எங்கள் குடும்பத்தில் என் இல்லத்தில் இந்த வருடம் சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தினோம். ஐப்பசி மாதம் சக்தியின் அருளால் புதுமை புகுவிழா வேள்வி செய்து குடிபுகுந்தோம். (ஆன்மிக குருஅருள்திரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்களின்) அம்மாவின் படம் வைத்து யாகம் செய்த வீட்டில் அம்மா படம் வைத்திருந்த இடத்தில் நாங்கள் ஒரு அற்புதத்தை க் கண்டோம். கல்லாலும், மணலாலும், சிமெண்டாலும் செய்த சுவற்றில் நான் இருமுடி செலுத்த சக்திமாலை அணிந்திருந்த சமயத்தில் விடியற்காலை 5.10 மணி முதல் 5.30 மணி வரை அம்மா ஜோதிவடிவத்தில் வந்து அருள்புரிந்தார்கள். அதுமட்டுமின்றி மறுநாள் இரவு 12 மணிக்கு பிறகு வந்தவர்கள் அன்று விடியற்காலை 5.30 மணி வரை ஜோதிவடிவத்திலேயே இருந்தார்கள், மறுநாள் நான் இருமுடி எடுத்துக்கொண்டு மன்றம் சென்று மேல்மருவத்தூர் செல்ல வேண்டியதாயிற்று. அன்று அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் வருகிறார்களா என்று வீட்டில் உள்ளவர்களைப் பார்க்கச் சொல்லிவிட்டுச் சென்றேன். அவர்கள் பார்த்து உள்ளார்கள். அங்கு ஒன்றும் தெரியவில்லை என்றனர். ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் எனது வாழ்வில் பல அற்புதங்கள் செய்துள்ளார்கள். எனக்கு பங்காருஅம்மா இருக்கிறார்கள் என்ற ஓரே எண்ணத்தில் மட்டுமே நான் உயிர் வாழ்கிறேன். என் தாலி பாக்கியத்தையும் பங்காருஅம்மா அவர்கள் காப்பற்றி அதனை என்னை உணரும்படியும் செய்துள்ளார்கள். பங்காரு அம்மா இருக்க எனக்கு பயம் இல்லை என்று வாழ்ந்து வருகிறேன்.

நன்றி

பக்கம்:45.

சக்தி. திருமேனி பாஸ்கரன்,
ஓகை குடவாசல்.

சக்தி ஓளி
2015.