உலகம் அமைதி பெற ஆன்மிக மாநாடு நடத்த வேண்டும் என்று தாயிடம் நீங்கள் வேண்டிக் கொள்ள வேண்டும். ஆன்மிக மாநாடுகளும், கலச விளக்கு வேள்விப் பூசைகளும் உங்களுக்காகவே தவிர எனக்காகவோ, அடிகளாருக்காகவோ அல்ல! எந்த அரசும், எல்லோருக்கும் சேர்த்து, எந்த நன்மையும், பாதுகாப்பையும் அளித்து விட முடியாது. உனக்கு நீ தான் பாதுகாப்பு! தீய சக்திகள் பெருகிவிட்டன. தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் காலமும் நெருங்கிவிட்டது. பத்துப் பேர் நல்லவனாக இருந்தால் நூறு பேர் கெட்டவனாக இருக்கிறான். அந்த நூறு ஐநூறு பேரைக் கெட்டவர்களாக மாற்றுகிறார்கள். அந்த நூறு பேரை மாற்ற ஆன்மிகம் தேவை! ஒரே ஒரு கதிர்மணி மூட்டையாவதில்லை. பல கதிர்மணி சேர்ந்தால் தான் மூட்டையாக முடியும். அதுபோல எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக ஆன்மிகப் பணிகளைச் செய்ய வேண்டும்.” அன்னையின் அருள்வாக்கு.

]]>