ஷங்காய் முப்பையைபோல கடற்கரை தொழில் நகரம்.  ஷங்காய் டவுன் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  1847 ஆம் ஆண்டு என்ற OPM WAR போர் நடந்துள்ளத.  Silver War க்குப்பின்பின் 1949க்கு பிறகு சீனா ஓரே நாடாக உருவனது.  1912க்குப் பிறகு மன்னர் ஆட்சி முடிவுக்க வந்தது.        மா.சே துாங் புரட்சிக்குப் பிறகு சீனா கம்யுனிஸ்ட் நாடாக உருவாகி உளளது. கம்யுனிஸ்ட் நாடாக சீனா மாறுவதற்கு முன் மிங், யங், சங் என்று பல பேராசுகள் சீனாவை ஆண்டுள்ளன.  இவர்களுக்கு அப்போது சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள் பக்கத்து நாட்டு மங்கோலியர்கள்.  இவர்கள் சீனர்களைப் போலவே இருப்பார்களாம்.  உயரமும்  பருமனும் கொண்ட இவர்கள் அடிக்கடி சீனாவின் மீது படையெடுத்துள்ளனர்.  இவர்கள் குதிரைகளை வளர்த்த.  குதிரையேற்றம் கற்றவர்களாக இருந்ததால் சீனப் பெண்களை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்வார்களாம்.

        ஆனால் இப்போது மங்போலியா பொருளாதாரம் குன்றி மக்கள் தொகையும் இரண்ட கோடியாக குறைந்து சீனாவிற்கு அடங்கி இருக்கிறார்கள். சீனா  ஜப்பான் சண்டை நடந்துள்ளது.   சீனா நிலங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்காத போது விவசாயம் முன்னெறாமல் எதையும் மக்கள் பயிர் செய்யாமல் இருந்துள்ளனர்.  ஆனால் மக்களிடம் நிலம் ஒப்படைத்தற்குப்பின் நல்ல விவசாய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பெருநகரங்களைச் சுற்றி 50  கீ்மீ தூரத்தை கடந்து விவசாயம், ஆடு, மாடு, குதிரை, மான். வளர்ப்பு நடைபெறுகிறது.  பெரிய ஆடுகளிலிருந்து மிஷன் மூலம் பால் கறக்கிறார்கள்.  சீனர்கள்  “Chiming”என்ற மூதாதையரை வணங்கு விழா,  “Lanten” என்ற விளக்கு விழா,   “Mid Autumn” என்ற பௌர்ணமி விழா ஆகிய முக்கிய விழாக்ககைள் கொண்டாகின்றனர். சீனாவில் “சைனிஷ் காலண்டர்“ உள்ளத.  நம்மைப் போலவே நல்ல நாள் விழா நாட்கள் என்ற நாட்குறிப்புகள் உள்ளன.  ஷங்காய் நகரில்  “Bund” என்ற முக்கியப் பகுதி உள்ளது. இங்குதான் முக்கியமான கட்டிடங்கள் வானுயர்ந்து நிற்கின்றன.  “Wang Po” என்ற நதி ஒடுகிறது.

        நாம் இருவர் நம்க்கிருவர் போல, ஒரு குடும்பம் ஒரு குழந்தை ( Single Child Family) முறை சீனாவில் உள்ளது.  ஒன்றுக்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால், அவர்களுக்கு அரசாங்க சலுககைள் ரத்து செய்யப்படும்.  அந்தக் குடும்பம் அரசாங்கத்திற்கு தண்டனையாக அபராதப் பணம் செலுத்த வேண்டும். 4

