#சிலருக்கு_அம்மாவின்மேல்_நம்பிக்கை#இருக்கிறது_சிலருக்கு_இல்லை#அம்மாவின்_மேல்_நம்பிக்கை_இருந்தாலும்#கஷ்டங்கள்_வரும்போது_அந்த_நம்பிக்கை#போய்விடுகின்றது_அம்மாவின்_மேல்#நம்பிக்கை_இல்லாதவர்கள்_நன்றாக#வாழ்வதைப்_பார்க்கும்_போது_இந்த#நம்பிக்கை_அவசியமா_என்று_கூட#நினைக்கத்_தோன்றுகிறது_ஏன்?*. ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்ற பிரபஞ்ச விதிப்படி கடவுளை நம்புவதாலும், வழிபாடு செய்வதாலும் அதற்கான பலன்களும் நிச்சயம் உண்டு. அப்படியிருக்க அன்னையை நம்புகிற, வழிபடுகிற உங்களுக்குக் கஷ்டங்கள் வருகின்றன என்றால் ஏதோ காரணங்கள் இருக்க வேண்டும். காரணமில்லாமல் ஒரு காரியம் இல்லை. என்ன காரணம்? 1. உங்கள் முன்னைய ஊழ்வினைப் பயன் உங்களைத் தாக்குகிறது. இந்தப் பிறப்பிலும், பழம்பிறப்பிலும் செய்த பாவ வினைகள் உங்களை உலுக்கி வைக்கிறது. 2. அன்னை,தன் பக்தர்களின் வினை முடிச்சை அவிழ்த்துவிட்டு தன்னுடைய இந்த அவதார காலத்திலேயே கொஞ்சம் அனுபவித்து கழிக்க வைத்து அதன்பின் குணப்படுத்த எண்ணுகிறாள். என் பார்வையிலேயே எல்லாவற்றையும் அனுபவித்துக் கழித்து விடடா மகனே! என்று அன்னை தன் அணுக்கத் தொண்டர் ஒருவர்க்கு இங்கே சொல்லியதுண்டு. 3. தன் பக்தர்களை சோதிக்க அவள் சோதனைகளை வைப்பதுண்டு. யார் யாரெல்லாம் அந்தச் சோதனைகளை அனுபவிக்கிறார்களோ அவர்களெல்லாம் அன்னை மடிமீது கிடந்து துடித்துக்கொண்டு, கையையும், காலையும் உதறிக்கொண்டு அழுகிற குழந்தைகள். அவர்கள் படுவது அடியானாலும் இருப்பது தாயின் மடியில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சோதனையில் அகப்பட்டவர்கள் அனைவரும் அம்மாவிற்கு நெருக்கமானவர்களாக உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று பொருள். கஷ்டங்களையும், சோதனைகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அம்மாவின் மேல் நம்பிக்கை போய்விடுகிறது என்றால் அவள் மடியில் இருந்து உதறிக்கொண்டு கீழே விழுந்து விட்டீர்கள் என்று பொருள். மீண்டும் நீங்களாக தவழ்ந்து தவழ்ந்து ஏறித்தான் மடியில் இடம்பிடிக்க வேண்டும். நம்பாமல் போனாலும் அவளுக்கு நஷ்டமில்லை இன்னும் பல பிறவிகள் எடுத்து அன்னையிடம்தான் மீண்டும் ஓடிவரப் போகிறீர்கள். நீங்கள் நம்பவிட்டால் அம்மா இல்லை என்றாகி விடுமா? சென்னை மாநாட்டில் 1000 பேர்க்கு காட்சி கொடுத்தது பொய்யாகி விடுமா? இந்த அவதார காலத்தில் யார் யார்க்கோ காட்சி கொடுத்து மறைந்தாளே! அவையெல்லாம் பொய்யாகிவிடுமா? மருத்துவமனை சென்று யார்யார்க்கோ நோய் தீரத்து வைத்தாளே அவை பொய்யாகிவிடுமா? நம்புவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. நம்பாமல் இருக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. உங்களுக்கு அவளே கொடுத்த இச்சா சுதந்திரம் அது. #என்னிடம்_நம்பிக்கை_வைப்பவர்கள்_வீண்#போவதில்லை_நல்லதும்_கெட்டதும்#உனக்குள்ளேதான்_இருக்கின்றன. என்ற அன்னை வாக்கால் அறியலாம். நம்முடைய துன்பங்களுக்கும், தவறுகளுக்கும் நாமே காரணமாக இருந்து கொண்டு ஒருசில தடவை கோயிலைச் சுற்றி வந்துவிட்டுக் கஷ்டம் தீரவில்லையே என்று அன்னையை நொந்து கொள்வது அறியாமை. அம்மாவை நம்பாதவர்களெல்லாம் வசதியாக இருக்கிறார்கள் என எண்ணுவது தவறு. இந்த வசதிகளும், இன்பங்களும் பொய்யான இன்பங்கள். இந்த வெளித் தோற்றத்தை வைத்து மயங்காதீர்கள். