சிலர் கற்பூரத்தைச் சொல்கிறார்கள். தன்னை அழித்துக் கொள்ளும் பொருட்களையெல்லாம் தியாகத்திற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள். உங்களுக்கு இன்று நான் வேறு ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள் உங்களை அழித்துக் கொள்ளவும் வேண்டாம். கரைத்துக் கொள்ளவும் வேண்டாம். நீங்கள் விளக்குத் தூண்போல இருங்கள்! அது தனக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும். தியாகம் என்றவுடன் தன் வாழ்வு அழிந்துவிடும் என்று பலர் அஞ்சுகிறார்கள். நீ அஞ்ச வேண்டாம். இது புதிய தாரக மந்திரம்!………. நீ வாழ்ந்து கொண்டு மற்றவர்களுக்கும் வாழ வழிகாட்டு! பிறருக்காக வாழ்வது என்பது முன்பே சொல்லப்பட்டதுதான்! அந்த அளவுக்கு நீ இன்னும் பக்குவப்படவில்லையே? உனக்கே வாழத் தெரியவில்லை, பிறகு எப்படி மற்றவர்களுக்கு வாழ்ந்து காட்டப் போகிறாய்? நீயும் வாழக் கற்றுக்கொள்! மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினை. அது போதும். வாழும் முறையை இப்போது நான் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.” அன்னையின் அருள்வாக்கு

]]>