       அடுத்தது  ‘Yi-Yuan’ என்ற தோட்டம் பார்க்கப் போகலாமா?  கார்டன் என்றவுடன் ஏதோ மரம், செடி, கொடி உள்ள தோட்டம் என்று நினைத்து விட வேண்டாம்.  அது ஒரு நினைவிடம்.  தீய சக்திகள் அனுகாமல் இருப்பதற்கு ஒன்பது அடுக்குகளைக் கொண்ட கட்டிடம்.  300 ஆண்டுகளுக்க முற்பட்டத.  மிங் பேராசு மன்னர் ஒருவரால் தன் பெற்றோரை மகிழ்விக்கவும், அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டியும் சீனக் கட்டிடக் கலையின் மூலம் அழகுறக் கட்டப்பட்ட இடம்.  பாறைகள், செடிகள், குளம், கட்டிடம் என்று நான்கு பிரிவுகளாகக் கட்டப்பட்டுள்ளது

        சீன மூங்கில் வாஸ்துக்குப் பேர் போனது.  தீய சக்திகளை டிராகன்கள் சண்டையிட்டு அழிக்கும் என்ற நம்பிக்கை அங்க உள்ளது.   நேர்த்திக் கடனாக அங்குள்ள குளத்தில் சிவப்பு நிற மீன்களை விட்டுள்ளார்கள்.   அவை கூட்டம், கூட்டம்மாக மேய்வது பார்ப்பதற்க மிகவும் அழகாக உள்ளது.  இந.த இடம் பழமையான, பார்ப்பதற்கு முக்கியமான நினைவுச் சின்னம்.  தாய்லாந்திலிருந்து சுத்தமான தண்ணீரில் உருவான பாறைகளைஇங்க கொண்டு வந்து வைத்துள்ளார்கள்.  நாங்கள் சென்றபோது அங்கு நமக்குக் குளிர்.  ஆனால் அங்குள்ளவர்களுக்கு இது நல்ல தட்ப வெப்பநிலையாக இருந்தது.

        சீனாவில் சாதாரணமானவர்கள் 600 ச.அடிக்குள் குடும்பம் நடத்துகின்றனர். 1000 ச.அடியில் வீடு இருந்தால் அவர்கள் வசதியானவர்கள் என்று அர்த்தமாம்.  பிரஞ்சுக் கட்டிடக் கலை உள்ள இடம் தனியாக உள்ளது.  அந்த சீதிகள் லண்டன் வீதிகளைப் போலக் காட்சி அளிக்கின்றன.  பெரிய, பெரிய சாலைகள் சிமெண்ட் சாலைகளாக சுத்தமாக உள்ளன  

         எங்கள் சீனப் பயணத்தை உடன் வந்து நடத்திக் கொடுத்த திரு.மோகன். மதரையைச் சேர்ந்தவர்.  எந்ந ஏற்பாடு செய்தாரோ இல்லையோ, சாப்பாட்டுக்கு நல்ல வழி செய்து விட்டர்.  எல்லா நகரங்களிலும் ‘Indian Kitchen’ என்ற உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.  சீனாவில் அந்தச் சாப்பாடு எங்களுக்கு  தேவாமிர்தமாக இருந்தது. காலைச் சிற்றண்டி தங்கும் இடத்தில், மதியம், இரவு ‘Indian Kitchen’ என்று சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை.  நம்ம ஊர்க்காரர்கள் நம்மை நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள்.

         அடுத்து உலகப் புகழ் பெற்ற சீனத்துப் பட்டாடை தயாரிக்கும் ‘Silk Factory’ யைப் பார்க்கச் சென்றோம்.  கிழக்கு சைனாவின் தட்பவெப்ப நிலை மற்றும்  ஈரப்பதம் பட்டு உற்பத்திற்கு ஏற்றதாம்.  அந்தப் பட்டுபுச்சி வளர்ப்பது.   பட்டுநூல் உற்பத்தி, பட்டாடை நெய்யும் முறை இவற்றை விளக்கிக் கூறினார்கள்.  நாம் பட்டுத் துணி வாங்கலாம்.  ஆனால் விலைதான் எக்கச்சக்கம்.

                                                                                                       பயணம் தொடரும்….!

                                                                                                         பகுதி 2 நிறைவு
                                                                                                         திருமதி அடிகளார்
நன்றி சக்தி ஒளி
ஜனவரி & பிப்ரவரி 2009

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here