“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்களே ஏற்று, அவர்களையும் இங்கே அழைத்துவர வேண்டும். நீங்கள் சைவ உணவு சாப்பிடுகிறவர்களாக இருக்கலாம். பக்கத்து வீட்டில் வைக்கும் கருவாட்டுக் குழம்பின் நாற்றம் உங்களுக்கும் தான் எட்டும். அதுபோல நீங்கள் என்னதான் ஆன்மிக நெறியில் ஈடுபட்டாலும் உங்கள் பக்கத்தில் உள்ளவர்களையும், ஆன்மிகப் பாதைக்கு அழைத்துவர வேண்டும். அவ்வாறு அழைத்து வந்தால் அந்தக் கருவாட்டு நாற்றம் உங்களுக்கு எட்டாது.
ஆன்மிக நெறியில் ஈடுபடாதவர்களையும், ஆன்மிகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.
ஐந்துபேர்க்கு இருமுடி போட்டுக் கூட்டி வருவதனால் அந்த ஐந்து பேருடைய ஆன்மாவும் குளிர்கிறது. அப்படிக் குளிரும் போது அந்தப் பலன் உங்களுக்கும் கிடைக்கும்.”

அன்னையின் அருள்வாக்கு