உலக மக்கள் யாவரும் மன உழைச்சலாலும், உடற் பிணிகளாலும், மனக் கவலைகளாலும் அன்றாடம் அல்லுறுவது நாம் நாள் தோறும் காணும் காட்சியாகும்.

ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்
உலக மக்களின் மனக்கவலையை மாற்றுவதற்கு வழங்கி வரும் மா மருந்து தான் ஆன்மீகப் பணிகளாகும். ஆம்! நாம் எல்லாம் அடிகளார் அவர்களின் பாதம் பணிந்து என் துன்பத்தைப் போக்கீடு இல்லையா என வேண்டிக் கேட்பவர்களுக்கெல்லாம் அடிகளார் அவர்கள் வழங்கும் அருமருந்தே ”தொண்டு செய்! தொடர்ந்து செய்!” எனும் தாரக மந்திரமாகும்.

அமாவாசை வேள்வியில் குச்சி போடு, ஜோதி ஏந்தி வா! மேல்மருவத்தூரில் தங்கி மூன்று நாள் உணவுத் தொண்டு செய், சுகாதாரப் பணி செய்! என அவரவர் ஊழ்வினைக்குத் தக்கவாறு அருமருந்து வழங்கி வருகிறார்கள்.

காலங்காலமாக தவங்கிடந்தாலும் ஆன்மிககுருஅருள்திருபங்காரு அடிகளார் அவர்களின் திருவடி தரிசனம் கிடைப்பது அரிதாகும். தொண்டுசெய்யும் அனைத்து சக்திகளுக்கும் அடிகளார் அவர்களின் அருள் தரிசனம் கிடைத்து வருவது நாமும் நம் முன்னோர்களும் முற்பிறவியில் செய்த தவப் பயனே ஆகும்.

தொண்டு செய்யும் நம் அனைவருடைய உள்ளத்திலும் ஆன்மிக குரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் இட்ட பணிகளை செய்து முடித்துவிட்டோம் எனும் அகந்தைக் கிழங்கு கூத்தாடுகிறது. நாம் அனைவரும் அன்னை ஆதிபராசக்திக்கு தொண்டு செய்கிறோமா? இல்லை. நம் பிணிகளையும், துன்பங்களையும் போக்க பங்காரு அடிகளார் அவர்கள் மறைமுகமாக நமக்குத் தொண்டுசெய்கிறார்களா? என்பது புரியாமல் தலை தடுமாறுகிறோம்.

ஆழ்ந்து சிந்தித்தால் நமக்கு உய்தியளிக்க அன்னை ஆதிபராசக்தியாகவே நமக்குத் தொண்டாற்றுகிறார்கள் என்ற உண்மை புரியும். நாம் அனைவரும் தொண்டாற்றவும், அதன்மூலம் அன்னை ஆதிபராசக்தியின் அருள் கிட்டவும் பங்காருஅடிகளார்அடிகளார் அவர்கள் நமக்காகத் செய்து வரும் தொண்டுகளை நம்மால் பட்டியலிட முடியாது.

இலவச மருத்துவமனை, கல்விக்கூடம், சமுதாயப்பணி ஆற்றிட அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்கள் ஆகியவற்றைக் கருணைக் கடலாக விளங்கும் ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் சமுதாய நன்மைக்காக அமைத்துக் கொடுத்து தொண்டாற்றி வருகிறார்கள்.

”நான் சொல்வதை மட்டும் செய் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கின்றேன்.” என்பது அடிகளார் நமக்கு அருளியுள்ள மந்திரமாகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம்- ஏராளம். அனைத்தும் அடிகளார் அவர்களின் அருட்செயல்களே ஆகும். என் வாழ்வில் அருள்திரு அடிகளார் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அருட்செயலை விளக்கிக் கூறினால் அடிகளார் அவர்களின் கூற்றின் முழுப்பொருள் விளங்கும்.

பேராசிரியப் பணி ஆற்றும் எனக்குக் கடந்த 9 ஆண்டுகளாக வயிற்றில் அல்சர் நோய் ஏற்பட்டு சொல்லொணா
வகையில் துன்புற்று வந்தேன். வீட்டிலும் வெளியிலும் எவ் உணவு உட்கொண்டாலும் என் உடல் நிலை ஏற்றுக் கொள்ளாது.

நான் உட்கொள்ளும் உணவில் உப்பு, காரம், புளி ஆகியவற்றை அறவே சேர்க்க் கூடாது. சூழ்நிலை காரணமாக மேற்கண்ட சுவையான உணவை உட்டகொண்டால் உடனடியாக வயிற்றுவலி, வாந்தி, தலைவலி ஏற்பட்டு துன்புற்று வந்தேன்.