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தீராத பிரச்சனை என்று ஒன்று உண்டு. இன்ப, துன்பம் என்பது எல்லோருக்கும் பொது.ஆத்திகனுக்கும் பொது.நாத்திகனுக்கும் பொது. உங்களை விட வசதியான மேல்தட்டில் இருக்கிறவர்களைப் பார்க்கிற நீங்கள் உங்களை விட கீழ்தளத்தில் , அடிமட்டத்தில் கிடக்கிறார்களே…உண்ண உணவில்லாமல்…உடுக்க உடையில்லாமல் ஒரு மாற்றுத்துணி இல்லாமல் தவிக்கிறார்களே அவர்களை விட நாம் எவ்வளவோ மேல் என்ற திருப்தி நமக்கு வருகிறதா… இதைத்தான் அன்னை அருள்வாக்கில், #உன்னுடைய_வாழ்க்கையை_அடுத்தவன்#வாழ்க்கையோடு_ஒப்பிட்டுப்பார்க்கக் #கூடாது. #உன்னதமான_வாழ்க்கை_முறையை_நீ#மேற்கொண்டு_வாழ_முயலும்போது#மற்றவர்களைப்_பார்த்து_உன்_வாழ்க்கை#முறையை_மாற்றிக்_கொள்ளக்கூடாது#இறங்கிவிடக்கூடாது. #எந்த_நோக்கத்தோடு_இந்த_உலகத்திற்கு#வந்தாயோ_அதை_நிறைவேற்றவேண்டும் ” என்று கூறுகிறாள். நாம் யாருக்காவது எதையாவது கொடுத்து வைத்தால்தானே நாளைக்கு நமக்கென்று கொடுக்கப்படும். நாத்திகன் பழம்பிறப்பில் யாருக்கோ எதையோ கொடுத்து வைத்தவன் . அந்தப் புண்ணியப் பலனைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அந்தப் புண்ணியப் பலன்கள் காலியாகிக் கிடக்கிற தொண்டர்களை எல்லாம் அன்னை தான, தருமங்களைச் செய்யத் தூண்டுகிறாள். அன்னதானம், ஆடைதானம் செய்யச் சொல்கிறாள். உங்கள் கணக்கில் புண்ணியப் பலன் காலியாக இருப்பதால் அடிக்கடி வற்புறுத்தி உங்களைத் தருமம் பண்ண வைக்கிறாள். உங்கள் புண்ணியக் கணக்கில் வரவுகள் ஏற வேண்டும் என்று கணக்குப் போடுகிறாள். இதையே தன் அருள்வாக்கில், #உன்னிடம்_உள்ள_குறையைத்_தர்மம்#செய்துதான்_நிறைவு_செய்யமுடியும். என்கிறாள். நம் மன்றத் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்? சும்மா சும்மா அம்மா செலவு செய்ய வைக்கிறாள் என நினைக்கிறார்கள். #அம்மா என்று நம்பித் தன்னிடம் வந்து விட்ட ஒருவனைக் கரையேற்ற வேண்டி அவள் போடுகிற கணக்கினை அவள்தான் அறிய முடியும். ஒவ்வொருவனையும் புண்ணியம் செய்ய வைத்து பாவத்தைக் குறைக்கிறாள். சிலருக்குத் துன்ப அனுபவம் தந்து பாவக்கணக்கைக் குறைக்கிறாள். எனவே துன்ப அனுபவங்களால் துவள்கிற போது அம்மாவின் மேல் மேலும் பக்தி வலுப்பட வேண்டும். உங்கள் நம்பிக்கை தளர்கிறது என்றால் அந்த நம்பிக்கை நம்பிக்கையே அல்ல. அது அரைகுறை நம்பிக்கை. அந்த அரைகுறை நம்பிக்கையுடன் அவள் திருவருளை உங்களால் சுவைக்க முடியாது. முன்னேறி வர முடியாது. *#என்னை_முழுவதுமாக_நம்பியவர்களை#எந்த_நிலையிலும்_நான்_கைவிட #மாட்டேன்.* என்பது அன்னை வாக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அவள் படத்தின் முன் அமர்ந்து கொண்டு தனிமையில் வாய்விட்டுச் சொல்லி ஒரு முறை அழுதுவிடுங்கள். படத்தில் உயிர்ப்போடுதான் அவள் இருக்கிறாள். அழுது பிடிவாதம் பண்ணுங்கள். அவளிடம் முழுமையான நம்பிக்கை இருந்தால் உரிமையாகச் சண்டை பிடிக்கலாம். அரைகுறையான நம்பிக்கையோடு சண்டை பிடிக்க உங்களுக்கு உரிமை ஏது? கவலை போக்கும் மருந்தாகக் கடவுளின் திருவடியைத்தான் புகலிடமாகப் பெரியவர்கள் நமக்குக் காட்டியுள்ளார்கள். என்னை_வெறும்_படம்_என்று_எண்ணாதேஅதில்_நான்_உயிரோட்டமாய் #இருக்கிறேன். உன்னுடைய_கஷ்டம்எதுவானாலும்_ஒருசொட்டுக்_கண்ணீர்விட்டுச்_சொன்னாலே_போதும்* #அதைச்_சுக்குநூறாய்_உடைத்து_விடுவேன்.* அன்னையின் அருள்வாக்கு!!!!! ஆசிரியர் சக்திஒளி மே 89
]]>