தைப்பூச விழா
        தைப்பூச விழாக்களில் மிகவும் சிறக்க வாய்ந்தது, கலசபூசை, விளக்குப்பூசை முதலியன. பெண்களை வேள்வி செய்வது, கல பூசை செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுத்தி அவர்களின் ஆன்ம உயர்வுக்கான பேற்றை நல்கினாள்.  1993ஆம் ஆன்டு முதல் தைப்பூசவிழாவை ஒட்டி ஆண்டு தோறும் ஆன்மிக ஜோதியை ஏற்றி வைப்பது சித்தர் சித்தர்பீட்த்து விழாக்களில் ஒன்றாகும்.  அடிகளார் இல்லத்தில் ஏற்றப்பட்ட ஜோதி விளக்கு சித்தர் பீடத்திற்கு‌ மேளதாளங்களுடனும் அன்னை ஆனையிடும் முறைப்படியும் கொண்ட வரப்படும்.  மாலை 6 அணியளவில் அடிகளாரால் ஜோதி ஏற்றப்படும் 1996ம் ஆண்டு அடிகளாள் அவர்கள் ஜோதியை ஏற்றும்போது வானத்தில் கிழ்த்திசையில் ஒரு நட்சத்திரமும், மேற்கு திசையில் ஒரு நட்சத்திரமும் வெளிப்பட்டு மின்னின.   இங்க பாலகன் ஏற்றி வைக்கம் ஜோதி, ”ஏகஜோதி”  என்ற அன்னையே கூறியிருக்கிறாள்.  அன்று ஆயிரக்கணக்கான ஏழை மக்கட்கு அன்னைதானமும், ஆடைதானமும் வழங்கப்படுகிறது.

அடிகளார் பிறந்தநாள் விழா:
        பக்தர்களின் துயர் துடைக்க அன்னை அவதாரமாக இப் பூவுலகில் வந்து அரள் செய்கின்றாள்.  அன்னை உறைந்திருக்கும் அடிகளாரின் அவதாரத் திருநாளான மார்ச் 3ஆம் நாள்  பக்தர்களளால அடிகளாருக்கு எடக்கும் விழா தான் அவதாரத் திருநாள் விழா.  இதன் போது ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், ஆடைதானம், இயந்திரங்கள் வழங்குதல், இலவச கண் மருந்தவம் என்பன போன்ற நற் சமூக சேவைகள் நடைபெறுகின்றன.

ஆடிப் பூர விழா

         அன்னையின இத் திருக் கோயிலில் நடைபெறுகின்ற விழாக்களுள் மிகச்சிறப்பானது ஆடிப்பூர விழா.  அன்னைக்கு உகந்த நாள் ஆடிபூரம்.  இவ் விழாவில் கஞ்சி வார்த்தல். சுயம்பிற்கு பக்தர்கள் தாமெ பால் அபிடேகம் செய்தல், அடிகளாரை வயப்படுத்தி அன்னையே அங்கவலம் வருதல் என்பன முக்கிய நிகழ்வுகளாகும்.

        ஆடிப்பூர நாளன்று அன்னைக்க படைக்கும் நிவேதனப் பொருள் கஞ்சியேயாகும்.  பக்தர்கள நெடுந் தொலைவிலிருந்து கஞ்சியை சுமந்த வந்து அன்னைக்கு படைக்கப்படும்.  பின்பு அதனை ஏழை எளிய மக்கள் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அன்னையின் கருவறைக்குள் சாதி சமய வேறுபாடில்லாமல் எல்லோரும் சென்று தமது கையாலேயே சுயம்பிற்கு பாலவிடேகம் செய்யலாம்.  மற்றும் அன்னை அடிகளாரை வசப்படுத்தி அங்கவலம் வருவதும் இந்த ஆடிப்பூர விழாவின் சிறப்பம்மாகும்.  தன்னை நம்பி வந்த ஆன்மாக்களின் துயர் துடைக்க தானே தன்னை வருத்தி அன்னை அங்கவலம் வந்து மக்களின் பாவங்களை போக்குகின்றாள்

நவராத்திரி அகண்ட விளக்கு

         அன்னை பராசக்திக்குரிய விழாக்களுள் நவராத்திரி விழாவும் ஒன்று எல்லா இடங்களைப் போலவும் ஒன்பது நாள்களும் அபிடேக ஆராதனைகள்  இலட்சார்ச்சனைகள் நடைபெறும்.  ஆனால் வேறு எங்கும் காணப்படாத நிகழ்ச்சியாக முதல் நாளில் அன்னையால் “அகண்டம்” எனும் பெயரால் ஏற்றப்படும் விளக்காக “அகண்ட விளக்கு” ஏற்றல் முக்கியத்துவம் அளிக்கிறது.  அகண்டம் எனும் சொல்லுக்கு துண்டிக்கப்படாத “முழுமை” அல்லது “எல்லையற்றது” என்பது பொருள். புதிதாக செய்யப்பட்ட அகல் விளக்கு திரி இட்டு, முக் கூட்டு எண்ணெய் (வேப்பெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய்யெண்ணெய்) கலந்து இருக்கும்.  அதனை அன்னை தன் வாயாலோ, கையாலோ திரி ஒன்றை எடுத்திக் கொளுத்தி அதன் மூலம் அகண்ட விளக்கை  ஏற்றி வைக்கிறாள். 

      தொடர்ந்து ஒன்பது நாளும் விடாமல் எரிந்து கொண்யிருக்கும் அகண்டத்திற்கு எல்லோரும் எண்ணெய் கொண்டு வந்து ஊற்றுவார்கள்.  இந்த நவராத்திரி அகண்ட விளக்கை தரிசிப்பது ஊழ்வினைத் துன்பங்கைத் தணிக்கும் என்பது அன்னையின் அருள்வாக்கு.

     நவராத்திரி ஒன்பது நாட்களும் கோயிலி்ல் இலட்சார்ச்சனை நடைபெற்றவாறே இருக்கும்.  விழாவின் இறுதி நாளில் அகண்டம் திருக்கோவிலில் வலம் வந்த பிறகு திருக்கோவிலின் பின்புறம் வாயு திசையில் வைக்கப் பெற்றுக் குளிரும்படி விடப்படுகிறது.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here