து சாப்பிட்டே பிழைக்கின்றாய். என்றும் ஏற்ற மருந்து ‘அம்மா ‘என்னும் மருந்து ஒன்று தான். மானிட உடம்பும் ஆன்மீகமும் பல திசுக்கள் ஒன்று சேர்ந்த குடும்பமே மானிட உடம்பு. அது போலப் பல குடும்பங்களும் சேருவதே ஆன்மீகம். மருந்தும் மருத்துவனும் ஒரு மருந்துச் செடிக்கும் நோயுண்டு.

.ஒரு மருத்துவனுக்கும் நோயுண்டு. பிறப்பு, இறப்பு எல்லோருக்கும் உண்டு. ஆன்மீக வைத்தியம் இயற்கை வைத்தியம், செயற்கை வைத்தியம் என்று பல வகை உண்டு. இங்கு வந்து பலர் குணம் பெறுவது. அன்னதானப் பாதுகாப்பு இன்று எங்கு நோக்கினாலும் நோய்கள்! காம நோய்! இருதய நோய்! நரம்பு நோய்! வாத நோய் !சீறுநீரக நோய்! மூட்டுப் பிடிப்பு! தலை வலி எனப் பலப்பல நோய்கள். இவற்றைப் போக்க ஆங்காங்கே அன்னதானம் செய்.

அன்னதானம் எல்லாவற்றிலிருந்தும் பாதுகாக்கும். இயற்கை வைத்தியம்- அனுபவ வைத்தியம் கஷ்ட காலம் வரும் போது தட்டு முட்டுச் சாமான்களை விலைக்குப் போடலாம். வீட்டிலுள்ள மண்பானை விலை போகாது. அதனால் மண்பானை மட்டமாகி விடாது. பழமைக்குத் தான் மதிப்பு உண்டு. எத்தனை புதிய வைத்தியம் வந்தாலும், இயற்கை வைத்தியத்திற்கும் அனுபவ வைத்தியத்திற்கும் மதிப்பு உண்டு. நாட்டு மருந்துகள் என்ன தான் விஞ்ஞான முறையில் மருத்துவம் செய்தாலும் நாட்டு மருந்துகளான வேப்பிலைக்கும் துளசிக்கும் என்றும் மகத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஏற்ற மாத்திரை ஆன்மிகமே மண் வளம் இருந்தால் தான் வாழ்க்கையில் நல்லது நடக்கும். வெறும் மாத்திரை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து விட முடியாது. மாத்திரை ஏமாத்திரை ஆகும். ஏற்ற மாத்திரை ஆன்மிகம் தான். ஆன்மாவில் குளிர்ச்சியை ஏற்று கண்ணுக்குக் கண்ணாடி போடுகிறான்.

சிலர் கண்ணுக்குள்ளேயே கண்ணாடி பொருத்திக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சிக்குக் கண்ணாடி போடுகிறார்கள். அந்தக் குளிர்ச்சியை ஆன்மாவில் கொடுத்துப்பார் அதன் பலன் தெரியும். சக்தி மாத்திரை தான் வேலை செய்யும் ஆன்ம பலம்பெற உணவைக் கட்டுப்படுத்து! மனத்தைக் கட்டுப்படுத்து! விரதமிரு! பாதயாத்திரை மேற்கொள்! இங்கே எந்த மாத்திரையும் வேலை செய்யாது மகனே! சக்தி மாத்திரை தான் வேலை செய்யும்! நோய்க்கு மூல காரணம் உன் உள்ளம் சுத்தமாய் இருந்தால் நோய் இருக்காது. நன்றி

பக்கம் :15-17.

அன்னை ஆதிபராசக்தி அருளிய அற்புதங்கள்

#coronavirus #omsakthi #adhiparasakthi #amma #melmaruvathur #medicine