அருள்திரு_அடிகளார்_அவர்கள்_காட்டும் ஆன்மிகப்_பாதை சில நேரங்களில் ஆன்மிக அனுபவங்கள் நம்ப முடியாதவைகளாகத் தோன்றுகின்றன. குருவுக்கும் சீடனுக்கும் இடையே அந்தரங்கமான ஆன்மிக அனுபவங்கள் ஏற்படுவது உண்டு. பல அனுபவங்கள் வெளி உலகத்திற்குத் தெரியாமலே போய்விடுகின்றன. இன்று தெளிவான ஆன்மிகப் பாதையை அருள்திரு அடிகளார் உலக மக்களுக்குக் காட்டியிருக்கிறார்கள்.   அன்னை_காட்டிய_தெளிவான_சிந்தனை ஒவ்வொரு மனிதனும் குற்றங்களுக்குச் சக்கரவர்த்தியாக இருக்கிறான். நாம் செய்யும் பல காரியங்களில் நன்மை என்னும் சொல்லும்படியாக எதுவும் இல்லை. கோடான கோடி ஜென்மங்களை எடுத்துப் புண்ணிய பாவங்களைச் சம்பாதித்து வாழ்நாளில் நோக்கத்தை தெரிந்து கொள்ளாமல் உலக வாழ்க்கையில் கிடைத்தவைகளை அனுபவித்துச் சுகம் காண வேண்டுமென்ற நோக்கத்தோடு மனிதன் வாழ்கிறான். என்னைப் போன்றவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் அன்னை ஆதிபராசக்தியின் அருளினால் ஒரு தெளிவான ஆன்மிகச் சிந்தனையை அவள் காட்டியதால்தான் நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. *#படிப்படியாக_உணர்ந்தோம்* தொடக்க காலத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் படத்தை எங்கள் இல்லத்தில் வைத்து வழிபட்டு வந்தோம். இது எங்கள் வீட்டின் தொடக்க நிலை. *வீட்டில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.அன்னை வழிகாட்ட அன்னை உருவமே அருள்திரு அடிகளார் உருவம் என அனுபவத்தால் உணர்ந்தோம்.* பின்பு அன்னையின் ஆசியுடன் அருள்திரு அடிகளார் படத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்து வந்தோம். அடிகளார் படத்தைத் தவிர இதர படங்களை வேறு இடத்திற்கு மாற்றி விடுமாறு அன்னை அருளினாள். அருள்திரு அடிகளார் அவர்கள் படத்தை மட்டும் மன உறுதியுடன் வழிபட்டு வந்தோம். இது அன்னை எங்களுக்குக் காட்டிய ஆன்மிக வளர்ச்சியின் இரண்டாவது நிலை. *பின்பு பல அற்புதங்கள் நிகழ்த்தி அருள்திரு அடிகளார் அவர்களின் திருவடியை வழிபட்டு வருமாறு கூறினாள். முதலில் அம்மா! பின்னர் அருள்திரு அடிகளார் அவர்கள்! அதன்பின்னர் திருவடி!* இவ்வாறு படிப்படியாக ஆன்ம முன்னேற்றம் பெற வழி காட்டினாள். புரியவில்லையே_தாயே!: புரியவில்லையே தாயே என ஒருமுறை ஏக்கத்தோடு வேண்டியபோது ஒருநாள் கனவிலே வந்து பின்வருமாறு விளக்கம் அளித்தாள். My son, *Worship a picture as God* *But not God as a picture* *Worship a picture as Mother* *But not mother as a Picture* *Worship a picture as Adigalar* *But not Adigalar as a Picture.* *Worship Adigalar as mother and mother as Adigalar* *Offer flowers to Adigalar’s feet your offerings will adorn my feet.* என்று கூறினாள். இதன் பொருள், #மகனே! *#படத்தை_தெய்வமாக_வழிபடு!* *#ஆனால்_தெய்வத்தை_வெறும்_படமாக#மட்டும்_எண்ணாதே!* *#படத்தை_அன்னையாக_வழிபடு!* *#ஆனால்_அன்னையை_வெறும்_படமாக* *#மட்டும்_எண்ணாதே!* *#அடிகளார்_படத்தை_வழிபடு!* *#ஆனால்_அடிகளாரை_வெறும்_படமாக* *#மட்டும்_எண்ணாதே!* *#அடிகளாரை_அன்னையாகவும்* *#அன்னையை_அடிகளாராகவும்_வழிபடு!* *#அடிகளாரின்_திருவடிகளுக்கு_மலர்களைக்#காணிக்கையாக்கு!* *#உன்னுடைய_அந்தக்_காணிக்கை#என்னுடைய_திருவடிகளை_அலங்கரிக்கும்.* இந்தக் கனவு அனுபவத்திற்குப் பிறகே அடிகளாரும் அன்னையும் ஒன்று என்பதை அறிந்து கொண்டோம். *மற்றொரு_நாள்_கனவில்_விளக்கியது மற்றொரு நாள் கனவில் குருவைப் பற்றி மிக நல்ல விளக்கத்தையும் சலனமில்லா குரு பக்தி வேண்டும் என்னும் கருத்தையும் அன்னை விளக்கினாள். குரு என்ற சொல்லுக்கு அறியாமையைப் போக்கி ஞானத்தை அருள்பவன் என்றும், குணம், குறிகளைக் கடந்தவன் என்றும் பொதுவாக விளக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் குரு என்றால் கருவான_மூலம் என்ற புதிய பொருளை அன்னை உணர்த்தினாள். மூலப்பொருளே_குருவாக_வந்துள்ளது என்று குறிப்பால் உணர்த்தினாள். உலகில் எட்டு வகை குருக்கள் உண்டு.ஆனால் அருள்திரு அடிகளார் அவர்கள் அனைத்திலும் வேறுபட்டவர் என்ற தெளிவையும் அன்னை வெளிப்படுத்தினாள். மகனே! புலி பூனையைப் போல இருக்கும் என்று சொன்னேன்.ஆனால் நீ பூனையைக் கண்டுவிட்டுப் புலி என்று சொல்கிறாயே* என்று அன்னை அருளினாள். லோக குருக்கள் என்பவர்கள் எல்லாம் என் திருவடியின் சுண்டு விரலின் நக விளிம்பின் ஓரம் உள்ள சிறு அணு அளவு ஞானத்தைப் பெற்றுள்ளார்கள். இங்கே_இப்போது_நானே_குருவாக அடிகளார்_வடிவாக_அவதரித்துள்ளேன் என்று தெளிவுபடுத்தினாள். இவ்வாறாக குருவைப் பற்றிய விளக்கம் எங்களுக்குக் கிடைத்தது. பல மாதங்கள் கழித்து அருள்திரு அடிகளார் அவர்களைப் பற்றி மேலும் சில விளக்கங்களை அன்னை அருளினாள். *மகனே!* *அடிகளார் சமயாதீதன்!* *அடிகளார் தத்துவாதீதன்!* *அடிகளார் மனிதாதீதன்!* *அடிகளார் தெய்வாதீதன்!* *அடிகளார் ஆசாரிய அதீதன்!* என்று விளக்கம் கொடுத்தாள். புரியாமல் திகைத்தபோது, *”பானையில் களிமண் உண்டு ஆனால் களிமண்ணில் பானை இல்லை என்ற ஞானிகளின் கருத்தைப் புரிந்து கொள்!*என்றாள் அன்னை.]]>