மகனே! பொருளையும் போகத்தையுமே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். அருளை நாடுவோர் மிகச் சிலரே! இந்தச் சிலரே மிக உயர்ந்த நிலையை பெறுகின்றனர். இதனை விளக்கவே திரிசூலம் ஏந்தியுள்ளேன்.

☆ அந்த சூலத்தைப் பார். கூர்மையான மூன்று முனைகளில் நடுவிலுள்ள ஒன்று மட்டும் மேல்நோக்கி உயர்ந்துள்ளது. மற்ற இரண்டும் கீழ்நோக்கி வளைந்துள்ளன.

☆ ஒரு சிலர்தான் என்னை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள்; அவர்களே உயர்ந்த நிலையைப் பெறுவார்கள். அதனை உணர்த்துவது நடுமுனை. அது மேல்நோக்கியே இருக்கின்றது.

☆ பெரும்பாலானோர் அந்த சூலத்தின் மற்ற இரண்டு முனைகளைப் போன்றவர்கள்; அவர்கள் மனம் கீழ்நோக்கிய படியே உள்ளது.

-அன்னையின் அருள்வாக்கு