எந்த விஷேடங்களிலும், விழாக்களிலும் உணவு உண்ணாமலேயே வந்து விடுவேன். வாழ் நாள் முழுவதும் எந்தச் சுவையுடைய உணவையும் உட்கொள்ளவே முடியாதோ? என்ற கவலை நாள் தோறும் என்னை வருத்தி வந்தது.

பங்காருஅடிகளார் அவர்களின் ”தொண்டச் செய்” என்ற அருள் ஆணையை ஏற்று வாழ்நாள் எல்லாம் தொண்டாற்றி அருள்திரு அடிகளார் அவர்களின் அருளால் துன்பத்தை மறப்போம் என்று எண்ணிய எனக்கு அடிகளார் அவர்கள் வழங்கிய தொண்டு தைப்பூசத் திருநாளில் உணவுக்கூடத்தில் தொடா்ந்து 70 நாட்கள் தொண்டு செய்யும் பணியாகும்.

எந்த உணவை என் உடல் ஏற்றுக்கொள்ள முடியாதோ, எந்த உணவு என் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்குமோ அந்த உணவுத் தொண்டை 70 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டி அமைந்தது.

மேல்மருவத்தூர் அன்னதானக் கூடத்தில் நாள்தோறும் மதியம் மட்டும் தயிர் சாதம் உப்பின்றிச் சாப்பிட்டு வந்தேன். உடலோ மிகவும் மெலிந்து சோர்வுற்று நலிந்து வந்தது. தலைவலியும், வயிற்று வலியும் வாந்தியும் ஏற்படவே மேல்மருவத்தூர் மருத்துவமனை சென்று உடலைப்பரிசோதித்துப் பார்க்கச் சென்றேன். மருத்துவமனையின் உயர் மருத்துவரிடம் காண்பித்தபொழுது அவர் பல பரிசோதனைகளுக்குப் பின்னர் ஸ்கேன் எடுத்துப் பார்த்தார். உடன் அவர் அல்சர் நோயின் அறிகுறிகள் எதுவுமே ஸ்கேனில் இல்லை. இனி இந்நோயால் துன்புற மாட்டீர்கள் எனக் கூறியதும் என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள புகழ்வாய்ந்த மருத்துவர்கள் அனைவரிடமும் காட்டி உண்ட மருந்துகளாலும் உடல் முழுவதும் பூசிக்கொண்ட மருந்துகளாலும் குணப்படுத்த முடியாத அல்சர் நோய் அடிகளார் அவர்கள்அருளிய உணவுத்தொண்டால் அறவே அற்றுப் போனதை எண்ணி எண்ணித் துள்ளிக் குதித்தேன்.

அப்பொழுதுதான் உணர்ந்தேன்
நாம் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்க்குப்
பணி செய்யவில்லை. பங்காருஅடிகளார் தான் நமக்குத் தொண்டாற்றுகிறாள் என்ற உண்மையை!ஆன்மிககுரு
அருள்திரு பங்காருஅடிகளார் வழங்கும் பணியின் உன்னதம் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது உணர்த்திதற்குரியது ஆகும்.

கருவறை தரிசனத்தைவிட ஆன்மிகஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்வழங்கும் அருந்தொண்டினை யாரெல்லாம் செய்து வருகிறார்களோ அவர்களெல்லாம் பிறவிப்பிணி அற்று உய்திபெறலாம் என்பதை உணா்ந்து தொண்டு செய்வோம்! தொடா்ந்து செய்வோம்!!

ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்களை
யாராலும் புரிந்து கொள்ள முடியாத பரம்பொருளாவாள். அன்னை ஆதிபராசக்தி நம்பால் நிகழ்த்திக் காட்டும் அத்தனை காரியங்களுக்கும் எண்ணிலடங்காக் காரணங்கள் உண்டு.

எப்படி நமக்குத் தண்ணீரும் காற்றும் முக்கியமோ அதே போன்று தான தருமங்கள் முக்கியமானவை. அதிலும் அன்னதானம் ஒன்றே நாம் நம் வருங்காலச் சந்ததியினருக்குச் சேர்த்து வைக்கும் சேம நிதியாகும்.

எனவே அன்னதானம் செய்வோம்! இல்லாவிடில் அன்னதானத்தொண்டில் நம்மை இணைத்துக்கொண்டு இம்மைத்துன்பம் போக்கி மறுமை இன்பம் எய்துவோம்.

நன்றி.

ஓம்சக்தி

பேராசிரியர் முனைவர் .கே. கணேசன்.

மருவூர் மகானின் 70வது அவதாரத்திருநாள் மலர்.